$
Homemade Hair Conditioner For Dry Hair: மென்மையான, பளபளப்பான, நீளமான முடி வேண்டும் என்று எவருக்குத் தான் ஆசை இருக்காது. அழகான, மென்மையான கூந்தலைப் பெற விரும்பியே இன்று பலரும் பலவிதமான முயற்சிகளைக் கையாள்கின்றனர். இதற்கு சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இது இரசாயனங்கள் கலந்ததாக இருக்கலாம் மற்றும் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். இது தவிர மோசமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையால் பலரும் முடி சார்ந்த பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர்.
அதாவது முடி உதிர்தல், முடி சேதமடைதல், முனை பிளவு போன்ற பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றனர். மேலும் தலைமுடியை நிர்வகிப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். இது பலருக்கும் பொதுவான பிரச்சனையாக அமைகிறது. அதிலும் குறிப்பாக, தலைமுடியை ஸ்டைலிங் செய்ய வெப்ப ஸ்டைலிங் கருவிகள் அல்லது ரசாயன சிகிச்சைகளை அடிக்கடி பயன்படுத்துபவர்களே இந்த பிரச்சனையை அதிகம் சந்திக்கின்றனர். இந்த முடி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும், சேதமடைந்த மற்றும் வறண்ட முடியை சரி செய்யவும் வீட்டிலேயே கண்டிஷனர்களைத் தயார் செய்து பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla For Hair: பொடுகுத் தொல்லை நீங்க நெல்லிக்காயுடன் இந்த ஒரு பொருளை யூஸ் பண்ணுங்க
முடிக்கு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட கண்டிஷனர்
தேன் மற்றும் தயிர் கண்டிஷனர்
தேன் இயற்கையாகவே ஈர்ப்பதத்தை அளிக்கக் கூடிய உணவுப் பொருளாக இருப்பதால், இவை முடியின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை அகற்றி ஆரோக்கியமான முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
- இந்த கண்டிஷனர் தயார் செய்வதற்கு ஒரு கப் வெற்று தயிர் எடுத்துக் கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி தேன் ஊற்றி ஒன்றாகக் கலக்க வேண்டும்.
- இந்தக் கலவையை தலைமுடியில் பயன்படுத்திய பிறகு அரை மணி நேரம் காத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.

முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய்
முடி பராமரிப்பு சார்ந்த செயல்களில் ஆலிவ் எண்ணெய் சிறந்த தீர்வாக அமைகிறது. இது முடி பராமரிப்பில் பிரபலமான மூலப்பொருளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் தலைமுடிக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது முடிக்கு ஊட்டமளிக்கும் மற்றும் ஈரப்பதமாக்கும் ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் முட்டையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இவை முடியை வலுப்படுத்தவும் சரிசெய்யவும் உதவுகின்றன.
- முட்டை, ஆலிவ் எண்ணெய் ஹேர் கண்டிஷனர் தயார் செய்ய, முட்டையின் மஞ்சள் கரு மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும்.
- இந்தக் கலவையை வாரத்திற்கு ஒரு முறை தலைமுடியில் தடவுவது விரும்பிய முடிவுகளைப் பெற உதவுகிறது.
தேன் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு இயற்கையான தெளிவுத்திறனாக விளங்குகிறது. இது ஸ்டைலிங் தயாரிப்புகள் மற்றும் பிற இரசாயனங்கள் ஆகியவற்றின் உருவாக்கத்தை அகற்ற உதவுகிறது. மேலும் இது உச்சந்தலையின் pH அளவை சமநிலைப்படுத்துகிறது.
- இந்த ஆரோக்கியமான ஹேர் கண்டிஷனர் தயார் செய்வதற்கு, இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிலான ஆப்பிள் சைடர் வினிகர் போன்றவற்றைச் சேர்த்து கலக்க வேண்டும்.
- பின் இந்தக் கலவையை தலைமுடியில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Onion Juice For Hair: முடி பொசு பொசுனு வளர வெங்காயச் சாற்றை தலைக்கு இப்படி யூஸ் பண்ணுங்க
கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் கண்டிஷனர்
கூந்தல் பராமரிப்பில் தேங்காய் எண்ணெய் ஒரு பல்துறை பராமரிப்புப் பொருளாக செயல்படுகிறது. முடி பராமரிப்புப் பொருள்களில் இது ஒரு பிரபலமான தேர்வாகும். தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் தடவுவது முடியின் தண்டு வரை ஆழமாக ஊடுருவி ஊட்டமளித்து, அதை உள்ளிருந்து சரி செய்ய உதவுகிறது. மேலும், கற்றாழையில் என்சைம்கள் நிறைந்துள்ளன. இவை உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை வெளியேற்றி வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- இந்த கண்டிஷனர் தயார் செய்வதற்கு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் போன்றவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
- பின் இந்தக் கலவையை தலைமுடியில் தடவ, முடி மென்மையான மற்றும் பளபளப்பானதாக மாறுவதைக் காணலாம்.

வாழைப்பழம் மற்றும் அவகேடோ கண்டிஷனர்
வெண்ணெய் பழமான அவகேடோ மற்றும் வாழைப்பழம் இரண்டுமே வறண்ட மற்றும் சேதமடைந்த முடிக்கு ஊட்டமளிக்கவும், சரி செய்யவும் உதவுகிறது. இதற்கு இதில் உள்ள முடி ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களே ஆகும்.
- இந்த கண்டிஷனர் தயார் செய்வதற்கு பழுத்த வாழைப்பழம் ஒன்று மற்றும் பழுத்த வெண்ணெய் பழம் ஒன்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இவை இரண்டையும் ஒரு மென்மையான பேஸ்ட் ஆகும் வரை ஒன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
- பின் இந்தக் கலவையை தலைமுடியில் தடவி, முடி முனைகளில் வரை கவனம் செலுத்தி 20-30 நிமிடங்கள் வைத்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இந்த கண்டிஷனர்கள், பெரும்பாலும் வீட்டிலேயே கிடைக்கும் பொருள்களை வைத்து தயார் செய்யப்படுகிறது. வழக்கமான முடி பராமரிப்பு வழக்கத்தில் இந்த கண்டிஷனர்களை இணைத்துக் கொள்வதன் மூலம் விலையுயர்ந்த முடி பராமரிப்புப் பொருள்களுக்கு அதிகம் செலவிடாமல், ஆரோக்கியமான மற்றும் பொலிவான தலைமுடியைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Coconut And Amla Oil: ஆம்லா பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து முடிக்கு பயன்படுத்தலாமா?
Image Source: Freepik