வேகமான எடையிழப்புக்கு இந்த ஊட்டச்சத்துக்களை உங்க டயட்ல சேர்க்க மறக்காதீங்க

Which nutrient is good for weight loss: உடல் எடையிழப்புக்கு அன்றாட உணவில் சில ஆரோக்கியமிக்க ஊட்டச்சத்துக்களைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். இது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், செரிமானத்தை மெதுவாக்கி உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது. இதில் எடையிழப்புக்கு வழிவகுக்கும் ஊட்டச்சத்துக்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
வேகமான எடையிழப்புக்கு இந்த ஊட்டச்சத்துக்களை உங்க டயட்ல சேர்க்க மறக்காதீங்க


Which nutrients help to lose weight: உடல் எடை பருமன் இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான காரணியாக அமைகிறது. அதே சமயம், எடையிழப்பு என்பது எளிதான செயல் அல்ல. உண்மையில் உடல் எடையிழப்பு என்பது உடலுக்கு ஒரு சிக்கலான தொடர் செயல்முறைகளை உள்ளடக்கியதாகும். அன்றாட உணவில் ஆரோக்கியமிக்க உணவுகளைச் சேர்ப்பது, உடற்பயிற்சி செய்வது, வளர்ச்சிதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையாகவே எடையிழப்பு அமைகிறது. கடந்த சில ஆண்டுகளில், உடல் எடையிழப்பை ஆதரிக்கும் வகையில் பல்வேறு உணவுமுறைகள் பிரபலமடைந்துள்ளது.

பெரும்பாலும் இந்த உடல் எடையிழப்பு உணவுமுறைகள் உடலில் கலோரிகளைக் கட்டுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகின்றன. எனினும், ஆரோக்கியத்தை சமரசம் செய்யாமல் எடையிழப்பை ஆதரிப்பது மிகவும் முக்கியமாகும். எனவே, கலோரிகள் மட்டுமல்லாமல், ஊட்டச்சத்து உட்கொள்ளலில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம். அன்றாட உணவில் சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன், ஆரோக்கியத்தை பராமரிக்கவும் இயலும். இதில் எடையிழப்புக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடிய ஊட்டச்சத்துக்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips: ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைய டிப்ஸ்.!

எடையிழப்பை ஆதரிக்கும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள்

புரதம்

எடை ஆரோக்கியத்தைக் கையாளக்கூடிய பெரும்பாலான மக்கள் தங்கள் புரத உட்கொள்ளலில் கவனம் செலுத்துகின்றனர். புரதம் நிறைந்த உணவுமுறைகளைக் கையாள்வது எடையைக் குறைக்கவும், தசைகளை வளர்க்கவும், பசியை அடக்கவும் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கவும் உதவுகிறது. இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை எரிக்க உதவுகிறது. பருப்பு, பாலாடைக்கட்டி, பாதாம், கொண்டைக்கடலை, குயினோவா போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளைக் கையாளலாம். மேலும் முட்டை, மீன், கோழி போன்ற விலங்கின அடிப்படை உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான கொழுப்புகள்

நட்ஸ், வெண்ணெய், விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற சில ஆரோக்கியமான கொழுப்புகளை எடுத்துக் கொள்வது உடல் எடையிழப்பை ஆதரிக்க உதவும் அமிலங்களாகும். இந்த வகை கொழுப்பு அமிலங்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இது உயர் அடர்த்தி கொண்ட கொழுப்பு உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது வளர்ச்சிதை மாற்றத்தை சீராக வைக்கிறது. இவை அனைத்துமே உடல் எடையிழப்பை ஆதரிக்க உதவும் காரணிகளாகும்.

வைட்டமின் டி

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், இதை உட்கொள்வது எடை மேலாண்மை மற்றும் கொழுப்பு இழப்புக்கும் வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உடலில் வைட்டமின் டி குறைபாடு காரணமாக உடல் பருமன் மற்றும் அதிக எடை அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில், வைட்டமின் டி உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது எடையிழப்பை எளிதாக்குகிறது.

மெக்னீசியம்

மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது வளர்சிதை மாற்ற செயல்முறைகளை ஆதரிக்க உதவும் ஒரு அத்தியாவசிய கனிமமாக விளங்குகிறது. மேலும் இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நாள்தோறும் போதுமான அளவு மெக்னீசியத்தை உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்பை மெதுவாகக் குறைக்கும் என்றும், எடை இழப்புத் திட்டத்தின் முக்கிய அங்கமாக இது செயல்படக்கூடும் என்றும் ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Food: ஒரே வாரத்தில் உடல் எடை குறையணுமா? இவற்றை காலை உணவாக சாப்பிடுங்க!

நார்ச்சத்து

உடல் எடையிழப்பு பயணத்தில் நார்ச்சத்துக்கள் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மேலும், இது நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதன் மூலம் பசி ஏற்படுவதைத் தடுக்கிறது. உடல் எடையிழப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் வகையில் நார்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இரும்பு

இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது ஆற்றல் உற்பத்தி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு அவசியமானதாகும். இவ்வாறு உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது. ஆய்வு ஒன்றில், இரும்புச்சத்து நிறைந்த சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வது இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடையிழப்பை ஆதரிக்கலாம்.

இது போன்ற சக்திவாய்ந்த ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் ஒரு பயனுள்ள மற்றும் நிலையான முடிவுகளைப் பெறலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Food: உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்!

Image Source: Freepik

Read Next

இயற்கையான முறையில் இடுப்பு அளவை குறைக்க வேண்டுமா.? இடுப்பைக் குறைப்பதற்கான அல்டிமேட் டீடாக்ஸ் வாட்டர் ரெசிபி இங்கே..

Disclaimer