What can cause tremors in hands and legs: பெரும்பாலும் கைகள் மற்றும் கால்கள் நடுங்குவதை ஒரு தீவிரமான பிரச்சனையாக நாம் கருதுவதில்லை. ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் எப்போதாவது கை, கால்கள் நடுங்கும் நிலையை அனுபவித்திருப்பர். ஆனால் இது எதனால் ஏற்படுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா? சில சமயங்களில் இது பயம் காரணமாக நிகழலாம். சில சமயங்களில் நடுக்கம் ஏற்பட உளவியல் காரணிகள் காரணமாக இருக்கலாம். ஆனால் சில நேரங்களில் கைகள் மற்றும் கால்களில் நடுக்கம் ஆனது சில நோய்களால் ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம். பெரும்பாலான நேரங்களில் பலரும் கை, கால்களில் நடுக்கம் ஏற்படுவதை சாதாரணமாகக் கருதி அதைப் புறக்கணிக்கின்றனர். குறிப்பாக, நீண்ட காலமாக கை, கால்களில் நடுக்கம் இருந்தால் அதைப் புறக்கணிப்பது சரியானதாக இருக்காது. அதிலும் கை, கால்கள் நடுங்குவதற்கான காரணத்தை அறிந்த பிறகு, அதைத் தடுக்க முயற்சிப்பது அவசியமாகும். இதில், கை மற்றும் கால்கள் நடுங்குவதற்கு என்ன காரணங்கள் என்பது குறித்து சாரதா மருத்துவமனையின் இணைப் பேராசிரியர் டாக்டர் பூமேஷ் தியாகி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Body Numbness: உடல் பாகங்கள் மரத்துப் போக காரணம் என்ன? ஏதும் நோய்களின் அறிகுறியா?
கை, கால்கள் நடுக்கம் ஏற்பட காரணங்கள்
மருத்துவர் பூமேஷ் தியாகி அவர்கள், கைகள் மற்றும் கால்களில் நடுக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் சிலவற்றைக் கூறியுள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
அதிகப்படியான தைராய்டு (ஹைப்பர் தைராய்டிசம்)
கைகள் மற்றும் கால்களில் நடுக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான தைராய்டு காரணமாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதன் பொருள் தைராய்டு சுரப்பி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க கடுமையாக உழைக்கிறது என்பதைக் குறிக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனவே தான் அதிக தைராய்டு உள்ளவர்கள் பெரும்பாலும் எந்த காரணமும் இல்லாமல் எடையிழப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே தைராய்டு சுரப்பி அதிகமாக செயல்படுகிறதா என்பதைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்யலாம்.
குறைந்த இரத்த அழுத்தம் - குறைந்த இரத்த சர்க்கரை
உடலின் நரம்புகள் மற்றும் தசைகள் சரியாக செயல்பட முடியாததற்கு முக்கிய காரணமாக இரத்த சர்க்கரை அமைகிறது. ஏதாவது காரணத்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது, கைகள் மற்றும் கால்களில் நடுக்கம் ஏற்படத் தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும் முக்கியமாகும். இதற்கு புகைபிடிக்காமல், மது அருந்துவதைத் தவிர்த்து, சரியான வைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் இரண்டும் சரியாக இருப்பினும் கைகள் மற்றும் கால்களின் நடுக்கம் நிற்கவில்லை என்றால், மருத்துவரை அணுகுவது நல்லது.
அத்தியாவசிய நடுக்கம்
இது ஒரு ஆபத்தான சூழ்நிலையைக் குறிக்கிறது. ஒருவருக்கு அத்தியாவசிய நடுக்கம் ஏற்படும்போது, கண்ணாடிகள், கோப்பைகள் போன்ற சிறிய பொருட்களைத் தூக்குவதிலும் சிரமத்தை உணர்கின்றனர். பெரும்பாலும் நோயாளி பொருட்களைத் தூக்கும்போது அல்லது பிடிக்கும்போது அவரது கைகள் நடுங்கக்கூடும். அதன் அளவு குறைவாக இருந்தால் பிரச்சனை இல்லை. அதே சமயத்தில், கை நடுக்கம் காரணமாக அன்றாடப் பணிகளை முடிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம்.
இந்நிலையில் நோயாளி தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும். எனினும் இந்தத நோய்க்கான முக்கிய காரணம் இன்னும் அறியப்படவில்லை. மேலும் நிபுணர்கள் பலரும் மரபணுக்களில் ஏற்படக்கூடிய சில மாற்றங்களின் காரணமாக அத்தியாவசிய நடுக்கம் ஏற்படலாம் என்று நம்புகின்றனர். இந்த நோயைச் சமாளிப்பதற்கு மருத்துவர் தரும் மருந்துகள் அல்லது தொழில் சிகிச்சையை வழங்க முடியும். சில சந்தர்ப்பங்களில் இதைச் சமாளிப்பதற்கு அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Numbness in Legs: உங்க கை மற்றும் கால் அடிக்கடி மரத்து போகிறதா? அப்போ இதுதான் காரணம்!
தூக்கமின்மை
ஒருவர் நீண்ட நேரம் போதுமான தூக்கம் பெறவில்லை என்றால் அவர் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இதில் தலைவலி, சோர்வு போன்ற பொதுவான பிரச்சினைகள் அடங்கும். அதே சமயம் ஒருவர் தூங்கவில்லை எனில் சிறிது நேரத்திற்குப் பிறகு அவரது கைகளும் கால்களும் நடுங்கத் தொடங்கலாம். உண்மையில், நன்றாகத் தூங்காத போது இது நரம்பியல் அனிச்சைகளைத் தூண்டலாம். இதன் காரணமாக, சில வேலைகளைச் செய்யும்போது கைகள் மற்றும் கால்களில் நடுக்கம் ஏற்படலாம்.
பார்கின்சன் நோய்
பார்கின்சன் நோய் இருந்தாலும் கூட, கை, கால்கள் நடுங்கும் பிரச்சனையை ஒருவர் சந்திக்க நேரிடலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, பார்கின்சன் நோயால் கை அல்லது காலில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் செயல்படுவதை நிறுத்திவிடும் அபாயம் ஏற்படலாம். பார்கின்சன் நோய் நிகழும் போது ஆரம்ப நாட்களில் ஒரு கையில் மட்டுமே நடுக்கம் ஏற்படுகிறது. ஆனால் சிகிச்சை சரியான நேரத்தில் செய்யப்படாவிட்டால் இரு கைகளும் நடுங்கத் தொடங்கலாம். அது மட்டுமல்லாமல், சிறிது நேரத்திற்குப் பிறகு பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சமநிலைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்குகிறது. மேலும் கைகள் மற்றும் கால்களில் விறைப்பும் ஏற்படலாம். இந்த நோயைச் சமாளிப்பதற்கு ஒரு நிபுணரிடம் செல்வது முக்கியமாகும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Body Numbness: அடிக்கடி கை கால் மரத்து போகுதா? அதை இப்படி சமாளிங்க
Image Source: Freepik