$
Heart Attack First Aid: இதயம் தொடர்பான நோய்கள் இப்போது முதியவர்களிடம் மட்டுமல்ல, இளையவர்களிடமும் வேகமாக அதிகரித்து வருகின்றன. சமநிலையற்ற உணவுப்பழக்கம், பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் புகைபிடித்தல் போன்றவற்றால், இளம் வயதினரிடையே கூட மாரடைப்பு, இதயம் செயலிழப்பு மற்றும் இதயத் தடுப்பு போன்ற பிரச்சனைகள் காணப்படுகின்றன.
மாரடைப்பு என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் பயந்து, நோயாளிக்கு சரியாக உதவ முடியாமல் தவிக்கின்றனர். மாரடைப்பு ஏற்பட்டால் நோயாளிக்கு முறையான முதலுதவி (Heart Attack First Aid) அளித்தால், அவரது உயிரைக் காப்பாற்ற முடியும். சரியான நேரத்தில் முதலுதவி செய்வதன் மூலம், நோயாளியின் இதயம் சேதமடையாமல் காப்பாற்ற முடியும், மேலும் நோயாளியின் இறப்பு அபாயத்தையும் குறைக்க முடியும்.
மாரடைப்பு முதலுதவி வழிகள்
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட உடன் முதலுதவி செய்வது பயன் உள்ளது என்றாலும் அதை முறையாக கற்றறிந்திருக்க வேண்டும். அதேபோல் மாரடைப்பு ஏற்பட்ட உடன் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு பின் முதலுதவியை நாடலாம். மாரடைப்பு ஏற்பட்டால் நோயாளிகளுக்கு முதலுதவி செய்வது எப்படி என பார்க்கலாம்.

மாரடைப்பு ஏற்பட்டால் நோயாளிகளுக்கு முதலுதவி செய்வது எப்படி?
மாரடைப்பு ஏற்பட்டால், முதலில், நோயாளியை குளிர்ந்த இடத்தில் படுக்க வைத்து, மருத்துவமனை அவசர அல்லது ஆம்புலன்ஸை அழைக்கவும்.
நோயாளியின் ஆடை இறுக்கமாக இருந்தால் அல்லது காலர் மூடப்பட்டிருந்தால், அதைத் தளர்த்த முயற்சிக்கவும். சற்று காற்றோமாக இருப்பதை உறுதி செய்யவும்.
நோயாளி சுயநினைவை இழந்திருந்தால், அவரது இதயம் செயல்பட CPR கொடுக்கவும்.
CPR என்பது மார்பில் கைகளை வைத்து அழுத்தம் கொடுக்கும் ஒரு வழியாகும் மற்றும் வாய் வைத்து ஊதி சுவாசனை வழங்கும் ஒருமுறையாகும். அனைவரும் இதற்கு முறையான பயிற்சி எடுத்துக் கொள்வது நல்லது.
நோயாளியின் இதயத்துடிப்பைப் பரிசோதித்த பிறகு, அவருக்கு மெல்லுவதற்கு ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுங்கள்.
இது தவிர, நோயாளியை விரைவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
மாரடைப்பு அறிகுறிகள்
சரியான அளவு ஆக்ஸிஜன் இதயத்திற்கு வழங்கப்படாவிட்டால், அது இதய திசுக்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதன் காரணமாக நோயாளி மாரடைப்புக்கு ஆளாகிறார். மாரடைப்பு வருவதற்கு முன், நோயாளி பல அறிகுறிகளை சந்திப்பார்கள்.
மார்பில் பாரம்
கடுமையான மார்பு வலி
சுவாசக் கோளாறு
திடீர் வியர்வை
கவலை மற்றும் அமைதியின்மை
குமட்டை மற்றும் வாந்தி பிரச்சனை
மாரடைப்பு ஏற்பட்டால், முதல் 15 நிமிடங்களுக்குள் நோயாளிக்கு முதலுதவி அளித்தால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியும். மாரடைப்பு நோயாளிக்கு முதலுதவி செய்யும்போது அவசரப்படக்கூடாது. நோயாளியை விரைவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பது சிறந்தது.
Image Source: FreePik