How to protect from Diwali pollution: பொதுவாக குளிர்காலத்தில் காற்றின் தரம் குறையும். தீபாவளி பண்டிகை குளிர் மற்றும் மழையுடன் சேர்ந்து வருகிறது. இந்த பண்டிகையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்துத் தள்ள தயாராவார்கள். இதனால் காற்று மாசுபாடு சாதாரண நாட்களை விட அதிகமாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் மாசுபாட்டிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
மாசுபாட்டிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான குறிப்புகள்: (Protection tips for diwali pollution)
கண்ணாடி அணியுங்கள்:
காற்று மாசு (Air Pollution) முதலில் கண்களையும் தோலையும் பாதிக்கிறது. எனவே வெளியே செல்லும்போது கண்டிப்பாக கண்ணாடி அணியுங்கள். சன்கிளாஸ் பொருத்தமான தேர்வாக இருக்கும்.
முக்கிய கட்டுரைகள்
வாய் வழியாக காற்றை சுவாசிக்க வேண்டாம்:
வெளியே செல்லும் போது தற்செயலாக உங்கள் வாய் வழியாக சுவாசிக்க முயற்சிக்காதீர்கள். அவ்வாறு செய்வதன் மூலம் காற்று எந்த வடிகட்டியும் இல்லாமல் நேரடியாக நுரையீரலுக்குள் செல்கிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
இதையும் படிங்க: Diwali Health Tips: தீபாவளி அப்போ வயிறு உப்புசம், வாயு பிரச்சனையில் இருந்து தப்பிக்க... இத பாலோப் பண்ணுங்க!
மாஸ்க் அணியுங்கள்:
நீங்கள் வெளியே செல்லத் திட்டமிடும் போது கண்டிப்பாக மாஸ்க் அணியுங்கள். ஒருமுறை மாஸ்க் அணிந்துவிட்டால், அதை மீண்டும், மீண்டும் கைகளால் தொடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மீண்டும் பயன்படுத்தக் கூடிய மாஸ்காக இருந்தால், ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும் நன்றாக துவைத்து சுத்தம் செய்துவிட்டு அணியுங்கள். மீண்டும் மீண்டும் ஒரே மாஸ்க்கை அப்படியே அணிய வேண்டாம்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு உங்க முகம் ஜொலிக்கணுமா? இந்த ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க
வீட்டை சுத்தம் செய்யுங்கள்:
வெளியே போகும் போது சரி. மேற்கண்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டுவதோடு, வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில்குளிர்காலத்தில் இயற்கையாகவே காற்றில் தூசி அதிகமாக இருக்கும். அதனால் அவற்றின் வடிவில் மாசுபட்ட தூசித் துகள்கள் நம் வீட்டை அடைகின்றன. எனவே தீபாவளிக்கு முன்னதாகவே ஒரு முறையாவது வீட்டை டீப்பாக சுத்தம் செய்துவிடுங்கள்.
கதவுகளை மூடி வையுங்கள்:
பட்டாசு வெளியில் வெடித்தாலும், புகை பெரிய அளவில் வீட்டுக்குள் நுழைகிறது. எனவே வெளியில் யாராவது பட்டாசு வெடித்தால் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவையுங்கள். நீங்களும் வீட்டில் இருக்க முயற்சி செய்யுங்கள்.
இதையும் படிங்க: Diwali Sweets: சர்க்கரை நோயாளிகள் மட்டுமில்ல; மொத்த குடும்பமே இந்த ஸ்வீட்ஸை சப்புக்கொட்டி சாப்பிடலாம்!
ஈரமாக வைத்திருங்கள்:
எனவே சாலையை ஒட்டி வசிக்கும் பட்சத்தில் அதிக மாசு துகள்கள் வீட்டிற்குள் நுழையும். வாகனங்கள் செல்லும்போது, புழுதி எழுந்து வீட்டிற்குள் நுழைகிறது. வெளிப்புற மண் நீண்ட காலத்திற்கு ஈரமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதனால், தூசி உள்ளே வீசாது.
Image Source: Freepik