$
Ways To Use Coconut Oil For Lips: முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பது பலரின் விருப்பம் ஆகும். அந்த வகையில், தேங்காய் எண்ணெயின் பயன்பாடு இவை இரண்டிற்கும் பயனுள்ள தீர்வை வழங்குவதாக அமையும். ஏனெனில், தேங்காய் எண்ணெயில் உள்ள பண்புகள் இதன் தொடர்பான அனைத்து வகையான பிரச்சனைகளிலிருந்து விடுபட வைக்கிறது. அந்த வகையில் தேங்காய் எண்ணெய் உதடுகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
குறிப்பாக குளிர்ந்த காலநிலையில் ஏற்படும் வெடிப்பு மற்றும் உலர்ந்த உதடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. அதே சமயம், உதடுகளை ஆரோக்கியமாகவும், இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தை தரவும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது. இதில் உதடுகளுக்கு தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது குறித்தும், அவற்றின் நன்மைகள் சிலவற்றையும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pink lip Tips: உங்க உதடு கருப்பா அசிங்கமா இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!
உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய் தரும் நன்மைகள்
உதடுகளுக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது பல்வேறு வகையான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
- தட்டையான உதடு பிரச்சனையை நீக்கும்
- உதடு வெடிப்பில் இருந்து நிவாரணம்
- உதடு கருமையை நீங்கச் செய்யுதல்
- இயற்கையான இளஞ்சிவப்பு உதட்டைப் பெறுவது

உதடுகளில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது எப்படி?
தேங்காய் எண்ணெயை உதடுகளில் பயன்படுத்துவது உதடுகளை ஆரோக்கியமாகவும், இளஞ்சிவப்பு நிறத்தையும் தருவதாக அமைகிறது.
தேங்காய் எண்ணெய் மட்டும்
உதடுகளில் காணப்படும் இறந்த சருமத்தை நீக்க, பல் துலக்குதலை ஈரப்படுத்தி, உதடுகளில் மெதுவாக தேய்க்க வேண்டும். மிகவும் கடினமாக தேய்க்கக் கூடாது. அதே போல, 10-15 வினாடிகளுக்கு மேல் தேய்க்க கூடாது. அதன் பின், தேங்காய் எண்ணெயை விரல்களின் உதவியுடன் உதட்டில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். இவை உதட்டிற்கு சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Dark Lips: கருப்பான உதடு இளஞ்சிவப்பாக மாற இதை செய்து பாருங்கள்!
தேங்காய் எண்ணெயுடன் கோகோ வெண்ணெய்
கடாய் ஒன்றில் ஒரு சிறிய துண்டு கோகோ வெண்ணெய் சேர்த்து அதை சூடாக்க வேண்டும். இவை உருகும் போது, அதனுடன், 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து லிப் பாம் தயார் செய்யலாம். இவை உதடுகளை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.
ஆலிவ் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணையை தலா ஒரு ஸ்பூன் கலக்க வேண்டும். இதை இரவில் தூங்கும் முன் உதடுகளில் தொடர்ந்து தடவி வரலாம்.

இந்த வழிகளில் தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவுவதன் மூலம், சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதுடன் கருமையான உதடுகளை நீக்க உதவுகிறது. இதன் மூலம் வெடிப்பு மற்றும் கருமையான உதடு பிரச்சனையிலிருந்து விடுபட வைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Dark lips: ஒரே வாரத்தில் உங்க உதடு சிவப்பாகனுமா? ஆமணக்கு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க!
Image Source: Freepik