Hibiscus Oil For Hair: முடி ரொம்ப வேகமா வளர வீட்டிலேயே செம்பருத்தி எண்ணெயை தயார் செய்வது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Hibiscus Oil For Hair: முடி ரொம்ப வேகமா வளர வீட்டிலேயே செம்பருத்தி எண்ணெயை தயார் செய்வது எப்படி?

முடி ஆரோக்கியத்திற்கு செம்பருத்திப் பூக்கள்

முடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், பல்வேறு முடி தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் செம்பருத்திப் பூக்கள் உதவுகிறது. செம்பருத்திப் பூக்களில் நிறைந்துள்ள இயற்கையான அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. மேலும் இந்த அமிலங்கள் முடியின் கட்டுமானத் தொகுதியான கெரட்டின் என்ற புரதத்தை உருவாக்குகிறது.

இந்த கெரட்டின் புரதம் ஆனது முடி உடையக்கூடிய வாய்ப்புகளைக் குறைக்கிறது. முடி இழைகளின் தடிமனை அதிகரித்து, முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் பூக்கள், இலைகள் போன்ற அனைத்தும் முடி பராமரிப்பில் உதவுகிறது. செம்பருத்தியைக் கொண்டு உச்சந்தலையை புத்துணர்ச்சியடையச் செய்யவும், முடி உதிர்தலைக் குறைப்பதற்கும் செம்பருத்தி எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதில் முடி வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய் தரும் நன்மைகளையும், எளிதான முறையில் செம்பருத்தி எண்ணெய் தயார் செய்யும் முறை குறித்தும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: முடி வளர்ச்சியைத் தூண்டும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உணவுகள்! என்னென்ன சாப்பிடலாம்?

செம்பருத்தி எண்ணெய் தயாரிக்கும் முறை

தேவையானவை

  • தேங்காய் எண்ணெய் - 1 கப்
  • செம்பருத்தி பூக்கள் - 8
  • செம்பருத்தி இலைகள் - 8

செம்பருத்தி எண்ணெய் செய்முறை

  • முதலில் செம்பருத்தி பூக்கள் மற்றும் செம்பருத்தி இலைகளை எடுத்து நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு கப் தேங்காய் எண்ணெயை சூடாக்க வேண்டும்.
  • இப்போது தேங்காய் எண்ணெயை அரைத்த விழிதில் கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும்.
  • பின் இந்த கலவையை சில நிமிடங்கள் சூடாக்கி அதை குளிர்வித்து தனியாக வைக்க வேண்டும்.
  • பிறகு இந்த எண்ணெயை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

செம்பருத்தி எண்ணெயை பயன்படுத்துவது எப்படி?

  • முதலில் தலைமுடியை ஷாம்பு கொண்டு கழுவி, பிறகு முடியை 90% வரை உலர வைக்க வேண்டும்.
  • தயார் செய்யப்பட்ட செம்பருத்தி எண்ணெயை உச்சந்தலையில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்து, சுமார் அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
  • அரை மணி நேரத்திற்குப் பிறகு தலைமுடி மற்றும் உச்சந்தலையை லேசான ஷாம்பு கொண்டு கழுவி விடலாம்.
  • இதில் முடியின் மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், ஊட்டமளிக்கவும் தேங்காய் எண்ணெய்க்குப் பதில் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Amla Shikakai Hair Mask: இந்த ஒரு ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க, முடி பிரச்சனை எல்லாம் காணாம போய்டும்

தலைமுடிக்கு செம்பருத்தி எண்ணெய் தரும் நன்மைகள்

  • செம்பருத்தி எண்ணெயில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை பொடுகு பிரச்சனையைப் போக்க உதவுகிறது.
  • மேலும், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடியை வலுவாக்கவும், உடையும் தன்மையைக் குறைக்கவும் உதவுகிறது.
  • இந்த எண்ணெயில் நிறைந்துள்ள புரதச்சத்துக்கள் தலைமுடியை நீரேற்றமாக வைக்கவும், முடி வறட்சி தொடர்பான பிரச்சனையை நீக்கவும் உதவுகிறது.
  • செம்பருத்தி எண்ணெய் தடவுவது கூந்தலைப் பளபளப்பாகவும், மென்மையாகவும் வைக்கிறது.

இவ்வாறு செம்பருத்தி எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறையாவது தடவி வருவது சிறந்த நன்மைகளைத் தருகிறது. இந்த எண்ணெய் உச்சந்தலையில் உள்ள துளைகளை நனைத்து முடி நன்றாக எண்ணெயை உறிஞ்சுவதாக அமைகிறது. எனவே பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட விரும்புபவர்கள் தலைமுடிக்கு செம்பருத்தி எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Amla For Hair Growth: முடி அடர்த்தியா, கருமையா வளர ஆம்லா சாற்றில் இதை சேர்த்து குடிங்க

Image Source: Freepik

Read Next

Sleep With Wet Hair: ஈரமான கூந்தலுடன் இரவு தூங்குவது எவ்வளவு ஆபத்து தெரியுமா? இதன் தீமைகள் என்ன?

Disclaimer