Bronze Utensils: வெண்கல பாத்திரத்தில் சமைத்து சாப்பிடவதால் கிடைக்கும் நன்மைகள்!

  • SHARE
  • FOLLOW
Bronze Utensils: வெண்கல பாத்திரத்தில் சமைத்து சாப்பிடவதால் கிடைக்கும் நன்மைகள்!


இந்த பாதிப்பை தவிர்க்க பிளாஸ்டிக்கிற்கு பதிலாக வெண்கலத்தை பயன்படுத்தத் தொடங்கலாம். வெண்கல பாத்திரம் ஒன்றும் இந்திய வீடுகளுக்கு புதிதல்ல. பல நூற்றாண்டுகளாக வெண்கள பாத்திரம் இந்திய வீடுகளில் பயன்படுத்தப்பட்டு தான் வருகின்றன. இந்த உலோகத்தின் சிறப்பு என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஆயுர்வேதங்களில் சுத்திகரிப்பு பண்புகள், மன அழுத்தத்தை குறைக்க, முழுமையான சிகிச்சை முறைக்கு உலோக பாத்திரங்களே பரிந்துரைக்கப்படுகின்றன. வெண்கல பாத்திரத்தின் நன்மைகளை பார்க்கலாம்.

ஆயுர்வேதங்களின் படி, வெண்கல பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கான 7 காரணங்கள் குறித்து பார்க்கலாம். இந்தியாவின் பழங்கால மருத்துவ முறைபடி வெண்கல பாத்திரங்களில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இது ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.

வெண்கல பாத்திரத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

  1. குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
  2. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  3. அழற்சி எதிர்ப்பு பண்புகள்.
  4. கொழுப்பை குறைக்கும்.
  5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
  6. பராமரிக்க எளிதானது

ப்ரான்ஸ் பாத்திரத்தின் நன்மைகள் இதோ

குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

உங்கள் குடல் ஆரோக்கியம் உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பராமரிக்க உதவும். வெண்கல பாத்திரங்களைப் பயன்படுத்துவது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வெண்கல சமையல் பாத்திரங்களை சமைத்த உணவுகள் சுத்திகரிக்கப்பட உதவுகிறது. அதாவது நச்சுத்தன்மை நீக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது செரிமான செயல்முறைக்கு மேலும் உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

உலோக பாத்திரம் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது, இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படும். மேலும் இந்த அதிசய உலோகம் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையான இரத்த சோகையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

வெண்கல உலோகம் என்பது தாமிரம் மற்றும் தகரத்தின் கலவையாகும், இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது, இது மேலும் நச்சுகளை அகற்றவும் சில தோஷங்கள் அல்லது ஆற்றல்களை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. தாமிரத்தின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தசை வலி, மூட்டு வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

கொழுப்பை குறைக்கும்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், வெண்கல பாத்திரம் அல்லது டம்ளரில் இருந்து தண்ணீர் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், இந்த வெண்கலப் பாத்திரங்களில் காணப்படும் தாமிரம், கொழுப்பை உடைத்து, எடையைக் குறைக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தூய வெண்கல பாத்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், மன அழுத்தம் குறைவதோடு உடல் ஆற்றல் மட்டம் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதோடு இவை அனைத்தும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இந்த உலோகத்தில் சமைப்பதிலும் சாப்பிடுவதிலும் தினசரி பயன்படுத்துவதன் மூலமும் குறைவான நோய் மற்றும் உகந்த ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும்.

பராமரிக்க எளிதானது

பித்தளை, தாமிரம், மங்கு மற்றும் கண்ணாடி பாத்திரங்களுடன் ஒப்பிடும்போது, வெண்கலத்தை பராமரிப்பது எளிது. வெண்கல கலவை அரிப்பை எதிர்க்கும் மற்றும் நீண்ட காலம் நீடிக்கும்.

Pic Courtesy: FreePik

Read Next

Benefits of Kissing: முத்தம் கொடுப்பது உடல் எடையை குறைக்க உதவுமாம்!

Disclaimer

குறிச்சொற்கள்