Feet Swelling Remedies: கால்கள் அடிக்கடி வீங்கி வலி வருதா? இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Feet Swelling Remedies: கால்கள் அடிக்கடி வீங்கி வலி வருதா? இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க


How To Reduce Swelling Feet: கால்களில் வீக்கம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மட்டுமல்லாமல் பலரும் கால் வீக்கத்தால் அவதியுறுகின்றனர். சில சமயங்களில் கால் வீக்கம் ஏற்படுவதற்கு காரணியாக, ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம். இது தவிர, நீண்ட நேரம் கால்களை தொங்கவிட்டு அமர்ந்திருப்பது, அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது போன்றவற்றால் கால்களில் வீக்கம் உண்டாகலாம். இவையெல்லாம் பொதுவான காரணியாகும்.

மேலும் கடுமையான சிறுநீரகம், இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறியாகவும் கால்வீக்கம் அமைகிறது. ஆனால் இந்த பிரச்சனைகளால் ஏற்படும் வீக்கம் நீண்ட நாள்கள் வரை நீடிக்கும். கால் வீக்கம் சாதாரணமானதாக இருப்பினும், எதிர்காலத்தில் இந்த பிரச்சனை மிகவும் ஆபத்தானதாக மாறலாம். இதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உதவுகின்றன. அவற்றில் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Constipation Remedies: மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க இந்த இரண்டு பொருள் போதும்

கால் வீக்கத்தைக் குறைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவின் உதவியுடன் கால் வீக்கத்தைக் குறைக்கலாம். இதற்கு இரண்டு ஸ்பூன் அளவு அரிசியை தண்ணீரில் கொதிக்க வைத்து, பிறகு அந்த நீரில் பேக்கிங் சோடாவை சேர்க்க வேண்டும். இதை பேஸ்ட் போல செய்து, பாதங்களில் தடவி 15 நிமிடம் வைக்க வேண்டும். இது வீக்கத்தைக் குறைப்பதுடன், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்

அடிக்கடி வீக்கமடைந்த பாதங்களை அனுபவிப்பவர்கள் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். இதற்கு சிறிது தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி, அதில் பூண்டு பற்களைச் சேர்த்து எண்ணெயில் வறுக்க வேண்டும். இவ்வாறு பூண்டில் தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெயை பாதங்களில் தடவி சுமார் 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இதை செய்வதன் மூலம் வீக்கத்தைக் குறைப்பதுடன், வலியை நீக்கலாம்.

ஐஸ் பேக்

பாதங்கள் வீங்கியிருக்கும் போது வீட்டில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தலாம். வீக்கமடைந்த பகுதியில் ஐஸ் கட்டியால் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து வலி குறைவதை உணரலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Baby Cream: குழந்தைக்கு ஃபேஸ் கிரீமை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம்?

மஞ்சள்

ஆயுர்வேதத்தில் மஞ்சள் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இவை கால் வீக்கத்தில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சளுடன், ஒரு டேபிள் தேங்காய் எண்ணெய் கலந்து கலவையாக தயார் செய்து வீக்கம் நிறைந்த இடத்தில் தடவ வேண்டும். காய்ந்த பிறகு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

கல் உப்பு

கல் உப்பைக் கொண்டு கால்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க முடியும். இதற்கு வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு அதில் சிறிது கல் உப்பைச் சேர்த்துக் கொள்ளவும். பின், இதில் கால்களை வைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கால் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.

இவ்வாறு எளிமையாக வீட்டிலேயே உள்ள பொருள்களைக் கொண்டு கால் வீக்கத்தைக் குறைக்கலாம். எனினும் இந்த செய்முறைக்குப் பிறகு கால் வீக்கம் இருப்பின், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil On Feet: பாதங்களில் இந்த பிரச்சனையா? தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Essential Oil Benefits: தலைவலியைப் போக்கும் டாப் 5 எசன்ஷியல் ஆயில்கள்… மசாஜ் செய்வது எப்படி?

Disclaimer