Itchy Scalp Remedies: உச்சந்தலை அரிப்பால் அவதியா? இந்த ஐந்து பொருள்கள் போதும்!

  • SHARE
  • FOLLOW
Itchy Scalp Remedies: உச்சந்தலை அரிப்பால் அவதியா? இந்த ஐந்து பொருள்கள் போதும்!


Home Remedies For Itchy Scalp: மாறிவரும் பருவ கால மாற்றத்தினால், பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, பருவகால மாற்றத்தின் முடி பராமரிப்பு என்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், இந்த காலகட்டத்திலேயே முடி உதிர்தல், முடி வறட்சி, உச்சந்தலை அரிப்பு, பிளவு முனை மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் நிகழலாம். இதில் உச்சந்தலை அரிப்பு பலரும் தாங்க முடியாத ஒன்றாகவும், அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமையலாம்.

இதற்கு சிலர் சந்தைகளில் கிடைக்கும் விலையுயர்ந்த பொருள்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், சில சமயங்களில் இது போன்ற பொருள்களில் இரசாயனங்கள் கலந்திருக்கலாம். இதனால் சில பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனினும், இந்த பக்க விளைவுகளைத் தவிர்க்கவும், உச்சந்தலை அரிப்பிலிருந்து விடுபடவும் சில இயற்கையான வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம். இதில் உச்சந்தலை அரிப்பை நீக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்:

மழைக்காலத்தில் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

உச்சந்தலை அரிப்பிலிருந்து விடுபட வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதற்கு முன்னதாக, அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஒட்டுண்ணி காரணமாக

பருவமழைக் காலத்திலேயே பேன்கள், பூச்சிகள் போன்றவை தலையில் அதிகம் சேரும். அதிலும் இது போன்ற பிரச்சனை கொண்டவர்கள் பயன்படுத்திய சீப்பு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தும் போது இது மிக வேகமாகப் பரவுகிறது. இதனால் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படும்.

பொடுகு

சில சமயங்களில் மழைக்காலத்தில், தலையில் ஏற்படும் அதிக ஈரப்பதம் காரணமாக செபாசியஸ் சுரப்பிகள் அதிக வீரியம் அடையும். இதனால் மந்தமான தோல் செல்கள் உருவாகலாம். இது செதில்களாக மாறி பொடுகை ஏற்படுத்தலாம். இதனால் அரிப்பு உண்டாகும்.

செபொர்ஹெக் டெர்மடிடிஸ்

செபொர்ஹெக் டெர்மடிடிஸ் என்பது ஒரு நாள்பட்ட தோல் நிலையைக் குறிக்கிறது. இது அழுக்கு மற்றும் மாசுபட்ட மழைநீரில் நனையும் போது ஏற்படுகிறது. இதனால் உச்சந்தலையில் சிவப்பு திட்டுகள் தோன்றி, தொடர்ந்து அரிப்பு உண்டாகலாம்.

வீக்கம்

முன்னதாகவே இருக்கக் கூடிய தோல் பிரச்சனைகளின் வீக்கத்தால் சொரியாசிஸ் போன்ற தோல் பிரச்சினைகள் மழைக்காலங்களில் மோசமாக்கலாம். இதனால் உச்சந்தலையில் அதிக திட்டுகள் ஏற்பட்டு அரிப்பை மோசமாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Amla Hair Oil: இவ்ளோ சின்ன வயசுல நரைமுடியா? இந்த ஒரு ஆயில் போதும்!

உச்சந்தலையில் ஏற்படும் அரிப்புக்கான வீட்டு வைத்தியங்கள்

உச்சந்தலை அரிப்பை வீட்டு வைத்தியங்களால் குணப்படுத்த முடியாது. இதில் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பை நீக்க உதவும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

தேங்காய் எண்ணெய்

இது உலர்ந்த உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவுகிறது. மேலும், இது செதில்கள் மற்றும் அரிப்பு சிவப்பு திட்டுகள் தோன்றுவதைத் தடுக்க உதவுகிறது. இதற்கு தேங்காய் எண்ணெயில் காணப்படும் லாரிக் அமிலம் சிறந்த தீர்வாக அமைகிறது. இது நிறைய நுண்ணுயிர் பண்புகளைக் கொண்டுள்ளது.

எப்படி பயன்படுத்துவது?

  • சுத்தமான தேங்காய் எண்ணெயை சிறிதளவு எடுத்துக் கொண்டு சூடாக்க வேண்டும்.
  • இதை ஒரு சிறிய பருத்திப் பஞ்சைப் பயன்படுத்தி, உச்சந்தலையில் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
  • பின் விரல்களால் உச்சந்தலை மற்றும் தலைமுடியில் எண்ணெயைச் சேர்த்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
  • இதை சில மணி நேரங்கள் அல்லது ஓரிரவில் வைத்து, சிறிது மென்மையான ஷாம்பூ கொண்டு கழுவி விடலாம்.

எலுமிச்சை சாறு

உச்சந்தலையில் ஏற்படும் அரிப்புக்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்று எலுமிச்சைச் சாறு ஆகும். இது நம் வீடுகளில் எளிதாகக் கிடைக்கும் ஒன்றாகும். இந்த எலுமிச்சைச் சாற்றைப் பயன்படுத்தி அழுக்கு மற்றும் இறந்த செல்களை அழிக்கலாம். மேலும் எலுமிச்சைச் சாற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்புகளை நீக்க உதவுகிறது.

பயன்படுத்துவது எப்படி?

  • முதலில் அரை கப் அளவிலான தண்ணீரில் 2 முதல் 3 சொட்டுகள் அளவிலான எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்க வேண்டும்.
  • பின் பருத்தி பஞ்சு ஒன்றினால் இந்த எலுமிச்சைச் சாற்றை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் அப்படியே விட்டு விடலாம்.
  • அதன் பிறகு இதை லேசான ஷாம்பு கொண்டு கழுவி விடலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரில் பூஞ்சை எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் மாலிக் அமிலம் போன்றவை உச்சந்தலை அரிப்பிலிருந்து நிவாரணம் தருகிறது.

எப்படி பயன்படுத்தலாம்?

  • கால் ஸ்பூன் அளவிலான ஆப்பிள் சைடர் வினிகரை 3/4 வது தண்ணீரில் கலக்க வேண்டும்.
  • இந்தக் கலவையை உச்சந்தலையில் தடவி சில நிமிடங்கள் வைத்திருக்கலாம்.
  • அதன் பிறகு இதை லேசான ஷாம்பூ கொண்டு கழுவி விடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Mask for Curly Hair: சுருள் முடிக்கு இனி கவலை வேணாம்! இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க

வேப்ப எண்ணெய்

வேம்பு ஆனது பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே வேம்பு மழைக்காலத்தில் தலையில் ஏற்படும் அரிப்பை நீக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • சிறிது தேங்காய் எண்ணெயில் 4-5 சொட்டு வேப்பெண்ணெய்ச் சேர்க்க வேண்டும்.
  • இதை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
  • அதன் பின் லேசான ஷாம்பூ கொண்டு தலைமுடியை கழுவலாம்.

தேயிலை எண்ணெய்

டீ ட்ரீ ஆயிலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த பண்புகள் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • தேயிலை மர எண்ணெயை 5 முதல் 6 சொட்டுகள் எடுத்து, அதை உச்சந்தலையில் தடவ வேண்டும்.
  • இந்த எண்ணெயைக் கொண்டு தலைமுடிக்கு மசாஜ் செய்து சில மணி நேரம் அப்படியே வைக்கலாம்.

பெப்பர்மின்ட் எண்ணெய்

தலையில் அரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க சிறந்த எண்ணெயாக பெப்பர்மின்ட் எண்ணெய் அமைகிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் பொடுகை போக்க உதவுகிறது.

எப்படி பயன்படுத்துவது

  • முதலில் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் பெப்பர்மின்ட் எண்ணெயைக் கலக்க வேண்டும்.
  • பிறகு இந்த எண்ணெயை உச்சந்தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் அப்படியே வைக்கலாம்.
  • அதன் பின், குளிர்ந்த நீரில் தலைமுடியைக் கழுவி விடலாம்.

இவ்வாறு இயற்கையான முறையில் மழைக்காலங்களில் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பை நீக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Clove Oil for Hair: கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மாயாஜால எண்ணெய்! வெறும் இரண்டே பொருள்கள் போதும்

Image Source: Freepik

Read Next

Hair Mask for Curly Hair: சுருள் முடிக்கு இனி கவலை வேணாம்! இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க

Disclaimer