இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோல் செய்யும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் இதோ!

  • SHARE
  • FOLLOW
இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோல் செய்யும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் இதோ!


Potassium rich foods to control blood pressure: இன்றைய நவீன உலகில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தைக் கணிசமாக பாதிக்கிறது. குறிப்பாக, இது ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதன் படி, உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் பொட்டாசியமும் ஒன்று. இது உடலுக்கு ஒரு முக்கியமான கனிமமாகும். இந்த பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே அன்றாட உணவில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகிறது. இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கலாம். இது தவிர இதய ஆரோக்கியம், தசை மற்றும் நரம்பு செயல்பாடு மற்றும் எலும்பு ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது. இந்த முக்கிய ஊட்டச்சத்துக்கள் உடலின் செல்களைச் சுற்றி ஊட்டச்சத்துக்க்ள் மற்றும் கழிவுகளை நகர்த்த உதவுகிறது. இதில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இயற்கையான முறையில் வீட்டிலேயே இரத்த அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள்

வாழைப்பழம்

தினந்தோறும் வாழைப்பழம் உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதற்கு இதில் உள்ள பொட்டாசியம் சத்துக்களே காரணமாகும். வாழைப்பழம் குறைந்தளவு சோடியத்தையும் அதிகளவு பொட்டாசியத்தையும் கொண்டுள்ளது. இது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. வாழைப்பழத்தை உட்கொள்வது உடலில் திரவம் மற்றும் சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது.

பச்சை காய்கறிகள்

பொதுவாக பச்சை இலை காய்கறிகள் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும். இந்த இலை கீரைகளில் அதிகளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. எனவே உடலில் பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரை, ப்ரோக்கோலி, மற்றும் பிற பச்சை இலை காய்கறிகள் உள்ளிட்டவற்றை உட்கொள்ளலாம்.

மாதுளை

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மாதுளை மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. தினமும் மாதுளம்பழத்தை உட்கொண்டு வருவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. மாதுளையை உட்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதனுடன், இதில் நிறைந்த சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Keto Diet Causes: கீட்டோ டயட் இருப்பது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமா?

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நீர் எலக்ட்ரோலைட்டுகளின் சிறந்த மற்றும் இயற்கையான ஆதாரமாகும். எனவே, இது கார்பனேற்றப்பட்ட ஆற்றல் பானங்களுக்கு சிறந்த ஆரோக்கியமான மாற்றாக அமைகிறது. இவை உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், எடையைக் கட்டுப்படுத்த மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

இது உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் சிறந்த உணவுப்பொருளாகும். ஏனெனில், இதில் அதிகளவிலான பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

மீன்

சாலமன் மீன் போன்றவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகக் கருதப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இது தவிர நினைவாற்றலை கூர்மைப்படுத்தவும் மீன்கள் உதவுகிறது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்த வகை பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் தண்ணீர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்குமா?

Image Source: Freepik

Read Next

இயற்கையான முறையில் வீட்டிலேயே இரத்த அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?

Disclaimer