Curry Leaves Hair Oil: கரு கரு முடிக்கு கறிவேப்பிலை ஹேர் ஆயில்! வீட்டிலேயே இப்படி செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
Curry Leaves Hair Oil: கரு கரு முடிக்கு கறிவேப்பிலை ஹேர் ஆயில்! வீட்டிலேயே இப்படி செய்யுங்க


Curry Leaves Hair Oil For Hair Growth: இன்றைய பரபரப்பான மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, நம் உடலில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதில் எளிதில் அனைவரும் காணக்கூடிய பொதுவான பாதிப்புகளில் ஒன்றாக முடி உதிர்தல் அமைகிறது. இதனைத் தவிர்க்க இரசாயனம் உட்செலுத்தப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. எனவே தான் சிலர் முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு இயற்கையான முறைகளைக் கையாள்கின்றனர்.

அந்த வகையில் முடி பிரச்சனைகளுக்கு இயற்கை நிவர்த்தியாக விளங்கும் கறிவேப்பிலையைப் பயன்படுத்தலாம். இது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. கறிவேப்பிலையானது அதன் வளமான ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்திற்காக அறியப்படுகிறது. இதை நேரடியாக உட்கொள்வதன் மூலமும் முடி வளர்ச்சியைப் பெறலாம். மேலும், வீட்டிலேயே கறிவேப்பிலை எண்ணெயைத் தயார் செய்து பயன்படுத்தலாம். முடி உதிர்வை எதிர்த்து, வலுவான, ஆரோக்கியமான மயிர்க்கால்களைப் பெறுவதற்கு கறிவேப்பிலை எண்ணெயை எவ்வாறு தயார் செய்வது மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்:

முடி ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறை

தலைமுடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் முடி வளர்ச்சியை ஆதரிக்க கறிவேப்பிலை எண்ணெய் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.

தேவையான பொருள்கள்

  • கறிவேப்பிலை - ½ கப்
  • நறுக்கிய இந்திய நெல்லிக்காய் - ½ கப்
  • தேங்காய் எண்ணெய் - 1 கப்
  • வெந்தயம் - 1 தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் அடுப்பில் இரும்பு வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளவும்.
  • பின் அதில் தேங்காய் எண்ணெய், நறுக்கிய நெல்லிக்காய், கறிவேப்பிலை மற்றும் மெத்தி விதைகள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.
  • இதில் பொருட்களின் ஈரப்பதம் முற்றிலும் ஆவியாகும் வரை மிதமான தீயில் வைத்து , எண்ணெயை வேக வைக்க வேண்டும்.
  • இந்த கலவை பழுப்பு நிறமாக மாறியிருக்க வேண்டும். பின் வெப்பத்தை அணைத்து மூலிகைகள் 24 மணி நேரம் எண்ணெயில் அப்படியே வைக்க வேண்டும்.
  • பிறகு அடுத்த நாள், ஒரு கண்ணாடி ஜாடி அல்லது பாட்டிலில் எண்ணெயை வடிகட்டி ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves For Hair: நீளமா, கருகருனு முடி வளர கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்க

கறிவேப்பிலை எண்ணெயை பயன்படுத்தும் முறை

  • கறிவேப்பிலை எண்ணெயை சில நொடிகள் சூடாக்கி, உச்சந்தலையில் தடவி, சில மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும்.
  • பிறகு கண்டிஷனரைப் பயன்படுத்தாமல் வழக்கம் போல முடியைக் கழுவ வேண்டும்.
  • சிறந்த முடிவுகளைப் பெற வாரம் ஒரு முறை அல்லது இரு முறை பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலை எண்ணெயைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

முடி உதிர்வைத் தடுக்க

கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடியின் மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இவை முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இந்த எண்ணெய் ஆனது உச்சந்தலைக்கு ஊட்டத்தையும் தருகிறது. இந்த முறையான சூடான எண்ணெய் மசாஜ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி உதிர்வைத் தடுக்கிறது.

பொடுகு நீங்க

கறிவேப்பிலையில் பல்வேறு பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. எனவே உச்சந்தலையில் கறிவேப்பிலை எண்ணெயைக் கொண்டு நல்ல முடி மசாஜ் செய்வதன் மூலம் பொடுகு மற்றும் சிறிய உச்சந்தலை தொற்றுகளை எதிர்த்துப் போராட முடியும்.

முன்கூட்டிய நரைமுடியைத் தவிர்க்க

முன்கூட்டிய நரைமுடி இன்று பொதுவான பிரச்சனையாகி விட்டது. இதனைத் தவிர்க்க கறிவேப்பிலை எண்ணெய் பெரிதும் உதவுகிறது. இதில் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, நெல்லிக்காய் மற்றும் தேங்காய் போன்றவை மெலனின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் முடியை வலுவாகவும், இயற்கையாகவே கருப்பாகவும் வைக்க உதவுகிறது.

இவ்வாறு தலைமுடிக்கு கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves For Hair: கறிவேப்பிலையை இப்படி யூஸ் பண்ணா இந்த முடி பிரச்சனை எதுவும் வராதாம்.

Image Source: Freepik

Read Next

Rosemary Tea for Hair: அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தல் வேணுமா? இந்த டீ ஒன்னு போதும்!

Disclaimer