Dry Hands Remedies: கை வறண்டு போயிருக்கா? இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Dry Hands Remedies: கை வறண்டு போயிருக்கா? இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க


கைகளின் வறட்சியை நீக்க உதவும் வீட்டு வைத்தியம்

கை பராமரிப்பு

குளிர்ந்த காலநிலையில் கைகளுக்குக் கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. எனவே இந்த சூழ்நிலையில் பாத்திர சோப்பு அல்லது சலவை சோப்பு போன்றவற்றை பயன்படுத்தும் போது, கையுறைகளை அணியலாம். இதன் மூலம், கடுமையான சோப்பு கைகளில் எந்த மோசமான விளைவையும் ஏற்படுத்தாது. இதை கைகளை முடிந்த வரை ஈரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Almond Oil For Skin: பாதாம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் நல்லது; பாதாம் எண்ணெயின் பயன்கள்!!

சர்க்கரை ஸ்க்ரப்

குளிர்காலத்தில் கைகளை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள, 15 நாட்களுக்கு ஒரு முறை ஸ்க்ரப் பயன்படுத்தலாம். இதற்கு வீடுகளில் சர்க்கரை உதவியுடன் கைகளைத் துடைக்கலாம். இதற்கு 1 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையில் கற்றாழை ஜெல்லைக் கலந்து கைகளைத் தேய்க்கலாம். அதன் பின், 2 முதல் 3 நிமிடங்களுக்குப் பிறகு, கைகளைச் சுத்தம் செய்து மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.

தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய், தேன் இரண்டுமே சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் தேன் மற்றும் தேங்காய் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாக மற்றும் மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதைக் கலந்து பேஸ்ட்டை தயார் செய்து, பிறகு கைகளில் மசாஜ் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட் ஆனது சருமத்திற்கு ஊட்டமளித்து வறட்சியைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Multani Mitti Benefits: வாரத்திற்கு எத்தனை முறை முல்தானி மிட்டியை சருமத்தில் தடவலாம்?

நெய் மற்றும் தேன்

குளிர்காலத்தில் கைகளின் வறட்சியைப் போக்க தேன் மற்றும் நெய் உதவுகிறது. இதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் நிறைந்த தேன் மற்றும் நெய்யைச் சம அளவு கலந்து பேஸ்ட்டைத் தயார் செய்யலாம். இவ்வாறு தினமும் இரவில் இந்த பேஸ்ட்டைக் கொண்டு கைகளை மசாஜ் செய்ய வேண்டும். இவை கைகளை நீரேற்றமாக மற்றும் ஈரப்பதமாக்க வைத்திருக்க உதவுகிறது. இவ்வாறு மசாஜ் செய்த பிறகு, கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

பாதாம் எண்ணெய் அலோவேரா ஜெல்

கற்றாழை ஆனது சருமத்திற்கு இயற்கை மருந்தாக செயல்படுகிறது. இதில் இரசாயனம் கலந்த கிரீம்களைத் தடவுவதற்குப் பதில் பாதாம் எண்ணெய் மற்றும் கற்றாழை கொண்டு கைகளை மசாஜ் செய்ய வேண்டும். கற்றாழை ஜெல், பாதாம் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் வறண்ட கை வெடிப்புகளுக்கு ஒரு நல்ல வீட்டு வைத்தியமாக அமைகிறது.

இந்த வகை வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் வறண்ட கை பிரச்சனைகளைக் குணமாக்கலாம். எனினும், புதிய பொருள்களைப் பயன்படுத்தும் முன்னதாக பேட்ச் டெஸ்ட் செய்வதன் மூலம் சரும எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Skin Glow Face Mask: கொரிய பெண்களின் கண்ணாடி சருமம் போல உங்க சருமமும் ஆக வேண்டுமா?

Image Source: Freepik

Read Next

Multani Mitti Benefits: வாரத்திற்கு எத்தனை முறை முல்தானி மிட்டியை சருமத்தில் தடவலாம்?

Disclaimer

குறிச்சொற்கள்