$
Is Drinking Water In Plastic Bottles Causes BP: பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆம், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் காணப்படும் தொழில்துறை இரசாயனங்கள் மனித ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஊகித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னரே கலிபோர்னியா பாலிடெக்னிக் ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றில் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் அருந்து இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா என்பதற்கான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது.
இதற்கு அடுத்த விளைவாக, நீரிழிவுக்கு அடுத்து, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் தண்ணீரால் இரத்த அழுத்தம் அதிகமானதாகக் கண்டறிப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் உள்ள டான்யூப் தனியார் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து குடிக்கும் போது மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இரத்த ஓட்டத்தில் நுழைகிறது. மேலும் ஆய்வில் பிளாஸ்டிக் பாட்டில்களில் திரவங்களைத் தவிர்த்த பங்கேற்பாளர்கள் இரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது. டான்யூப் தனியார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் உணவு மற்றும் தண்ணீரில் காணப்படும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ், சிறிய துகள்கள் ஆரோக்கியத்திற்கு கவலை அளிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Heart Diseases Prevention: உங்களுக்கு இதய நோய் வரவே கூடாதா? அப்ப நீங்க இத ஃபாலோ பண்ணுங்க
மைக்ரோபிளாஸ்டிக் விளைவுகள்
இந்த துகள்கள் முன்னரே ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், இதய பிரச்சினைகள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு, பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் உயர் இரத்த அழுத்த அளவுகளுக்கு இடையிலான உறவை எடுத்துக் காட்டுகிறது. ஆய்வின் முடிவில் முதன்முறையாக, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது இரத்த ஓட்டத்தில் பிளாஸ்டிக் துகள்களின் அளவு குறைவதால் நிகழ்கிறது என குழு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது என நியூயார்க் போஸ்ட்டில் தெரிவித்துள்ளது.

குறைந்த பிளாஸ்டிக் நுகர்வு
ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி, இரத்த ஓட்டத்தில் இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு நேரடியாக பங்களிக்கக்கூடும் எனக் கூறுகின்றனர். பிளாஸ்டிக் நுகர்வைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க பங்களிப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மேலும் குறிப்பிட்டதாவது, “கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், பிளாஸ்டிக் நுகர்வு குறையும் போது இரத்த அழுத்தம் குறைகிறது. இதற்கு முக்கிய காரணம் இரத்த ஓட்டத்தில் உள்ள பிளாஸ்டிக் துகள்களே உயர் இரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கக்கூடும் என்பதாகும்” என தெரிவித்தனர்.
இந்த பதிவும் உதவலாம்: காற்று மாசுபாட்டால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? மருத்துவர் கூறும் கருத்து என்ன?
எப்படி தடுப்பது?
எனவே ஆய்வு முடிவின் படி, ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க, பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். முந்தைய கண்டுபிடிப்புகளில் வெளியான கருத்தின் படி, ஒவ்வொரு வாரமும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட திரவங்கள் மூலம் மனிதர்கள் சுமார் 5 கிராம் மைக்ரோபிளாஸ்டிக்ஸை உட்கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மைக்ரோபிளாஸ்டிக் உடலில் நுழைவதைத் தடுக்க உதவும் பரிந்துரைக்கப்பட்ட முறைகளில், குழாய் நீரை கொதிக்கவைத்து வடிகட்டிய பிறகு அருந்துவது பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த நடவடிக்கைகளின் உதவியுடன் மைக்ரோ மற்றும் நானோபிளாஸ்டிக்குகளின் உள்ளடக்கத்தை 90% வரை குறைக்கலாம்.
இதிலிருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் சுகாதார விளைவுகளை மேம்படுத்த முடியும் என்ற முக்கியத்துவத்தை ஆய்வு வலியுறுத்துகிறது. மேலும், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம், குழாய் நீரை வடிகட்டி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தனிநபர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மைக்ரோபிளாஸ்டிக் உட்கொள்ளலைக் குறைக்க முடியும்.

இவ்வாறு ஒருவர் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரும் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிப்போம். ஆரோக்கியமான நல்வாழ்வைப் பெறுவோம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களே உஷார்! இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளாம்