ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த தினமும் காலையில் இந்த ட்ரிங்ஸ் உடன் நாளைத் தொடங்குங்க

What is the best drink to start your day with: நாம் எழுந்தவுடன் எடுத்துக் கொள்ளக்கூடிய சில பானங்கள் உடலை நீரேற்றமடையச் செய்கிறது. இது உடலில் நச்சுக்களை வெளியேற்றுவதுடன், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் காலை நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சில ஆரோக்கியமான பானங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த தினமும் காலையில் இந்த ட்ரிங்ஸ் உடன் நாளைத் தொடங்குங்க


What is a healthy first drink of the day: அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்கள் நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கணிசமாக பாதிக்கலாம். அதிலும் குறிப்பாக, காலை நேரத்தில் நாம் செய்யக்கூடிய பழக்கங்களும், எடுத்துக் கொள்ளவேண்டிய உணவுகள், பானங்களும் அன்றைய நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இவை உடல் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். அதன் படி கவனத்துடனும், சத்தான தேர்வுகளுடனும் நாளைத் தொடங்குவது நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

காலை நேரத்தில் நாம் எழுந்தவுடன் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவுகள், பானங்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் சில பானங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும், செரிமானம் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைத் தரவும் உதவுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு காலையில் குடிக்க வேண்டிய சில பானங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Morning drinks for skin: தினமும் காலையில் இந்த ட்ரிங்ஸ் குடிங்க! சருமம் சும்மா அப்படி ஜொலிக்கும்

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்

சீரக தண்ணீர்

இந்த பாரம்பரிய ஆயுர்வேத பானத்தைத் தயார் செய்ய, சீரக விதைகளை தண்ணீரில் ஊறவைத்து அல்லது கொதிக்க வைத்து தயார் செய்யலாம். இது வீக்கத்தைக் குறைக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும், மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும் என கூறப்படுகிறது. இந்த பானத்துடன், நாளைத் தொடர்ந்து எடையிழப்பை ஆதரிக்கவும், இரத்த சர்க்கரையை சீராக்கவும் உதவுகிறது.

வெந்தய நீர்

இரவு முழுவதும் வெந்தயத்தை ஊறவைத்து, அதை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் அருந்தலாம். இந்த வெந்தய நீர் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், மற்றும் கொழுப்பின் அளவை மேம்படுத்தவும் மிகவும் நன்மை பயக்கும். மேலும், இந்த பானம் செரிமான அமைப்பை மெதுவாகத் தூண்டுகிறது. அதே சமயம், இது ஹார்மோன் சமநிலை நன்மைகளை வழங்குகிறது.

இலவங்கப்பட்டை, தேன் தண்ணீர்

இலவங்கப்பட்டை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. அதே சமயத்தில், இதில் தேன் சேர்ப்ப்பது விரைவான ஆற்றலையும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளையும் வழங்குகிறது. காலையில் இந்த கலவையை அருந்துவது செரிமான மண்டலத்தை அமைதிப்படுத்தி, அதிகாலையில் பசியைக் கட்டுப்படுத்துகிறது.

கிரீன் டீ

கிரீன் டீ கேட்டசின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியதாகும். இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் கொழுப்பு இழப்பை ஆதரிக்கிறது. இது நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இந்நிலையில், காலை நேரத்தில் கிரீன் டீ அருந்துவது உடலில் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது.

வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர்

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை அருந்துவது உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது வைட்டமின் சி உட்கொள்ளலை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் வழிவகுக்கிறது. எலுமிச்சையில் நிறைந்துள்ள சிட்ரிக் அமிலம், செரிமான நொதிகளைத் தூண்டவும், உடலில் pH அளவை சமப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Summer Drinks: வெயில் தொல்லை இனி இல்லை., தினசரி காலையில் வீட்டில் இதை மட்டும் குடித்து பாருங்க!

ஆம்லா சாறு

இது வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த ஒரு சக்தி வாய்ந்த களஞ்சியமாகும். இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. காலையில் வெறும் வயிற்றில் இதை அருந்துவது பளபளப்பான சருமத்தை ஊக்குவிக்கிறது. இவை செரிமானத்தை ஆதரிக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், இது நாள் முழுவதும் இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது.

மஞ்சள் தண்ணீர் அல்லது மஞ்சள் டீ

மஞ்சள் நீர் அதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். காலையில், இந்த நீரை அருந்துவது கல்லீரல் நச்சுத்தன்மையை ஆதரிக்கிறது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

சியா விதை நீர்

சியா விதைகளை தண்ணீரில் ஊறவைப்பதால், அது ஜெல் போன்ற நிலைத்தன்மையை அடைகிறது. இது புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இவை இரத்த சர்க்கரையை நிலைப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இஞ்சி டீ

இஞ்சி அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் செரிமான நன்மைகளுக்கு பெயர் பெற்றதாகும். காலையில் இஞ்சி தண்ணீர் அல்லது தேநீர் குடிப்பது குமட்டலைக் குறைக்கவும், வயிற்றை ஆற்றவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது குறிப்பாக, குளிர் மாதங்களில் அல்லது செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

கற்றாழை சாறு

காலை எழுந்தவுடன் கற்றாழை சாறு அருந்துவது குடலுக்கு இதமளிப்பதாகவும் கல்லீரலை நச்சு நீக்கவும் உதவுகிறது. இதன் ஈரப்பதமூட்டும் தன்மையானது தெளிவான சருமம் மற்றும் மேம்பட்ட வளர்சிதை மாற்றத்திற்கு ஒரு சிறந்த பானமாக அமைகிறது.
இந்த பானங்கள் ஒவ்வொன்றுமே தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது நாளடைவில் உடல் அமைப்புகளை ஆதரிக்கவும், காலை வழக்கத்தை சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: ஒட்டுமொத்த கொழுப்பையும் வெளியேற்றி ஒல்லியான உடம்பு வேணுமா? தினமும் காலையில் இந்த டிடாக்ஸ் ட்ரிங்ஸ் குடிங்க

Image Source: Freepik

Read Next

தர்பூசணி நல்லது தான்! ஆனா ரொம்ப சாப்பிட்டா என்ன பிரச்சனை எல்லாம் வரும் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்