Should I Apply Oil Before Shampoo: இன்று ஆண்கள், பெண்கள் என பலரும் முடி பராமரிப்பு சார்ந்த நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வாறே, பல்வேறு நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உள்ளடக்கிய முடி பராமரிப்பு நடைமுறைகள் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த பல்வேறு பழமையான நடைமுறைகளில் தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துவது, எண்ணெய் பயன்படுத்துவது போன்றவை அடங்கும்.
அதன் படி, ஷாம்பு பயன்படுத்துவதில் பல்வேறு குழப்பங்கள் எழலாம். ஷாம்பு பயன்படுத்தும் போது சில குறிப்புகளைத் தவறாமல் தெரிந்து கொள்வது அவசியமாகும். ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன்னதாக பலரும் முடிக்கு எண்ணெய் தடவுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இது உண்மையில் அவசியமானதா? அல்லது பழமையான கட்டுக்கதையா? தலைமுடியின் உண்மையான முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, ஷாம்புவைப் பயன்படுத்தும் முன் எண்ணெய் பயன்படுத்துவது எந்த அளவு நன்மை என்பது குறித்துக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Homemade Hair Conditioner: வறண்ட முடிக்கு இயற்கையான ஹேர் கண்டிஷனர் இதோ!
ஷாம்பு பயன்படுத்தும் முன் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
தலைமுடிக்கு ஷாம்புவைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, எண்ணெய் தடவுவதன் மூலம் பல்வேறு முடி சார்ந்த நன்மைகளைப் பெறலாம்.
முடி வறட்சியைத் தவிர்க்க
ஷாம்புகள் பயன்படுத்தும் போது, அதிலும் கடுமையான இரசாயனங்கள் கொண்ட ஷாம்புவை பயன்படுத்துவது முடியின் இயற்கையான எண்ணெய்களை அகற்றி, வறட்சி மற்றும் உதிர்தலை ஏற்படுத்துகிறது. இதனைத் தடுக்க ஷாம்பூவுக்கு முன் எண்ணெய் தடவுவது சிறந்த தேர்வாக அமைகிறது. இவ்வாறு ஷாம்புவிற்கு முன்னதாக எண்ணெய் தடவுவது அதிகப்படியான ஈரப்பதம் இழப்பதைத் தடுக்க உதவுகிறது. மேலும் முடியை மென்மையாகவும், நிர்வகிக்கக்கூடியதாகவும் வைத்திருக்க முடியும்.
முடி மற்றும் உச்சந்தலைக்கு ஊட்டமளிக்க
தலைமுடிக்கு ஷாம்பு செய்வதற்கு முன்னதாக தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது உச்சந்தலை மற்றும் முடி இரண்டிற்கும் ஆழமான ஊட்டச்சத்தை அளிக்கிறது. அதன் படி, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்ட எண்ணெயை முடி மற்றும் உச்சந்தலையில் தடவ, முடி ஈரப்பதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறுகிறது. இவை முடியின் உள்ளே இஉந்து ஆழமாக வலுப்படுத்துகிறது.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு
பொதுவாக தலையில் எண்ணெய் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. மேலும் மயிர்க்கால்களுக்கு மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டத்தை வழங்குவதுடன், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் விநியோகத்தை மேம்படுத்துகிறது. மேலும் இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வை குறைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Onion Juice For Hair: முடி பொசு பொசுனு வளர வெங்காயச் சாற்றை தலைக்கு இப்படி யூஸ் பண்ணுங்க
புரத இழப்பைக் குறைக்க
முடி கெரட்டின் என்ற புரதத்தால் ஆனதாகும். தினமும் வழக்கமான ஷாம்பு பயன்படுத்துதல், சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளின் வெளிப்பாடு மற்றும் வெப்ப ஸ்டைலிங் போன்ற அனைத்தும் முடியிலிருந்து குறிப்பிடத்தக்க புரத இழப்பை ஏற்படுத்துகிறது. இதனைத் தடுக்கும் விதமாக ஷாம்புக்கு முன் எண்ணெய், குறிப்பாக தேங்காய் எண்ணெய் தடவுவது சிறந்த தேர்வாக அமைகிறது. இவ்வாறு ஷாம்பு பயன்படுத்தும் முன் எண்ணெய் தடவுவது, தலைமுடியின் தண்டில் பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி புரத இழப்பைக் குறைக்க உதவுகிறது.
முடி சேதத்தைத் தவிர்க்க
வறண்ட முடியில் ஷாம்பு பயன்படுத்துவது பல்வேறு வகையான முடி சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஷாம்புக்கு முன்னதாக முடிக்கு எண்ணெயைத் தேய்ப்பதால் முடி சிக்கலை எளிதாக்குகிறது. முடிக்கு எண்ணெயைச் சேர்ப்பதால் முடி இழைகளில் நழுவச் செய்கிறது. இதனால் வறண்ட முடியில் ஷாம்பு தடவுவதால் ஏற்படும் உடைப்பு மற்றும் சேதத்தைக் குறைக்கிறது.
அறிவியல் ரீதியான சான்றுகள்
தலைமுடியில் ஷாம்புக்கு முன் முடிக்கு எண்ணெய் தடவுவது ஒரு பாரம்பரியமாக மட்டுமல்ல. அறிவியல் ரீதியாகவும் ஆதரிக்கப்படுகிறது. அவ்வாறு தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்துவது அவற்ரின் குறைந்த மூலக்கூறு எடை மற்றும் நேரான சங்கிலி அமைப்பு காரணமாக முடியின் தண்டுக்குள் ஊடுருவிச் செல்லக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. இது வீக்கம் மற்றும் சோர்வைக் குறைக்க உதவுகிறது.
இது தவிர, எண்ணெய்களில் லாரிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பொடுகுத் தொல்லை மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுத்து உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
இது போன்ற ஏராளமான நன்மைகளைப் பெறுவதற்கு தலைமுடிக்கு ஷாம்புவைப் பயன்படுத்தும் முன்னதாக எண்ணெய் தடவலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Straightening Hair Mask: சுருள் முடியை நேராக்கணுமா? இந்த ரெமிடிஸ் யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik