How To Make Garlic Oil For Instant Hair Growth: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையால் பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இது உடல் ஆரோக்கியத்துடன் முடி ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக போதிய ஊட்டச்சத்து இல்லாமை, சரியான பராமரிப்பு இல்லாமை மற்றும் மாறிவரும் காலநிலை மாற்றத்தால் முடி ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனால், முடி உதிர்வு, வறண்ட முடி மற்றும் இன்னும் சில முடி சார்ந்த பிரச்சனைகள் எழுகின்றன.
இதனைத் தவிர்க்க, சந்தைகளில் விற்பனை செய்யப்படும் முடி பராமரிப்புப் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இவை சில சமயங்களில் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், இயற்கையான தீர்வாக வீட்டிலேயே தயாரிக்கப்படும் முடி பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்தலாம். அதன் படி, இதில் பூண்டு எண்ணெய் தயாரிக்கும் முறை, பயன்படுத்தும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Hair Oil: இந்த ஹேர் ஆயில் யூஸ் பண்ணுங்க! கொத்து கொத்தா கொட்டுற முடி வளர ஆரம்பிச்சிடும்
முடிக்கு பூண்டு எண்ணெய் பயன்படுத்தலாமா?
பொதுவாக, பூண்டு எண்ணெய் முடி ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருவதாக நம்பப்படுகிறது. அதாவது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும், உச்சந்தலையில் ஊட்டமளிக்கவும் பூண்டு எண்ணெய் உதவுகிறது. முடி பராமரிப்பு வழக்கத்தில் வீட்டில் பூண்டு எண்ணெயை இணைப்பதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ற கேரியர் எண்ணெயில் பூண்டு பற்களை சேர்த்து அதை எளிதாக வீட்டிலேயே தயார் செய்யலாம்.
முடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெய் தயாரிக்கும் முறை
வீட்டிலேயே பூண்டு எண்ணெய் தயார் செய்யக் கூடிய எளிய வழிமுறைகளைக் குறித்து காணலாம்.
- முதலில் சில பூண்டு பற்களை நசுக்கலாம் அல்லது பூண்டு பேஸ்ட் செய்யலாம். இவ்வாறு பூண்டை நசுக்குவது அதன் இயற்கையான எண்ணெய்கள் மற்றும் நன்மை பயக்கும் கலவைகளை வெளியிட உதவுகிறது.
- பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து கேரியர் எண்ணெயை ஊற்றி, குறைந்த வெப்பத்தில் சூடாக்க வேண்டும். அதிக வெப்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதிகளவு வெப்பத்தைப் பயன்படுத்துவது எண்ணெய் மற்றும் பூண்டின் நன்மை பயக்கும் பண்புகளை அழிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Oiling Before Shampooing: ஷாம்பு போடும் முன் முடிக்கு எண்ணெய் தடவுவது நல்லதா? என்னனு தெரிஞ்சிக்கோங்க
- இவ்வாறு குறைந்த தீயில் எண்ணெயை சூடாக்கிய பிறகு, நறுக்கிய பூண்டை வாணலியில் சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெயில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பூண்டு உட்செலுத்த அனுமதிக்க வேண்டும். இதில் பூண்டு தீயாமல் இருக்க அவ்வப்போது கிளற வேண்டும்.
- அதன் பிறகு, எண்ணெயை ஆறவைத்து வடிகட்ட வேண்டும். 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு கடாயை வெப்பத்திலிருந்து நீக்கி எண்ணெயை ஆறவிட வேண்டும். பின் ஆறியதும், பூண்டு துண்டுகளை அகற்ற வடிகட்டியைப் பயன்படுத்தி ஒரு கண்ணாடி ஜாடியில் எண்ணெயை வடிகட்டலாம்.
- இந்த கண்ணாடி குடுவையை இறுக்கமான மூடியைக் கொண்டு மூடி, பூண்டு எண்ணெயை குளிர்ந்த மற்றும் இருளான இடத்தில் சேமிக்க வேண்டும். இவ்வாறு சரியாக சேமித்து வைத்த பூண்டு எண்ணெய் ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

தலைமுடிக்கு பூண்டு எண்ணெய் தரும் நன்மைகள்
முடி ஆரோக்கியத்திற்கு பூண்டு எண்ணெய் மிகுந்த நன்மை பயக்கும். இதில் பூண்டு எண்ணெய் முடி வளர்ச்சிக்கு ஏன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதைக் காண்போம்.
முடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெய்
பூண்டு அதிகளவிலான சல்பர் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை வளர்ச்சி மற்றும் வலிமைக்கு உதவுகிறது. இதில் சல்பர் முடியின் கட்டமைப்பை உருவாக்கும் கெரட்டின் என்ற புரதத்தின் தொகுப்புக்கு உதவுகிறது. மேலும் செலினியம் முடியின் மயிர்க்கால்களின் மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Oil: கொத்து கொத்தா முடி வளர எந்த எண்ணெய் பெஸ்ட் தெரியுமா?
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த
பூண்டில் உள்ள கலவைகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த பூண்டு எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களின் வளர்ச்சிக்கு உதவுவடுடன், ஆக்ஸிஜன் பெறுவதை உறுதி செய்கிறது.
முடி உதிர்வதைத் தடுக்க
பூண்டு எண்ணெயின் ஊட்டச்சத்துக்கள் முடியின் வேர்களை வலுப்படுத்தவும், முடி உதிர்வதைக் குறைக்கவும் உதவுகிறது.
தொற்றுக்களிலிருந்து விடுபட
பூண்டில் இயற்கையான ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளது. இவை உச்சந்தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் தொற்றுநோய்களிலிருந்து விடுபட உதவுகிறது. இவை முடி வளர்ச்சிக்கு ஆதரவான சூழலை ஊக்குவிக்கிறது.
இவ்வாறு பூண்டு எண்ணெயைப் பயன்படுத்தி, தலைமுடி ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகிறது. எனினும், உச்சந்தலையில் பூண்டு எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன், சருமத்தின் ஒரு சிறிய பகுதியில் பேட்ச் டெஸ்ட் செய்வது உள்ளது. இதன் மூலம் எரிச்சல் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகள் போன்றவற்றைச் சரிபார்க்க முடியும். இதன் மூலம் பாதகமான எதிர்விளைவுகள் எதுவும் ஏற்படவில்லையெனில், பூண்டு எண்ணெயை கூந்தல் மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். இதை சிறிது நேரம் வைத்து, பின்னர் கழுவி விடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Hair Oil Benefits: தலைமுடி கருகருனு நீளமா வளர எண்ணெயை இப்படி தடவிப் பாருங்க.
Image Source: Freepik