Health risks of air pollution during diwali: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகையாக தீபாவளி அமைகிறது. தீபாவளி வந்துவிட்டாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். இந்நன்னாளில் புத்தாடை அணிந்து, இனிப்பு உணவுகளை சாப்பிட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வர். அந்த அளவிற்கு தீபாவளி பண்டிகைக்கான உற்சாகம் ஈடு இணையற்றதாக அமைகிறது. இத்தகைய சிறப்பான நன்னாளில் நாம் மிகவும் கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். அதிலும் தீபாவளி பண்டிகையில் வெடிக்கப்படும் பட்டாசு ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
பட்டாசுக்களிலிருந்து வெளியேறும் புகையால் காற்று மாசு அதிகரித்து, ஆரோக்கியத்தைக் கணிசமாக பாதிக்கிறது. இது சாதாரணமாக தோன்றினாலும், சுவாச ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், மனநல பாதிப்புகள் என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில், தீபாவளியின் போது பட்டாசுகள் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் நுண்ணிய துகள்களை வெளியிடுகிறது. இதனால் காற்று மாசு அளவுகள் அதிகரித்து மோசமான பார்வை மற்றும் புகை நிறைந்த காற்றுடன் குறுகிய கால விளைவுகளுடன், நீண்ட கால சுகாதார தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஆனால், நாம் சில சரியான யுக்திகளைப் பின்பற்றுவதன் மூலம் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Diwali Special: தீபாவளி அன்று ஏன் நல்லெண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் தெரியுமா? தெரிஞ்சிக்கலாம் வாங்க..
தீபாவளி காற்று மாசுபாடு எவ்வாறு உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது?
இதய பாதிப்புகள்
தீபாவளி தொடர்பான மாசுபாட்டின் காரணமாக நுரையீரல் பிரச்சனையுடன் இதய ஆரோக்கியத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆய்வு ஒன்றில், காற்று மாசுபாட்டின் நீண்டகால வெளிப்பாட்டினால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. பட்டாசுகளால் வெளியிடப்படும் சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற மாசுக்கள், வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு பங்களிக்கிறது. இது இதய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
WHO-வின் கூற்றுப்படி, பட்டாசு துகள்கள் இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், ஏற்கனவே இதய பாதிப்பு நிலைமைகள் உள்ளவர்களுக்கு ஆபத்தை மேலும் அதிகரிக்கலாம். குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் முன்பே இருக்கும் இதயக் கோளாறுகள் உள்ளவர்கள் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
முக்கிய கட்டுரைகள்
சுவாச பாதிப்புகள்
தீபாவளியின் போது காற்று மாசுபாடுகளின் அதிகரிப்பு, நேரடியாக சுவாச ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இந்த நுண்ணிய துகள்கள் நுரையீரலில் ஆழமாக ஊடுருவி இரத்த ஓட்டத்தில் கூட நுழைகிறது. காற்று மாசுபாடு காரணமாக, , நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச நிலைமைகள் அதிகரிக்கலாம். ஆய்வின் படி, முக்கிய இந்திய நகரங்களில் தீபாவளிக்குப் பிறகு ஆஸ்துமா தொடர்பான அவசர சிகிச்சைகளின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தற்போதுள்ள சுவாசக் கோளாறு உள்ளவர்கள் ன அறிகுறிகளை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகரிக்கலாம். மேலும், ஆரோக்கியமான நபர்கள் இருமல், மூச்சுத்திணறல் மற்றும் காற்றில் உள்ள புகை மற்றும் மாசுபாடுகளால் சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றால் பாதிக்கப்படலாம்.
குழந்தைகள், பெரியவர்களைப் பாதிப்பது
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறிப்பாக மாசு தொடர்பான சுகாதார பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில், இவர்கள் குறைந்த நோயெதிர்ப்பு அமைப்பைப் பெற்றிருப்பர். மேலும் நுண்ணிய துகள்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். ஆய்வு ஒன்றில், காற்று மாசுபாடு காரணமாக குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சியைத் தடுக்கிறது. இது வாழ்க்கையின் பிற்பகுதியில் நாள்பட்ட சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். வயதானவர்கள் குறிப்பாக, ஏற்கனவே வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அபாயங்களைச் சந்திக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Diwali Crackers: தீபாவளிக்கு வெடி வெடிக்கும் முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
மன ஆரோக்கிய பாதிப்பு
தீபாவளி மாசுபாட்டின் விளைவுகள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். ஆய்வு ஒன்றில், அதிக மாசு அளவுகளை நீண்டகாலமாக வெளிப்படுத்துவதால் மனச்சோர்வு, அதிகரித்த கவலை மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியுடன் தொடர்புடையதாகும். மூளையின் செயல்பாடுகளை மாற்றுவதில் காற்று மாசுபாடு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இளைய மக்களில் மனநிலைக் கோளாறுகளை மோசமாக்கலாம் என WHO சுட்டிக்காட்டுகிறது. மேலும், ஒலி மாசுபாடு காரணமாக, மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படலாம். ஆய்வு ஒன்றில், உரத்த சத்தத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவது மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிப்பு, தூக்கக் கலக்கம் மற்றும் குறைந்த வாழ்க்கைத் தரத்திற்கு வழிவகுக்கிறது.
தீபாவளியில் மாசுபாட்டைக் குறைப்பதற்கான வழிகள்
காற்று சுத்திகரிப்பாளர்களின் பயன்பாடு
பட்டாசு துகள்களைக் குறைக்கக் கூடிய காற்று சுத்திகரிப்பாளர்களைப் பயன்படுத்துவதுமிகவும் முக்கியமாகும். இது உட்புற மாசுபாட்டின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். உட்புறக் காற்றின் தரத்தை மேம்படுத்தவும், சிறந்த தூக்கத்திற்கும் உதவும் வகையில் இரவில் இதை பயன்படுத்தலாம்.
பசுமை பட்டாசுகளைத் தேர்வு செய்வது
சில பசுமை பட்டாசுகளைத் தேர்ந்தெடுப்பது பாரம்பரிய பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது குறைவான புகையை உருவாக்குகிறது. மாசுபாட்டை 30% குறைக்கிறது. இவை குறைவான துகள்களை வெளியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பான தேர்வாக அமைகிறது.
வெளிப்புற செயல்பாடுகளை வரம்பிடுதல்
தீபாவளி சமயத்தில் மாசுபாட்டின் அளவு அதிகமாக இருக்கும் போது வெளிப்புற செயல்பாடுகளை அதிலும் குறிப்பாக, சைக்கிள் ஓட்டுதல் அல்லது ஜாகிங் போன்ற கடினமான செயல்களைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் மாசுபாட்டிலிருந்து விடுபடலாம்.
சரியான காற்றோட்டத்தை பராமரிப்பது
அதிக மாசு உள்ள நேரங்களில் ஜன்னல்களைத் திறப்பது எதிர்மறையானதாகத் தோன்றினாலும், அவ்வப்போது ஜன்னலைத் திறக்கலாம். இவ்வாறு செய்வது தீபாவளி இரவுக்குப் பிறகு, உட்புற மாசுக் குவிப்பைக் குறைக்க உதவுகிறது. அதிக மாசு நிறைந்த பகுதிகளில், மாசு அளவு குறைவாக இருக்கும் மதிய நேரத்தில் காற்றோட்டம் செய்வது சிறந்ததாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Diwali Health Tips: தீபாவளி அப்போ வயிறு உப்புசம், வாயு பிரச்சனையில் இருந்து தப்பிக்க... இத பாலோப் பண்ணுங்க!
Image Source: Freepik