Cardiovascular Disease Due To Air Pollution: பொதுவாக, காற்று மாசுபாடு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாசுபாடு நிறைந்த காற்றை சுவாசிப்பதன் காரணமாக உடல் ஆரோக்கியம் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படலாம். அதாவது நாம் அழுக்கு காற்றை சுவாசிக்கும்போது, அது உடலின் பல பாகங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் உடல் உறுப்புகளில் இதயனும் அடங்கும். இந்த அழுக்குக் காற்றால் இதயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்னதாக, காற்று மாசுபாடு பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.
காற்று மாசுபாடு என்றால் என்ன?
காற்று மாசுபாடு என்பது காற்றில் அழுக்கு துகள்கள் நிரம்பியுள்ளதைக் குறிக்கிறது. இந்த துகள்கள் சுவாசத்தின் போது நம் உடலில் நுழைகிறது. பொதுவாக காற்றில் இருக்கக் கூடிய இந்தத் துகள்கள் மிகவும் சிறியவை ஆகும். ஆனால், இவை அதிகளவில் காணப்படலாம். அதன் படி, காற்றில் உள்ள மாசுக்களாக நைட்ரஜன் ஆக்சைடு, ஓசோன், சல்பர் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்றவை அடங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ரொம்ப அதிகம் வேலை செஞ்சிட்டே இருந்தா இதயத்துல பிரச்சனை கன்ஃபார்ம்! எப்படி தவிர்ப்பது?
பெரும்பாலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் புகை, பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களின் புகை போன்றவையே காற்று மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்களாக அமைகிறது. இந்த மாசுபாடுகள் அனைத்தும் காற்றில் அதிகளவில் கரைகிறது. இந்த மாசுபாடு நிறைந்த காற்றை நாம் சுவாசிப்பதால் நம் பல்வேறு உடல் உறுப்புகளும் பாதிப்படைகிறது. காற்று மாசுபாடு காரணமாக இதய ஆரோக்கியம் எவ்வாறு பாதிப்படைகிறது என்பது குறித்து சாரதா மருத்துவமனையின் இருதயவியல் துறையின் தலைவர் மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் சுபேந்து மொஹந்தி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
காற்று மாசுபாட்டால் இதய பாதிப்பு
பொதுவாக காற்று மாசுபாடு நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடியதாகும். இதன் காரணமக, சுவாசிப்பதில் சிரமம் உண்டாகலாம். மேலும், இதனால் இருமல் பிரச்சனையும் தொடங்கி, ஆஸ்துமா நோயாளிகளின் நிலையை மேலும் மோசமாக்குகிறது.
பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, “நாம் சுவாசிக்கும் போது காற்றில் பரவியுள்ள சிறு துகள்கள் நமது மூக்கு வழியாக உள்நுழைந்து இரத்த நாளங்களுக்குள் செல்கிறது. பின் இதிலிருந்து இரத்த ஓட்டத்தின் மூலம், நுரையீரல் மற்றும் இதயத்தை சென்றடைகின்றன. இதன் காரணமாகவே சுவாச பிரச்சனைகள் மற்றும் இதய நோய் அபாயம் அதிகரிக்கிறது. மேலும் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதன் காரணமாக, இரத்த நாளங்கள் கடினமாகி இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். இதனால் இரத்த ஓட்டம் தடைபட்டு உடல் உறுப்புகள் பிரச்சனைகளுக்கு உள்ளாகிறது. இது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத்தை பம்ப் செய்வதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால், இதயம் ஒழுங்கற்ற முறையில் துடிக்கும் பிரச்சனை ஏற்படலாம்.”
இதய ஆரோக்கியத்திற்கு என்ன செய்யலாம்?
இன்றைய காலகட்டத்தில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாசுபாட்டை நம்மால் தடுக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. இந்த சூழ்நிலையில், நாம் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க சில சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
புகைபிடிப்பதைத் தவிர்ப்பது
காற்று மாசுபாட்டை அதிகரிப்பதற்கு புகைபிடிப்பதும் காரணமாகும். இந்நிலையில், தொடர்ந்து புகைபிடிப்பது இதய ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான மற்றும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே இதனைத் தவிர்க்க புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல்
இதய ஆரோக்கியம் மட்டுமல்லாமல் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே கொழுப்பு அதிகமுள்ள உணவைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும், இது உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் போன்ற மற்ற சில உடல் நலப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Heart Diseases Prevention: உங்களுக்கு இதய நோய் வரவே கூடாதா? அப்ப நீங்க இத ஃபாலோ பண்ணுங்க
உடற்பயிற்சி
உடற்பயிற்சியின் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். எனவே தினமும் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இருதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய முக்கியமானதாகக் கருதப்படும் பயிற்சிகள் மேற்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்.
கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு
இதய ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்த, இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைப்பதுடன், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதும் மிகவும் முக்கியமாகும். உடலில் கொலஸ்ட்ரால் அளவை சமநிலையில் வைத்திருப்பதன் மூலம், பல்வேறு உடல் நல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
வழக்கமான பரிசோதனை
இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில் ஒரு சிறிய அறிகுறி தென்படுமாயின், உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இதய ஆரோக்கியத்தைப் பரிசோதனை செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது அவசியமாகும். இதன் மூலம் சாத்தியமான இதய நோய்களைத் தவிர்க்க முடியும். அதே சமயம், இதயம் தொடர்பான நோய் ஏதேனும் ஏற்பட்டால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிகவும் முடியும்.
இது தவிர, பெட்ரோல், டீசல் போன்ற வாகனங்களிலிருந்து வரும் புகை உள்வாங்குதலைக் குறைக்க வேண்டும். இது போன்ற பல்வேறு வழிமுறைகளின் உதவியுடன் காற்று மாசுபாட்டால் ஏற்படும் இதய பாதிப்பைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Silent Heart Attack: அமைதியான மாரடைப்பு பற்றி தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம்
Image Source: Freepik