Fri Sep 11, 2026 | 11:45 PM IST

Expert

தீபாவளியில் புகை மாசுபாட்டிலிருந்து நுரையீரலை பாதுகாக்க காலையில் நீங்க குடிக்க வேண்டிய பானம்..

தீபாவளியின் போது புகை மாசுபாட்டைத் தவிர்த்து நுரையீரலை சரியாக பாதுகாக்க சில பாதுகாப்பு நடைமுறைக்ளைக் கையாள வேண்டும். இதில் புகை மாசுபாட்டிலிருந்து நுரையீரலைப் பாதுகாக்க உதவும் பானம் குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகையாக தீபாவளி அமைகிறது. தீபாவளி வந்துவிட்டாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். இந்நன்னாளில் புத்தாடை அணிந்து, இனிப்பு உணவுகளை சாப்பிட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வர். அந்த அளவிற்கு தீபாவளி பண்டிகைக்கான உற்சாகம் ஈடு இணையற்றதாக அமைகிறது. இத்தகைய சிறப்பான நன்னாளில் நாம் மிகவும் கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். அதிலும் தீபாவளி பண்டிகையில் வெடிக்கப்படும் பட்டாசு ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது

பட்டாசுக்களிலிருந்து வெளியேறும் புகையால் காற்று மாசு அதிகரித்து, ஆரோக்கியத்தைக் கணிசமாக பாதிக்கிறது. இது சாதாரணமாக தோன்றினாலும், சுவாச ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், மனநல பாதிப்புகள் என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில், தீபாவளியின் போது பட்டாசுகள் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் நுண்ணிய துகள்களை வெளியிடுகிறது. இதனால் காற்று மாசு அளவுகள் அதிகரித்து மோசமான பார்வை மற்றும் புகை நிறைந்த காற்றுடன் குறுகிய கால விளைவுகளுடன், நீண்ட கால சுகாதார தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Diwali Safety Tips: தீபாவளி நேரத்தில் உங்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு இது கட்டாயம்!

இந்த புகை மாசுபாட்டிலிருந்து நுரையீரலைப் பாதுகாப்பதற்கு காலையில் குடிக்க வேண்டிய பானம் ரெசிபி ஒன்றை ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

நிபுணரின் கருத்து

நிபுணர் தனது பதிவில்,”நகரக் காற்று ஒவ்வொரு நாளும் கடுமையாகி வருகிறதா? வெளியே செல்வதற்கு முன், உங்கள் சுவாச அமைப்பைச் சுத்தப்படுத்தும், ஆற்றும் மற்றும் பாதுகாக்கும் இந்த ஆயுர்வேத காலை பானத்துடன் உங்கள் உடலுக்கு இயற்கையான பாதுகாப்பு ஊக்கத்தை அளிக்கவும்” என்று தனது பதிவில் குறிப்பிடுகிறார்.

நிபுணர் பரிந்துரைத்த இந்த பானம் காற்று மாசுபாட்டைத் தவிர்த்து, சுவாச அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இதில் பானம் செய்முறை குறித்து காணலாம்.

தேவையானவை

  • முலேத்தி (அதிமதுரம் வேர்) - 3 அங்குல துண்டு
  • புதிய இஞ்சி - ½ அங்குல துண்டு
  • அஜ்வைன் (கேரம் விதைகள்) - 1 தேக்கரண்டி
  • வெல்லம் - ½ தேக்கரண்டி (விரும்பினால்)

தயாரிக்கும் முறை

  • இந்த பானத்தைத் தயார் செய்ய முலேத்தி, இஞ்சி மற்றும் அஜ்வைன் போன்றவற்றை 1.5 கப் தண்ணீரில் பாதியாகக் குறையும் வரை வேகவைக்க வேண்டும்.
  • பின் இதை வடிகட்டி, வெல்லம் சேர்த்து, சூடாகக் குடிக்கலாம். குறிப்பாக, வெறும் வயிற்றில் இதைக் குடிப்பது சிறந்தது.

நன்மைகள்

இது எவ்வாறு வேலை செய்கிறது என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

முலேத்தி

இது சுவாசக் குழாயைத் தணிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது நுரையீரலை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Asthma Prevention: ஒரே புகை மூட்டமா இருக்கு... ஆஸ்துமா இருக்கா.? ஜாக்கிரதை..

இஞ்சி

நுரையீரல் எரிச்சலைக் குறைக்கும் மற்றும் தெளிவான சுவாசத்தை ஆதரிக்கும் பண்புகள் இஞ்சியில் நிறைந்து காணப்படுகிறது.

அஜ்வைன்

அஜ்வைன் செரிமானத்தை மேம்படுத்தவும், நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. மேலும் இது கன உலோக வெளிப்பாட்டிலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது.

View this post on Instagram

A post shared by Lovneet Batra (@lovneetb)

வெல்லம்

இது நுரையீரலை நச்சு நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை தூசி மற்றும் மாசுபடுத்தும் துகள்களை இயற்கையாகவே அகற்ற உதவுகிறது.

இதனைத் தொடர்ந்து, “இந்த எளிய, சக்திவாய்ந்த சடங்கோடு உங்கள் நாளைத் தொடங்குங்கள் - ஏனெனில் உங்கள் நுரையீரலைப் பாதுகாப்பது உங்கள் சமையலறையிலிருந்து தொடங்குகிறது.” என்று குறிப்பிடுகிறார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Diwali Health Tips: தீபாவளி வந்துடுச்சி! இதுல நீங்க ரொம்ப கவனமா இருக்கணும்

Image Source: Freepik

Read Next

குங்குமப்பூவில் மறைந்திருக்கும் அசத்தலான 10 ஆரோக்கிய நன்மைகள் – மருத்துவர் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 17, 2025 13:28 IST

    Modified By : கௌதமி சுப்ரமணி
  • Oct 17, 2025 13:28 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content