இந்த 4 பொருள்கள் போதும்.. நீளமான அடர்த்தியான முடிக்கு கறிவேப்பிலை எண்ணெயை இப்படி செய்யுங்க

How to prepare curry leaves oil at home: தலைமுடி வேகமாகவும் கருப்பாகவும் வளர வீட்டிலேயே கறிவேப்பிலை எண்ணெய் தயார் செய்யலாம் இதில் கறிவேப்பிலை எண்ணெய் தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்
  • SHARE
  • FOLLOW
இந்த 4 பொருள்கள் போதும்.. நீளமான அடர்த்தியான முடிக்கு கறிவேப்பிலை எண்ணெயை இப்படி செய்யுங்க


How to make curry leaves oil for hair growth: இன்றைய பரபரப்பான மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, நம் உடலில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதில் எளிதில் அனைவரும் காணக்கூடிய பொதுவான பாதிப்புகளில் ஒன்றாக முடி உதிர்தல் அமைகிறது. இதனைத் தவிர்க்க இரசாயனம் உட்செலுத்தப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. எனவே தான் சிலர் முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு இயற்கையான முறைகளைக் கையாள்கின்றனர்.

அந்த வகையில் முடி பிரச்சனைகளுக்கு இயற்கை தேர்வாக விளங்கும் கறிவேப்பிலையைப் பயன்படுத்தலாம். இது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். கறிவேப்பிலை அதன் வளமான ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்திற்காக நன்கு அறியப்பட்டதாகும். இதை நேரடியாக உட்கொள்வதன் மூலமும் முடி வளர்ச்சியைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade hair oil: நீளமா, அடர்த்தியா, கருப்பான முடிக்கு வீட்டிலேயே தயாரித்த இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க! டாக்டர் தரும் டிப்ஸ்

கறிவேப்பிலை எவ்வாறு முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது?

இது நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்ததாகும். இவை பாக்டீரியாக்களுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. மேலும் கறிவேப்பிலையில் உள்ள புரதங்கள், பீட்டா கரோட்டின் மற்றும் ஆல்கலாய்டுகள் போன்றவை உச்சந்தலையை ஈரப்பதமாக்கி, இறந்த முடி நுண்குழாய்களை அகற்றுகிறது.

இவை முடியின் இயற்கையான தொனியைப் பராமரிக்க உதவுகிறது. மேலும் இவை முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி மெலிவதைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் வலுவான, ஆரோக்கியமான மயிர்க்கால்களைப் பெற வீட்டிலேயே கறிவேப்பிலை எண்ணெயைத் தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.

கறிவேப்பிலை எண்ணெய் தயார் செய்வது எப்படி?

தேவையானவை

  • தேங்காய் எண்ணெய் - 1 கப்
  • புதிய நெல்லிக்காய் - 1/4 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
  • கறிவேப்பிலை - 1/4 கப் (கழுவி உலர்த்தப்பட்டது)
  • வெந்தய விதைகள் - 1 தேக்கரண்டி

முறை 1

படி 1: ஒரு தடிமனான அடிப்பகுதி கொண்ட பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு, நெல்லிக்காய், தேங்காய் எண்ணெய் மற்றும் வெந்தய விதைகளைச் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் ஆவியாகும் வரை குறைந்த தீயில் மெதுவாக கொதிக்க வைக்க வேண்டும்.

படி 2: இவை அனைத்தும் ஈரப்பதம் நீங்கியதும், நெல்லிக்காய் மற்றும் பிற மூலிகைகள் கீழே படிந்து பழுப்பு நிறமாக மாறுவதைக் காணலாம். இப்போது அடுப்பை அணைத்து, மூலிகைகளை எண்ணெயில் ஒரு நாள் விட வேண்டும்.

படி 3: மறுநாள், எண்ணெயை ஒரு கண்ணாடி ஜாடியில் வடிகட்டி, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: தரையைத் தொடும் அளவுக்கு முடி வேணுமா? இதோ வீட்டிலேயே செய்யப்பட்ட இந்த ஹெர்பல் ஆயிலை யூஸ் பண்ணுங்க

முறை 2

படி 1: புதிய மூலிகைகளுக்குப் பதிலாக, உலர்ந்த நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலையை எள் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

இதில் குளிர் அழுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம். ஏனெனில் இவை ஊட்டச்சத்துக்களை அகற்றாமல், மற்ற அதிக நன்மைகளையும் வழங்குகிறது.

இவ்வாறு வடிகட்டிய எண்ணெயை ஒரு ஜாடியில் சேமித்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவதன் மூலம் நன்மைகளைப் பெறலாம்.

கறிவேப்பிலை எண்ணெயின் நன்மைகள்

பொடுகு நீங்க

கறிவேப்பிலையில் பல்வேறு பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இந்த பண்புகள் நிறைந்த கறிவேப்பிலை எண்ணெயைக் கொண்டு முடி மசாஜ் செய்வதன் மூலம் பொடுகு மற்றும் சிறிய உச்சந்தலை தொற்றுகளை எதிர்த்துப் போராடலாம்.

முடி உதிர்வைத் தடுக்க

கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடியின் மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதன் மூலம் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது. இவை உச்சந்தலைக்கு ஊட்டத்தையும் தருகிறது. இந்த முறையான சூடான எண்ணெய் மசாஜ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி உதிர்வைத் தடுக்கிறது.

முன்கூட்டிய நரைமுடியைத் தவிர்க்க

முன்கூட்டிய நரைமுடி பிரச்சனையைத் தவிர்க்க கறிவேப்பிலை எண்ணெய் பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவை மெலனின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் வலுவான முடிக்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த எண்ணெய் முடி உதிர்வை மட்டுமல்ல.. பொடுகையும் அடியோடு நீக்கும்..

Image Source: Freepik

Read Next

காஃபின் உட்கொள்வது முடியை எவ்வாறு பாதிக்கிறது.? மருத்துவரிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்..

Disclaimer