Dark Lips: புன்னகை என்பது முகத்திற்கு மட்டுமல்ல வாழ்வையே அழகாக மாற்றும் விஷயமாகும். புன்னகையில் முகம் அழகாக இருக்கு உதடுகள் அழகாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். பலரின் உதடுகள் கருமையாக இருக்கும். இதற்கான காரணங்கள் பலருக்கும் தெரியும், பலருக்கும் ஏன் இப்படி இருக்கிறது என்ற காரணமே தெரியாது. உதடுகள் அழகாக இருக்க என்ன செய்யவேண்டும் என இப்போது பார்க்கலாம்.
உதடுகள் கருப்பாக மாற காரணம்
புகைப்பிடித்தால் மட்டும் தான் உதடுகள் கருப்பாக மாறும் என பலர் நினைக்கிறார்கள். உதடுகள் கருப்பாக மாற பல காரணங்கள் இருக்கிறது. புகைப்பிடித்தல், அதிகப்படியான காஃபின் உட்கொள்வது, உடல்நலப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உதடுகள் கருப்பாக மாறுகின்றன. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உதடுகளை எப்படி இளஞ்சிவப்பாக மாற்றலாம் என இப்போது பார்க்கலாம்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆகும். ஒவ்வொரு வீட்டிலும் எலுமிச்சைப்பழம் என்பது கட்டாயம் இருக்கும். இந்த பழத்தின் சாறு உதடுகளை சிவப்பாகவும் பிரகாசமாகவும் மாற்றும். இதற்கு சிறிது எலுமிச்சை சாற்றை எடுத்து உதடுகளில் தடவவும். 15 நிமிடத்திற்கு அப்படியே விட்டுவிட்டு தண்ணீரில் சுத்தம் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சர்க்கரை ஸ்க்ரப்
ஸ்க்ரப் முறை என்பது உதடுகளை சிவப்பாகவும் அழகாகவும் மாற்றும். இதற்கு ஆலிவ் எண்ணெய், தேன் மற்றும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும். இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து நன்றாக கலந்து சில நிமிடம் உதடுகளில் தடவி மசாஜ் செய்யவும். இந்த முறை ஸ்க்ரப் என்பது உதடுகளை சிவப்பாக மாற்ற நன்றாக உதவும்.
பீட்ரூட் சாறு
சிவந்த உதடுகளுக்கு பீட்ரூட் நன்றாக வேலை செய்கிறது. பீட்ரூட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கருமையான உதடுகளை ஒளிரச் செய்கிறது. தூங்க செல்வதற்கு முன் பீட்ரூட் சாற்றை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் விட்டுவிட்டு கழுவவும். இது பெரிய அளவில் உங்களுக்கு உதவும்.
வெள்ளரி
வெள்ளரிகளில் நல்ல திரவ அளவு உள்ளது. இது உங்கள் உதடுகளில் கருமையை குறைக்க உதவுகின்றன. இதற்கு வெள்ளரிகளை துண்டுகளாக வெட்டி உதடுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். இப்படி செய்தால் உதடுகளில் உள்ள கருமை குறைத்து உதடு பளபளப்பாக மாறும்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது கருமையான உதடுகளை பிரகாசமாகவும் அழகாகவும் மாற்றுகிறது. இதற்கு இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயைத் தடவி, இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். பின் காலை எழுந்ததும் கழுவவும். இது உங்களுக்கு பெரிதும் உதவும்.
இதையும் படிங்க: ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்றுவது எப்படி?
உதடுகளின் கருமையை போக்க இது அனைத்தும் உதவும் என்றாலும் உங்களுடைய தாக்கத்தின் தீவிரத்தை உணர்ந்து உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik