How Does Methanol Affect The Human Body: “மது அருந்துவது உடல் நலத்திற்குக் கேடு” என்று பல இடங்களில் உரக்க குரலில் சொன்னாலும், அது நடைமுறையில் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏன் மது அருந்துகிறீர்கள் என்று சிலரைக் கேட்டால் மனக்கவலை, வருத்தம் என்பர். இன்னும் சிலரைக் கேட்டால் போதைக்காக என்பர். அரசு அனுமதியின்றி உரிமம் இல்லாமல் மதுவை காய்ச்சுவதே கள்ளச்சாராயம் எனப்படுகிறது. இதில் போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது அது விஷமாக மாறிவிடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியதாகும். ஆனால், மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin Deficiency: எந்த வைட்டமின் அல்லது மினரல் குறைபாட்டால் உடலில் வலி ஏற்படுத்துகிறது தெரியுமா?
மெத்தனால் என்றால் என்ன?
மெத்தில் ஆல்கஹால், கார்பினால், மரச்சாராயம் போன்ற பெயர்களால் மெத்தனால் அழைக்கப்படுகிறது. இது மரக்கட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மரத்தில் உள்ள சில கார்போஹைட்ரேட்டுகள், மெத்தனால் உருவாகக் காரணமாக இருக்கிறது. எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை வாய்ந்ததே இந்த மெத்தனால் ஆகும். இது ஒரு காலத்தில் வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், இதை மது போதைக்காக சாராயத்தில் கலக்கின்றனர். இதன் அதிகப்படியான உட்கொள்ளல் உயிரிழக்கும் அபாயத்தை ஏற்படுத்தலாம். தற்போது கள்ளக்குறிச்சியில் இந்த மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்துள்ளனர்.
பொதுவாக மெத்தனால் ஆனது வேதியியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் நாம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் வார்னிஷ், சலவை சோப்பு மற்றும் ஹேண்ட் வாஷ் உள்ளிட்டவற்றில் மெத்தனால் உள்ளது. குறிப்பாக, இந்த பொருள்களில் மெத்தனால் அனுமதிக்கப்பட்ட அளவு 0.1% ஆகும். இந்த அளவைத் தாண்டினால், இரண்டு நிலைகளில் பாதிப்புகள் ஏற்படும். முதலாவதாக, மெத்தனாலை உட்கொண்டு வெளியே தெரியாத நிலை. இதில் பாதிப்பு நேரம் 30 மணி நேரம் வரை நீடிக்கலாம். இதில் பாதிப்புகள் பெருமளவில் வெளியே தெரியாது. அடுத்து விஷத்தன்மை நிலை. இதில் பாதிப்பு நேரம் 1 மணி நேரம் முதல் இரண்டு நாள்கள் வரை நீடிக்கும். இந்நிலையில் வயிற்று வலி, வாந்தி, பார்வைக் குறைபாடு, நினைவாற்றல் இழப்பு, மாரடைப்பு, கோமா மற்றும் உயிரிழப்பு போன்றவை ஏற்படலாம்.
மெத்தனால் எவ்வாறு மரணத்தை ஏற்படுத்துகிறது?
பொதுவாக மெத்தனால் உட்கொண்ட உடனேயே மரணம் ஏற்படுத்துவதில்லை. தாமதமான மரணம் நிகழ்வதற்கு பல காரணங்கள் உள்ளது.
- மெத்தனால் பாதிப்பிற்கான அறிகுறி உடனேயே தெரியாது. இது உடலில் வினைபுரிந்து அறிகுறிகளை ஏற்படுத்துவதற்குத் தாமதமாகலாம். இது அதனை உட்கொண்டவர்களின் உடல்நிலையைப் பொறுத்தே அமைகிறது. இந்த தாமதமான அறிகுறியால் சிகிச்சை முறையும் தாமதமாகிறது. இதனால் தாமதமான உயிரிழப்பும் நிகழ்கிறது.
- மெத்தனால் உடலில் நுழைந்து வளர்ச்சிதைமாற்றமடைந்து, அதன் பின்னரே பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்குகிறது.
- இது உடலில் 8 நாள்கள் வரை இருக்கும். இதில் உடல் மெத்தனாலை ஃபார்மால்டிஹைட் மற்றும் ஃபார்மிக் அமிலமாக மாற்றுகிறது. இது பெரிய அளவில் நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: World Sickle Cell Day 2024: குழந்தைகளைப் பாதிக்கும் சிக்கிள் செல் அனிமியா நோய்க்கான அறிகுறிகளும், காரணங்களும் இதோ!
மெத்தனால் விஷத்திற்கான சிகிச்சை
யாராவது மெத்தனால் விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகித்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியமாகும். மேலும் இதன் ஆரம்ப கால சிகிச்சையின் மூலம் ஒரு நல்ல விளைவுக்கான வாய்ப்பைப் பெறலாம். இந்த சிகிச்சை முறை ஒரு நபரை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஒரு மாற்று மருந்தாக fomepizole பயன்படுத்தப்படுகிறது. இந்த fomepizole கிடைக்கவில்லையெனில் எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை முறைகள் உடலில் மெத்தனாலின் வளர்சிதை மாற்றத்தைத் தடுப்பதற்கும், உடலிலிருந்து விரைவாக மெத்தனாலை அகற்றுவதற்கும் உதவுகிறது.
மெத்தனால் உட்கொள்வதன் முதலுதவி நடவடிக்கைகள்
மெத்தனால் உள்ளிழுத்தல்
மெத்தனால் உள்ளிழுத்த நபரை புதிய காற்றுக்கு நகர்த்த வேண்டும். தேவைக்கேற்ப ஆடைகளை அவிழ்த்து, பாதிக்கப்பட்டவரை வசதியான நிலையில் வைக்க வேண்டும். இந்நிலையில் மருத்துவ உதவி பெறலாம். சுவாசிக்க கடினமாக இருப்பின், ஆக்ஸிஜன் கொடுக்கலாம்.
தோல் தொடர்பு
இதில் பாதிக்கப்பட்ட பகுதியை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும். 15-20 நிமிடங்கள் தண்ணீரைப் பயன்படுத்தி, பிறகு தோலை மெதுவாக தேய்க்கவும். இதில் எரிச்சல் தொடர்ந்தாலோ அல்லது இது தொடர்பாக கவலை இருப்பின், உடனடியா மருத்துவ உதவியைப் பெறலாம்.
கண் தொடர்பு
வெளிப்படாத கண்களைப் பாதுகாக்க வேண்டும். இதில் குறைந்தபட்சம் 15-20 நிமிடங்களுக்கு கண்களை தண்ணீரில் கழுவலாம். அதன் பிறகு மேல் மற்றும் கீழ் இமைகளைத் தூக்குதலின் போது எரிச்சல் ஏற்படுமாயின் மருத்துவ உதவியை நாடலாம்.
மெத்தனாலை விழுங்கினால்
மெத்தனால் விழுங்கிய பிறகு வாயை நன்கு துவைக்க வேண்டும். ஆனால், வாந்தி எடுக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக வெளிப்படுத்த வேண்டும். கழுவிய பின் தண்ணீர் அல்லது பாலுடன் வாயை நீர்த்துப்போகச் செய்யலாம். பிறகு மருத்துவ உதவி பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Kalla Sarayam Death News: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு.!
Image Source: Freepik