How To Use Clove Oil For Hair Growth: முடி பராமரிப்பு என்பது பலருக்கும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. ஏனெனில், மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக முடி சம்பந்தமான பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் ஒன்றாகவே முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது இளம் வயதிலேயே முன் கூட்டிய வயதான தோற்றத்தை அளிக்கிறது. இதற்கு சந்தையில் விற்கப்படும் பல பொருள்களை வாங்கி முடி வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றில் இரசாயனங்கள் கலந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதன்படி, சிறந்த ஆயுர்வேத முறைகளைப் பற்றிக் கூறும் போது, முடி வளர்ச்சிக்கு கிராம்பு எண்ணெய் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில், கிராம்பு எண்ணெயில் யூஜெனால் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது தவிர, கிராம்பு எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இந்த கிராம்பு எண்ணெயை தலைமுடியில் தடவுவதன் மூலம் உச்சந்தலை தொற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். இதில் முடி வளர்ச்சிக்கு கிராம்பு எண்ணெயின் நன்மைகளையும், அதை எவ்வாறு சரியாகப் பயன்படுத்தலாம் என்பதையும் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Onion Juice For Hair: முடி பொசு பொசுனு வளர வெங்காயச் சாற்றை தலைக்கு இப்படி யூஸ் பண்ணுங்க
முடி வளர்ச்சிக்கு கிராம்பு எண்ணெய் தயாரிக்கும் முறை
தலைமுடி வளர்ச்சிக்கு கிராம்பு எண்ணெயை எளிதாக வீட்டிலேயே எவ்வாறு தயார் செய்யலாம் என்பதைக் காணலாம்.
தேவையானவை
- பாதாம் எண்ணெய்
- கிராம்பு

செய்முறை
- முதலில் கிராம்புகளை அரைத்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
- பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து பாதாம் எண்ணெயை குறைந்த தீயில் சூடாக்க வேண்டும்.
- எண்ணெய் சூடான பிறகு, அதில் கிராம்பு பொடியைச் சேர்க்க வேண்டும்.
- இவ்வாறு சேர்த்த பிறகு, கிராம்பு சாறு எண்ணெயுடன் நன்கு கலந்து விடும். பின் அடுப்பை அணைத்து விடலாம்.
- பிறகு இந்த கலவையை ஒரு கொள்கலனில் நிரப்பி, 1 முதல் 2 வாரங்களுக்கு கொள்கலனை வைக்க வேண்டும்.
- இந்தக் கொள்கலனை அவ்வப்போது அசைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
- அதன் பிறகு, எண்ணெயை வடிகட்டி தலைமுடியில் தடவ வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Oiling Before Shampooing: ஷாம்பு போடும் முன் முடிக்கு எண்ணெய் தடவுவது நல்லதா? என்னனு தெரிஞ்சிக்கோங்க
முடி வளர்ச்சிக்கு கிராம்பு எண்ணெய் பயன்படுத்துவது எப்படி?
- கிராம்பு எண்ணெயை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
- பின் தலைமுடியில் தடவிய பிறகு 30 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்
- அதன் பிறகு லேசான ஷாம்பூ கொண்டு முடியைக் கழுவலாம்.
- இந்த எண்ணெயை வாரத்திற்கு 2 முதல் 3 முறை தலைமுடியில் தடவுவதன் மூலம் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

முடிக்கு கிராம்பு எண்ணெய் தரும் நன்மைகள்
- தலைமுடிக்கு கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துவதால் முடியின் மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது. மேலும், முடி உதிர்தலில் இருந்து நிவாரணம் தருகிறது.
- கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துவதால் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. இது புதிய முடி வளர்வதை ஊக்குவிக்கிறது.
- இந்த எண்ணெய் முடிக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, முடி மென்மையாக மற்றும் அடர்த்தியாக மாற உதவுகிறது.
- கிராம்புகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகு போன்ற உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளிலிருந்து விடுபட உதவுகிறது.
- தலைமுடி விரைவில் நரைத்துப்போகும் நபர்களுக்கு கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துவது சிறந்த தேர்வாக அமைகிறது. இதன் மூலம் வெள்ளை முடி பிரச்சனைகள் நீங்கும்.
- கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையை நீக்கலாம். மேலும், இந்த எண்ணெய் அரிக்கும் தோலழற்சி மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இவ்வாறு தலைமுடிக்கு கிராம்பு எண்ணெய் பயன்படுத்துவது தலைமுடி வளர்ச்சியை ஆதரிப்பதுடன், பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Fenugreek Oil For Hair: ஒன்றா இரண்டா பல நன்மைகளை அள்ளித் தரும் வெந்தய எண்ணெய்! எப்படி தயாரிப்பது?
Image Source: Freepik