Fri Sep 11, 2026 | 11:15 PM IST

Doctor Verified

வெறும் இரண்டே பொருள்கள் போதும்.. முடி கொட்டாம இருக்க வீட்டிலேயே ஹேர் ஸ்ப்ரேயை இப்படி தயார் செய்யுங்க

Natural hair spray recipe for preventing hair fall at home: மக்கள் பெரும்பாலும் முடி உதிர்தல் மற்றும் உடைதல் பிரச்சனையால் மிகவும் அவதியுறுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், முடியை ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வைத்திருக்க வீட்டிலேயே ஹேர் ஸ்ப்ரே தயார் செய்யலாம். இதில் ஹேர் ஸ்ப்ரேயின் நன்மைகள் மற்றும் அதை உருவாக்கும் முறைகள் குறித்து காண்போம்.

How to make homemade hair spray for reducing hair fall: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி உதிர்தல், உடைதல் மற்றும் வறட்சி போன்ற பல முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், முடி பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெற விரும்புபவர்கள் தங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அதன் படி, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மற்றும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் பயிற்சிகளை செய்வது என மக்கள் பெரும்பாலும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த முறைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. ஆனால், முடி பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற, முடியை ஊட்டமளிப்பதுடன், சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும். இவை முடி ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், முடி பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டரால் செய்யப்பட்ட ஹேர் ஸ்ப்ரேயைப் பயன்படுத்துவது மிகுந்த நன்மை பயக்கும்.

யோகா, இயற்கை மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் ஆயுர்வேத நிபுணர், ஜெய்ப்பூர், பாபுநகரில் உள்ள மேவார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் கிரண் குப்தா அவர்கள் வீட்டிலேயே முடிக்கு ஹேர் ஸ்ப்ரே செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: ரோஸ்மேரி வாட்டர் vs ரோஸ்மேரி எண்ணெய்.. முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது.? எப்படி யூஸ் பண்ணனும்.?

கற்றாழை ரோஸ்வாட்டர் ஹேர் ஸ்ப்ரேயின் நன்மைகள்

டாக்டர் கிரண் குப்தாவின் கூற்றுப்படி, கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டரில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹேர் ஸ்ப்ரேயைப் பயன்படுத்துவது பல்வேறு முடி பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. ரோஸ் வாட்டரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் கற்றாழை ஜெல்லில் வைட்டமின் ஈ, சி, ஏ, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் அனைத்துமே முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

முடி உதிர்வைத் தடுக்க

கற்றாழை ஜெல்லில் வைட்டமின் ஈ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் உள்ளது. கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் ஹேர் ஸ்ப்ரேயைப் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம். மேலும், வேர்களிலிருந்து முடியை ஊட்டமளிக்கவும், அதில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் இவை பெரிதும் உதவுகின்றன.

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க

ரோஸ் வாட்டர் மற்றும் கற்றாழை ஜெல் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஹேர் ஸ்ப்ரே வைட்டமின் ஈ, சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் போன்றவற்றை நல்ல அளவில் கொண்டுள்ளது. இதைப் பயன்படுத்துவது வேர்களில் இருந்து முடியை வலுப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற

ரோஸ் வாட்டர் மற்றும் கற்றாழை ஜெல் ஸ்ப்ரே பயன்படுத்துவது முடியை இயற்கையாகவே ஈரப்பதமாக்க உதவுகிறது. மேலும் இவை ஈரப்பதத்தை தக்கவைத்து, முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. இது தவிர, முடியின் வறட்சியை நீக்கவும் இது உதவுகிறது.

உச்சந்தலை மற்றும் முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்க

கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவது உச்சந்தலையில் இருந்து இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. இதன் மூலம், உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு, வீக்கம், எரிச்சல் மற்றும் பொடுகைக் குறைக்கலாம். இது முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Onion Hair Spray: தலைமுடி அடர்த்தியா வளர… வெங்காய தோலை இப்படி பயன்படுத்தி பாருங்க!

ரோஸ் வாட்டர் மற்றும் கற்றாழை கொண்டு ஹேர் ஸ்ப்ரே செய்வது எப்படி? (How to make aloe vera and rose water hair spray at home)

  • முதலில் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை அரை கப் ரோஸ் வாட்டருடன் கலக்க வேண்டும்.
  • இப்போது இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு முடியில் தெளிக்கலாம்.
  • பின்னர் லேசான கைகளால் உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.
  • இது தவிர, இதில் விரும்பினால் அரை டீஸ்பூன் தேன் சேர்க்கலாம்.
  • தேன் சேர்த்த பிறகு, இந்த ஸ்ப்ரேயைப் பயன்படுத்திய அரை மணி நேரத்திற்குப் பின் லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி முடியைக் கழுவ வேண்டும்.

இந்த ஹேர் ஸ்ப்ரேயைப் பயன்படுத்துவது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும், உச்சந்தலையை எந்த வகையான தொற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும், தேனில் ஈரப்பதமூட்டும் பண்புகள் காணப்படுகின்றன, இவை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அது தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவும் உதவுகிறது.

முடிவுரை

ரோஸ் வாட்டர் மற்றும் கற்றாழை ஜெல் ஸ்ப்ரே பல பண்புகளைக் கொண்டுள்ளது. இதைப் பயன்படுத்துவது முடியை ஈரப்பதமாக வைத்திருக்கவும், உச்சந்தலையில் எரிச்சலைக் குறைக்கவும், அரிப்பைக் குறைக்கவும், முடி உதிர்தலைத் தடுக்கவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வேர்களுக்கு ஊட்டமளிக்கவும், முடியின் வறட்சியை நீக்கவும், முடியில் ஈரப்பதத்தை பராமரிக்கவும், முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.

மேலும், முடி தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் அதைப் புறக்கணிக்கக்கூடாது. உடனடியாக, ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: கொத்து கொத்தா முடி கொட்டுதா? படிகாரக் கல்லை இப்படி யூஸ் பண்ணி பாருங்க

Image Source: Freepik

Read Next

எந்தெந்த எண்ணெயைத் தொப்புளில் தேய்ப்பது என்னென்ன நன்மைகளைத் தரும்? சரியான வழி எது? மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 21, 2025 21:44 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content