Doctor Verified

Dry Hair Remedies: முடி ரொம்ப வறண்டு போயிருக்கா? இந்த 3 பொருள்களை 3 வழிகளில் யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Dry Hair Remedies: முடி ரொம்ப வறண்டு போயிருக்கா? இந்த 3 பொருள்களை 3 வழிகளில் யூஸ் பண்ணுங்க

இந்த சூழ்நிலையில் உலர்ந்த கூந்தலை சரி செய்ய, இயற்கையான முறையைக் கையாள்வது சிறந்த தேர்வாகும். இதில் உலர்ந்த கூந்தலை மென்மையாக மாற்ற வீட்டிலேயே பால், தேன் மற்றும் வாழைப்பழத்தைப் பயன்படுத்தலாம். இந்த மூன்று பொருள்களையும் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உலர்ந்த முடியை மென்மையாக மாற்ற இந்த பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஹேர் மாஸ்க்குகள் குறித்து அர்பன் கிளாப் நிறுவனத்தில் பணிபுரியும் அழகுக்கலை நிபுணர் ஆஷூ மாஸ்ஸி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Banana Hair Mask: சுருள் முடிபிரச்சனைக்கு வாழைப்பழ ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க

உலர்ந்த முடியை மென்மையாக மாற்றுவது எப்படி?

பால், வாழைப்பழம் மற்றும் தேன் ஆகிய மூன்றையும் மூன்று வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தி வறண்ட முடியை மென்மையாக மாற்றலாம்.

முறை 1

வறண்ட கூந்தலைக் குணப்படுத்த பால், தேன் மற்றும் வாழைப்பழத்துடன் முல்தானி மிட்டி சேர்த்து ஹேர் மாஸ்க் தயார் செய்யலாம். இதற்கு, 3 ஸ்பூன் அளவு முல்தானி மிட்டி பவுடர் எடுத்துக் கொள்ளலாம். பெரிய கிண்ணம் ஒன்றில் முல்தானி மிட்டி, பால், 2 டீஸ்பூன் அளவு வாழைப்பழக் கூழ், 1 டீஸ்பூன் தேன் போன்றவற்றைச் சேர்த்து ஹேர் மாஸ்க்கிற்கான பேஸ்ட்டைத் தயார் செய்யலாம். இந்த பேஸ்ட்டை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் வைத்து பின்னர் லேசான ஷாம்பு கொண்டு கழுவி விடலாம். இந்த ஹேர் மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முடியின் உலர் பிரச்சனையை நீக்குவதுடன் ஈரப்பதத்தைத் தக்க வைக்கலாம்.

முறை 2

உலர் கூந்தல் பிரச்சனையைப் போக்க, பால், வாழைப்பழத்துடன் கற்றாழை ஜெல் சேர்த்துப் பயன்படுத்தலாம். கற்றாழையில் வைட்டமின் ஏ மற்றும் ஈ நிறைந்துள்ளது. இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது முடியை நீரேற்றம் மற்றும் ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. இதன் மூலம் வறண்ட முடி பிரச்சனையை நீக்கலாம். இந்த ஹேர் மாஸ்க் தயார் செய்ய, 3 ஸ்பூன் அளவிலான புதிய கற்றாழை ஜெல்லில் 2 ஸ்பூன் பால் மற்றும் 2 ஸ்பூன் வாழைப்பழக் கூழ் சேர்த்து ஹேர் மாஸ்க் கலவையைத் தயார் செய்ய வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் வைத்து பின் சுத்தமான நீரில் முடியை சுத்தம் செய்து விடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Spinach For Hair Growth: போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளரணுமா? கீரையை இப்படி எடுத்துக்கோங்க

முறை 3

இந்த முறையில் வறண்ட முடியைப் போக்குவதற்கு பால், வாழைப்பழத்துடன் ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கலாம். ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஹேர் மாஸ்க் தயார் செய்ய, ஒரு பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய கிண்ணம் ஒன்றில் பழுத்த வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்து பேஸ்ட் தயார் செய்ய வேண்டும். பின் இந்த பேஸ்ட்டில் 3 ஸ்பூன் அளவு கெட்டியான கிரீம் பால் மற்றும் 2 ஸ்பூன் அளவு ஆலிவ் ஆயிலை நன்கு கலக்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாகக் கலக்க வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை முகம் மற்றும் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்களுக்குப் பின் சுத்தமான நீரில் முடியைச் சுத்தம் செய்ய வேண்டும். சிறந்த முடிவுகளைப் பெற இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் இருமுறை பயன்படுத்தலாம்.

இந்த ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் வறண்ட முடி பிரச்சனையை நீக்கி மென்மையாக மாற்றலாம். எனினும், முடிக்கு புதிய பொருள்களைப் பயன்படுத்தும் முன்னதாக பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Tea For Hair: பொசு பொசுனு முடி வளர உதவும் டீ வகைகள். எப்படி பயன்படுத்துவது?

Image Source: Freepik

Read Next

Herbs For Healthy Hair Growth: தலைமுடி நல்லா தளதளன்னு வளரனுமா?… இந்த 5 மூலிகைகள் போதும்!

Disclaimer