What Are The Causes Of Numbness in Legs: அதிக நேரம் கால்களை மடக்கி உட்காந்திருந்தாலோ அல்லது கைகளை மடக்கி வைத்திருந்தாலோ கை மற்றும் கால் மரத்து போவதை நாம் உணர்ந்திருப்போம். இவை நரம்பு சமந்தமான பிரச்சினைகளில் ஒன்று என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? கால்களில் கூச்ச உணர்வு, உணர்வின்மை, கால்விரல்களை அசைப்பதில் சிரமம், நடக்கும்போது வலி, சூடு, குளிர் என்று பிரித்து பார்ப்பதில் சிரமம் போன்ற அனைத்தும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் அறிகுறிகள்.
இவற்றை புறக்கணிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கால்களின் நரம்புகளில் உள்ள இந்த பிரச்சனைகள் ஒரு தீவிர உடல்நல பிரச்சனையின் அறிகுறிகளாக இருக்கலாம். கால்களில் கூச்சம் ஏற்படுவதற்கான காரணங்களைப் பற்றி டெல்லி எய்ம்ஸ் நரம்பியல் துறையின் டிஎம் டாக்டர் பிரியங்கா செஹ்ரா என்ன கூறுகிறார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Insta Reels: தினமும் தூங்குவதற்கு முன் இன்ஸ்டா ரீல்ஸ் பார்ப்பவரா நீங்க? அப்போ இதை படியுங்க!
கை கால் மரத்துபோக என்ன காரணம்?

நீரிழிவு நோய் (Diabetes)
உயர் இரத்த சர்க்கரை, அதிக ட்ரைகிளிசரைடுகள், அதிக கொழுப்பு ஆகியவை உங்கள் நரம்புகளை பலவீனப்படுத்தி நரம்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இது நரம்பியல் நோய்க்கு பொதுவான காரணமாகும். நரம்பு சேதம் பொதுவாக பாதங்களில் தொடங்குகிறது, இதனால் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு, எரியும் அல்லது வலி ஏற்படுகிறது. இந்நிலையில், நீரிழிவு அதிகரிப்பு நரம்பு சேதத்தின் அறிகுறிகளை அதிகரிக்கும்.
ஹைப்போ தைராய்டிசம் (Hyperthyroidism)
தைராய்டு ஹார்மோன்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் நரம்புகளின் சரியான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், ஹைப்போ தைராய்டிசம் அல்லது தைராய்டு சமநிலையின்மை வளர்சிதை மாற்றம் குறைவதால் நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம் : Bronze Utensils: வெண்கல பாத்திரத்தில் சமைத்து சாப்பிடவதால் கிடைக்கும் நன்மைகள்!
ஹைப்போ தைராய்டிசம் நரம்பு நோயை ஏற்படுத்தும், இது கால்களில் உணர்வின்மை மற்றும் கூச்சத்தை ஏற்படுத்தும். எனவே, கால்களில் கூச்ச உணர்வு அல்லது நரம்புகள் அடிக்கடி நீட்டப்பட்டால், உங்கள் தைராய்டு ஹார்மோனைச் சரிபார்த்து, அதைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கவும்.
வைட்டமின் பி12 குறைபாடு (Vitamin B12 Deficiency)

கால்களில் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு போன்ற பிரச்சனைகள் நரம்பு சேதத்தின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு ஒரு காரணம் உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஆகும். வைட்டமின் பி12 நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் சரியான செயல்பாட்டிற்கும் மிகவும் முக்கியமானது.
இந்த பதிவும் உதவலாம் : Raw Onion For BP: வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துமா?
வைட்டமின் பி 12 இன் குறைபாடு நரம்பியல் நோயை ஏற்படுத்தும், இது கால்களின் நரம்புகளை பாதிக்கும். கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் பலவீனம் ஆகியவை பி12 குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம்.
Pic Courtesy: Freepik