கொத்து கொத்தா முடி கொட்டுதா? படிகாரக் கல்லை இப்படி யூஸ் பண்ணி பாருங்க

Is alum good for hair growth: இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கக்கூடிய முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகிறது. முடி உதிர்வை நிறுத்தி, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு படிகாரக்கல் பெரிதும் உதவுகிறது. இதில் முடி வளர்ச்சிக்கு படிகாரக்கல் எவ்வாறு உதவுகிறது மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
கொத்து கொத்தா முடி கொட்டுதா? படிகாரக் கல்லை இப்படி யூஸ் பண்ணி பாருங்க

How to use alum for hair growth: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இந்த வரிசையில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். பொடுகு, அரிப்பு, முடி உதிர்வு, நுனிமுடி பிளவு மற்றும் முதுமை அறிகுறிகளான நரைமுடி பிரச்சனை போன்ற பெரும்பாலான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட சிலர் கடைகளில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இவை சில சமயங்களில் விளைவுகளை மேலும் மோசமாக்கலாம்.இந்நிலையில், சிறந்த இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதே நல்லது. அவ்வாறு முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட பல்வேறு வீட்டு வைத்தியங்கள் உதவுகிறது. இந்த வரிசையில் படிகாரக்கல்லும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஃபிட்காரி அல்லது படிகாரக்கல்

ஃபிட்காரி அல்லது படிகாரம் அல்லது ஆலம் (Alum) என்பது இந்தியாவில் மக்கள் தண்ணீரை சுத்தம் செய்தல், இரத்தப்போக்கை நிறுத்துதல், மற்றும் ஆஃப்டர் ஷேவ் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு நீண்ட காலமாக பயன்படுத்தக்கூடிய ஒரு வெள்ளை படிகமாகும். இவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்களைக் கொண்டுள்ளது. இவை கிருமிகளை அழிக்கவும், சருமத்தை சிறிது இறுக்கமாக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: ராக்கெட் வேகத்தில் கருகருன்னு முடி வளர... வெறும் 10 ரூபாய்க்கு இந்த ஒரு விதையை வாங்கி பயன்படுத்தினால் போதும்...!

முடி ஆரோக்கியத்திற்கு படிகாரக்கல்

உண்மையில் படிகாரக்கல் முடி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை பொடுகு, அரிப்பு மற்றும் முடி உதிர்தலை நிறுத்த உதவுகிறது. இது முடியை ஒரே இரவில் வளரச் செய்யாது என்றாலும், இதை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்கலாம். இவை முடி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் முடிக்கு படிகாரக்கல் பயன்படுத்தும் முறை குறித்து காணலாம்.

தலைமுடிக்கு படிகாரக்கல்லை பயன்படுத்துவது எப்படி?

படிகாரக்கல் நீர் கழுவுதல்

  • இது எளிய வழியாகும். இதில் ஒரு சிறிய அளவிலான படிகாரக்கல் அல்லது அல்லது ஒரு டீஸ்பூன் அளவிலான ஃபிட்காரி பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இது கரையும் வரை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலக்கலாம்
  • ஷாம்பு செய்த பிறகு, இந்த தண்ணீரை உச்சந்தலையில் ஊற்ற வேண்டும்
  • இதை 5-10 நிமிடங்கள் அப்படியே வைத்து, பிறகு கழுவலாம் அல்லது உலர விடலாம்
  • இதை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்வதன் மூலம் தலையில் காணப்படும் பாக்டீரியாக்களை அழித்து உச்சந்தலையை குளிர்வித்து பொடுகை நீக்க உதவுகிறது.

படிகாரக்கல் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்

  • இந்த முறையில், 1 டீஸ்பூன் ஃபிட்காரி பவுடரை 2 டேபிள் ஸ்பூன் சூடான தேங்காய் எண்ணெயில் சேர்க்க வேண்டும்
  • இந்தக் கலவையை உச்சந்தலையில் மசாஜ் செய்து 30–45 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்
  • பின்னர் வழக்கம் போல் ஷாம்பூவுடன் கழுவலாம்
  • இதை வாரம் ஒரு முறை பயன்படுத்துவது நல்லது. இதில் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது முடிக்கு ஊட்டமளிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 4 பொருள்கள் போதும்.. நீளமான அடர்த்தியான முடிக்கு கறிவேப்பிலை எண்ணெயை இப்படி செய்யுங்க

படிகாரக்கல் மற்றும் ரோஸ் வாட்டர் ஸ்ப்ரே

  • 1 டீஸ்பூன் அளவு ஃபிட்காரி பவுடரை 3-4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்க வேண்டும்
  • இந்தக் கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் சேர்க்க வேண்டும். இதை உச்சந்தலையில் தெளித்து மெதுவாக மசாஜ் செய்யலாம்
  • இதை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம். முடிக்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது உச்சந்தலையை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

குறிப்பு

படிகாரக்கல்லை உச்சந்தலையில் நேராகப் பயன்படுத்தக்கூடாது. இது வலிமையானது மற்றும் உலர்த்தும் பண்புகளைக் கொண்டதாகும்.

இதைப் பயன்படுத்துவதற்கு முன்னால் பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். இதற்கு காதுக்குப் பின்னால் சிறிது நேரம் வைத்து, எதிர்வினை வருகிறதா என்பதை சரிபார்க்கலாம். இதை ஒரு நாள் காத்திருந்து பார்க்க வேண்டும்.

நன்மை தருவதாக இருப்பினும், இதை வாரத்திற்கு அதிகபட்சம் ஒன்றிரண்டு முறை பயன்படுத்தலாம். அதிகம் பயன்படுத்துவது உச்சந்தலையை வறட்சியடையச் செய்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Alum Benefits: படிகாரத்தின் அழகு ரகசியம் இது தான்!

Image Source: Freepik

Read Next

இந்த 4 பொருள்கள் போதும்.. நீளமான அடர்த்தியான முடிக்கு கறிவேப்பிலை எண்ணெயை இப்படி செய்யுங்க

Disclaimer