How to make detox drink at home for weight loss: எடையிழப்பைக் கையாள பலரும் பலவிதமான முயற்சிகளைக் கையாள்கின்றனர். அவ்வாறு எடை இழப்பு பானத்தை அனுபவிக்க விரும்பினால் தினமும் காலை நேரத்தில் சில ஆரோக்கியமான பானங்களை அருந்தலாம். அவ்வாறு சிலர் காலையில் ஒரு கிளாஸ் எலுமிச்சை தண்ணீர் அல்லது ஒரு கப் கிரீன் டீ குடிக்க முயற்சிப்பார்கள். இந்த பானங்களை அருந்துவது உடலை நீரேற்றமாக வைக்க உதவுவதுடன், உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பட்டியலில் இன்னும் சில டீடாக்ஸ் வாட்டரைச் சேர்ப்பது எடையிழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
டீடாக்ஸ் வாட்டரை ஆரோக்கியமான முறையில் பல்வேறு வழிகளில் தயார் செய்யலாம். இந்த பானங்களில் வெள்ளரி, ஆப்பிள், புதினா போன்றவற்றைச் சேர்ப்பது உடலுக்குக் கூடுதல் ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கிறது. இது உடல் எடையிழப்பைக் கையாள்வதுடன், பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளையும் அளிக்கிறது. இதில் ஒரு கிளாஸ் அல்லது ஒரு குடம் தண்ணீரில் ஆரோக்கியமான பொருள்களைச் சேர்ப்பது பற்றி காண்போம். இதில் உடல் எடை குறைய டீடாக்ஸ் வாட்டர் தயாரிக்கும் முறை குறிஹ்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வேகமான எடையிழப்புக்கு இந்த ஊட்டச்சத்துக்களை உங்க டயட்ல சேர்க்க மறக்காதீங்க
எடையிழப்புக்கு டீடாக்ஸ் வாட்டர் எவ்வாறு உதவுகிறது?
டீடாக்ஸ் தண்ணீரில் காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற இயற்கை பொருட்களை நிரப்பலாம். இது உடலில் செரிமானத்தை மேம்படுத்தவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. எனவே உடல் எடையிழப்புக்கு டீடாக்ஸ் தண்ணீரை எவ்வாறு தயார் செய்யலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது தற்காலிகமாக வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கக்கூடும். மேலும் இது கலோரிகளை எரிக்கலாம். ஆய்வு ஒன்றில், எடை இழப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக நல்ல அளவு தண்ணீர் குடித்தவர்கள், அதை செய்யாதவர்களை விட அதிக உடல் எடையைக் குறைத்ததாகக் கூறப்படுகிறது.
எடையிழப்புக்கு டிடாக்ஸ் வாட்டர் தயாரிக்கும் முறை
இஞ்சி மற்றும் எலுமிச்சை டீடாக்ஸ் வாட்டர்
தேவையானவை
- இஞ்சி - சிறிதளவு (நறுக்கப்பட்டது அல்லது துருவியது)
- எலுமிச்சை - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
- தண்ணீர் - 1 லிட்டர்
செய்முறை
தண்ணீரில் இஞ்சி மற்றும் எலுமிச்சை துண்டுகளைச் சேர்க்க வேண்டும். இதை சில மணி நேரம் ஊறவைத்து குடிக்க வேண்டும். இதை அறை வெப்பநிலையில் அல்லது சூடாக அருந்தலாம்.
வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை டீடாக்ஸ்
தேவையானவை
- வெள்ளரிக்காய் - 1/2 (நறுக்கியது)
- எலுமிச்சை - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
- தண்ணீர் - 1 லிட்டர்
- ஐஸ்கட்டி (விரும்பினால் சேர்க்கலாம்)
செய்முறை
ஒரு குடம் அளவு தண்ணீரில் எலுமிச்சைத் துண்டுகள் மற்றும் வெள்ளரிக்காயைச் சேர்க்க வேண்டும். இதை இரண்டு மணி நேரம் வைத்து பிறகு குடிக்கலாம். இதை குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ அருந்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இயற்கையான முறையில் இடுப்பு அளவை குறைக்க வேண்டுமா.? இடுப்பைக் குறைப்பதற்கான அல்டிமேட் டீடாக்ஸ் வாட்டர் ரெசிபி இங்கே..
எலுமிச்சை மற்றும் புதினா டிடாக்ஸ் வாட்டர்
தேவையானவை
- எலுமிச்சை - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
- தண்ணீர் - 1 லிட்டர்
- புதிய புதினா இலைகள் - 10 முதல் 12
- ஐஸ் கட்டிகள் (விரும்பினால்)
செய்முறை
ஒரு குடம் அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை துண்டுகள் மற்றும் புதினா இலைகளைச் சேர்க்க வேண்டும். இந்த தண்ணீர் வலுவான சுவையைப் பெற குறைந்த 2 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். இதை அறை வெப்பநிலையிலோ அல்லது குளிரூட்டப்பட்டோ எடுத்துக் கொள்ளலாம்.
கற்றாழை மற்றும் எலுமிச்சை டீடாக்ஸ்
தேவையானவை
- புதிய கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன்
- எலுமிச்சை - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
- தண்ணீர் - 1 லிட்டர்
செய்முறை
முதலில் தண்ணீரில் கற்றாழை ஜெல்லைக் கலக்க வேண்டும். பிறகு அதில் எலுமிச்சை துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்கலாம். இதை புதிதாகக் குடிக்கலாம் அல்லது குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து குடிக்கலாம்.
ஆரஞ்சு மற்றும் துளசி டீடாக்ஸ் வாட்டர்
தேவையானவை
- ஆரஞ்சு - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
- புதிய துளசி இலைகள் - 5 - 6
- தண்ணீர் - 1 லிட்டர்
செய்முறை
ஒரு குடம் தண்ணீரில் துளசி இலை மற்றும் ஆரஞ்சு துண்டுகளைச் சேர்த்து சில மணி நேரம் ஊறவிட வேண்டும். அதன் பிறகு இந்த தண்ணீரை அருந்துவது நன்மை பயக்கும்.
குறிப்பு
இந்த டீடாக்ஸ் பானங்கள் தயார் செய்ய பயன்படுத்தப்படும் சில பொருள்களில் அசிட்டிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது. எனவே அமிலத்தன்மை பிரச்சனைகள், செரிமான பிரச்சனை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Detox Drinks: உண்மையிலேயே டீடாக்ஸ் வாட்டர் எடை இழப்புக்கு உதவுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
Image Source: Freepik