கருப்பான உதட்டை பிங்க் நிறத்தில் மாற்ற இந்த ஐந்து பொருள்கள் மட்டும் யூஸ் பண்ணுங்க!

  • SHARE
  • FOLLOW
கருப்பான உதட்டை பிங்க் நிறத்தில் மாற்ற இந்த ஐந்து பொருள்கள் மட்டும் யூஸ் பண்ணுங்க!


Home Remedies To Get Pink Lips Naturally: உதடு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாகும். சிலருக்கு இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறத்தில் உதடு காணப்படும். ஆனால் சிலருக்கு உதடு கருப்பு நிறத்தில் இருக்கலாம். இதில் கருப்பு நிற உதட்டை இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்ற சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். நிறமி உதடுகள், மரபியல், சூரிய ஒளி அல்லது நீரிழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் உதடு கருப்பு நிறத்தில் காணப்படலாம்.

இதனை மறைக்க சிலர் ஒப்பனையை பயன்படுத்துவர். ஒப்பனையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இதை நிரந்தரமாக நீக்க உதவும் வழிகளைத் தேடலாம். இதற்கு சிலர் கடைகளில் விற்பனை செய்யப்படும் லிப் பாம் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்துவர். இது சில சமயங்களில் உதடு வழியாக வாயின் உட்புறம் செல்வதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இதனைத் தவிர்க்க சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம். இதில் கருப்பு நிற உதடு இளஞ்சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்க உதவும் சில வழிகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dark lips: ஒரே வாரத்தில் உங்க உதடு சிவப்பாகனுமா? ஆமணக்கு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க!

கருப்பு நிற உதட்டை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதற்கான வழிகள்

உதட்டை இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

சர்க்கரை மற்றும் தேன்

இளஞ்சிவப்பு நிற உதடு பெற விரும்புவர்கள் சர்க்கரை மற்றும் தேன் கலவையைப் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதன் மூலம் நிறமாற்றத்திற்கு பங்களிக்கும் இறந்த சரும செல்களை அகற்றுகிறது. இதற்கு சர்க்கரை மற்றும் தேன் கலந்து பேஸ்ட்டை உருவாக்குவதன் மூலம் இயற்கையான ஸ்க்ரப்பை உருவாக்கலாம். இந்த கலவையை உதடுகளில் வட்ட இயக்கத்தில் சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இதை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை செய்து வருதன் மூலம் உதடுகள் மென்மையாகவும், இளஞ்சிவப்பு நிறத்திலும் தோற்றமளிக்கும்.

எலுமிச்சைச் சாறு

உதடு நிறமாற்றத்திற்கான மிகவும் பிரபலமான தீர்வுகளில் ஒன்றாக எலுமிச்சைச் சாறு அமைகிறது. எலுமிச்சையானது ஒரு இயற்கையான ப்ளீச்சிங் முகவராக செயல்படுகிறது. இதன் காரணமாக கருமையான உதடுகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றதாகும். இதற்கு படுக்கைக்கு முன்னதாக உதடுகளில் எலுமிச்சைச் சாற்றைத் தடவ வேண்டும். அதன் பிறகு காலையில் கழுவி விடலாம். இவ்வாறு சில வாரங்களுக்கு எலுமிச்சைச் சாற்றைப் பயன்படுத்துவதன் மூலம் உதடு ஈரப்பதமாக இருப்பதுடன், நிறமாற்றத்தை அடையவும் உதவுகிறது.

கற்றாழை

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழை சிறந்த இயற்கையான தீர்வாக அமைகிறது. இந்த இனிமையான பண்புகளுக்குப் பெயர் பெற்ற கற்றாழையானது உதடு நிறமியைக் குறைக்க உதவுகிறது. இதற்கு புதிய கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு அதை உதடுகளில் தடவ வேண்டும். இதை 15 நிமிடங்கள் வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வது உதடுகளை ஒளிரச் செய்வதுடன், உதடுகளை நீரேற்றமாக வைக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Dark Lips: கருப்பான உதடு இளஞ்சிவப்பாக மாற இதை செய்து பாருங்கள்!

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் ஆனது இனிமையான பண்புகளுக்குப் பெயர் பெற்றதாகும். இதன் நீரேற்றமிக்க பண்புகள் உதடுகளின் நிறமாற்றத்திற்கு சிறந்த தேர்வாகும். வெள்ளரிக்காயின் குளிர்ச்சி மற்றும் ஒளிரும் மிக்க பண்புகள் உதடு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே தினமும் ஒரு சில நிமிடங்களுக்கு ஒரு வெள்ளரிக்காய் துண்டை உதடுகளின் மேல் தேய்க்க வேண்டும். இந்த சாறுகள் உதடுகளின் நிறமிகளை ஒளிரச் செய்து உதடுகளுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் உள்ள பண்புகள் நிறமாற்றம் அடைந்த உதடுகளுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆழமாக நீரேற்றத்தைத் தருவதுடன், உதடுகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இதற்கு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக, சிறிது தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி இரவு முழுவதும் விட்டு விட வேண்டும். இவை உதடுகளை ஒளிரச் செய்வதுடன் கருமையை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் காரணிகளிலிருந்து பாதுகாக்கவும், ஈரப்பதமாக வைக்கவும் உதவுகிறது.

இந்த வகை வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் நிறமாற்றம் அடைந்த உதடுகளை இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாற்ற முடியும். மேலும் இவை உதடுகளை நீரேற்றமாக வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Pink Lips: உங்க உதடு கருப்பா இருக்கா? இளஞ்சிவப்பு உதட்டை பெற 1 துண்டு பீட்ரூட் போதும்!

Image Source: Freepik

Read Next

Dark Feets: உங்க கால் கருப்பா அசிங்கமா இருக்கா? பளபளப்பான பாதத்தை பெற இதை செய்யுங்க!

Disclaimer