Clay Pot Cooking: மண்பானை உணவுக்கு தனி ருசி மட்டுமல்ல! இந்த சூப்பரான நன்மைகளும் இருக்கு

  • SHARE
  • FOLLOW
Clay Pot Cooking: மண்பானை உணவுக்கு தனி ருசி மட்டுமல்ல! இந்த சூப்பரான நன்மைகளும் இருக்கு


பொதுவாக சாதாரண பாத்திரங்களில் சமைப்பதை விட மண் பானங்களில் சமைக்கும் சமையல் மிகவும் சுவையாக இருப்பதை உணரலாம். மண் பாத்திரங்களில் சமைப்பது சுவையுடன் கூடிய பல்வேறு நன்மைகளைத் தருகிறது. மண் பாத்திரத்தில் உணவு தயாரிக்கப்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் மண்பானைகளில் சமைப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Ghee For Healing Wound: உடல் மற்றும் மன காயங்களுக்கு சிறந்த தீர்வு தரும் நெய்! எப்படி தெரியுமா?

மண் பானைகளில் சமைப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

பழங்காலத்திலிருந்தே மண் பானைகளில் உணவு சமைக்கப்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அதன் படி, மண் பானைகளில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வதன் மூலம், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். மேலும் இது பல்வேறு நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. உலகம் முழுவதும் மண் பானைகளில் சமைப்பது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளில், மற்ற பாத்திரங்களுடன் ஒப்பிடுகையில் மண் பானைகளில் உணவுகளை சமைப்பது பல நன்மைகளைத் தருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இது குறித்து பெங்களூரு ஃபோர்டிஸ் மருத்துவமனையின் டயட்டீஷியன் ரிங்கி குமாரி அவர்கள் கூறுகையில், “மண் பானைகளில் சமைக்கப்படும் உணவில் சல்பர், இரும்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மண் பானைகளில் உணவுகள் எளிதில் சமைக்கப்படுவது மற்றும் மெதுவாக சமைப்பது, குறைந்த எண்ணெய் பயன்பாடு என பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. மண் பானைகளில் சமைக்கப்படும் உணவுகளில் உள்ள இயற்கை எண்ணெய்கள் நீங்காது. எனவே இது உணவுக்கு மிகவும் நன்மை பயக்கும்” என்று கூறியுள்ளார். பல்வேறு ஆய்வுகள் மூலம் கிடைத்த தகவல்களின் படி, மண்பானைகளில் உணவு தயாரிப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளைக் காணலாம்.

மண்பானையில் செய்த சமையல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உணவு சுவையை கூட்டுவதற்கு

இந்தியாவில் பல்வேறு மசாலா மற்றும் எண்ணெய்களின் பயன்பாட்டைப் பயன்படுத்துகிறோம். இவை அனைத்தும் உணவை மிகவும் சுவையாக மாற்ற உதவுகிறது. மண் பானைகளில் சமைக்கப்படும் உணவின் சுவை மற்றும் மணம் அப்படியே இருக்கும். மண் பாத்திரங்களில் உணவு சமைப்பது, அதன் pH அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. எனவே, இதில் தயாரிக்கப்படும் உணவு ஆரோக்கியமானதாக மட்டுமல்லாமல், நறுமணமும் சிறந்ததாக இருக்கும். அதன் படி, மண் பானைகளில் சமைக்கும் போது இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உணவில் அழிவதில்லை.

ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்க

மண் பானைகளில் உணவு மெதுவாக சமைக்கப்படுகிறது. இதனால் உணவு மற்றும் பாத்திரங்களில் போதுமான ஈரப்பதம் இருக்கும். இது தவிர, மண் பானைகளில் உள்ள நுண்ணிய துளைகள் சரியாக சுற்றுவதற்கு அனுமதிக்கின்றன. இதன் காரணமாக உணவில் உள்ள சத்துக்கள் சரியாக பாதுகாக்கப்படுகிறது. பெரும்பாலும், உலோகப் பாத்திரங்களில் உணவைச் சமைப்பது உணவின் அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களையும் அழிக்கலாம். இதற்கு மண் பானைகளில் உணவு சமைப்பதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிலும் அரிசி மற்றும் அசைவப் பொருட்களை மண் பானைகளில் சமைப்பது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: High Blood Pressure: உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

இதய ஆரோக்கியத்திற்கு

மண் பானைகளில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்ளல் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மண்பானைகளில் சமையல் செயல்முறை மெதுவாக இருப்பதுடன், சமைக்கும் உணவுகளில் மிகக் குறைந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. எனவே, மண் பானைகளில் சமைக்கப்படும் உணவின் ஈரப்பதம் மற்றும் இயற்கையான எண்ணெய் அப்படியே இருக்கும். எனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மண் பானைகளில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்ளலாம்.

அமிலத்தன்மை பிரச்சனையைத் தடுக்க

பல ஆய்வுகளில் மண் பானைகளில் சமைக்கப்படும் உணவுகள் அமிலத்தன்மை பிரச்சனையைத் தவிர்க்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில், மண் பானைகளில் இயற்கையாகவே கார பொருட்கள் உள்ளன. இவை அதன் pH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. எனவே, மண்பானையிலிருந்து தயாரிக்கப்படும் உணவை உட்கொள்வதால், அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். சமச்சீரான pH அளவு, அமிலத்தன்மை பிரச்சனைக்கு நன்மை பயக்கும்.

நீரிழிவு நோய் அபாயத்தைத் தவிர்க்க

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மண் பானைகளில் சமைக்கப்படும் உணவுகள் நீரிழிவு பிரச்சனைக்கு மிகுந்த நன்மை பயக்கும். மண் பானையில் உணவு சமைக்கும் செயல்முறை மெதுவாக இருப்பதால், உணவு சரியான முறையில் சமைக்கப்படுகிறது. இவ்வாறு சரியான முறையில் சமைத்த உணவு உட்கொள்ளல் இன்சுலின் உற்பத்தி சீராக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் உற்பத்தி சீராக இருப்பது மிகவும் அவசியமாகும். இது தவிர, மண் பானை உணவு நீரிழிவு நோயாளிகளின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு மண் பானைகளில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது என்று அறிவியல் ரீதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், மண்பானை சமையல் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: உயிரைக்குடிக்கும் கள்ளச்சாராயம்! மெத்தனால் விஷத்தின் முதலுதவி, சிகிச்சை முறை!

Image Source: Freepik

Read Next

Karnataka Dengue Cases: கர்நாடகாவில் எகிறும் டெங்கு.! 6 மாதத்தில் 200.! என்ன தான் தீர்வு.?

Disclaimer