Key nutrients you must consume every day for longevity: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள் ஏராளம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலிலிருந்து பல்வேறு நோய்களைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தசை மற்றும் எலும்பு வலிமையைப் பராமரிக்கவும் மற்றும் மூளையின் செயல்பாட்டைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இவை நீண்ட ஆயுளை ஆதரிக்க வழிவகுக்கிறது. மேலும், இவை செல்லுலார் மட்டத்தில் வயதானதை மெதுவாக்குகிறது. இவை வயதாகும் போது, உடல் மற்றும் மனதை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் வயதானதை நன்கு உணர மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாக அமைகிறது.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள்
வைட்டமின் டி
வைட்டமின் டி ஆனது சூரிய ஒளி வைட்டமின் என்றும் அழைக்கப்படுகிறது. இது உடலில் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது நோயெதிர்ப்புச் சக்தியை சிறப்பாக செயல்பட வைக்கிறது. இன்றைய காலத்தில் பலரும் குறைந்த நோயெதிர்ப்புச் சக்தி காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வயதுக்கு ஏற்ப உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவானதாகக் கருதப்படுகிறது. எனவே வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் பெற விரும்புபவர்கள் சூரிய ஒளி, கொழுப்பு நிறைந்த மீன் அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் இதைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஒமேகா 3 கொழுப்பு அமிலம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா.? நன்மைகளும்.. ஆதாரங்களும்..
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
உடல் ஆரோக்கியத்திற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. சால்மன், ஆளி விதைகள் மற்றும் வால்நட்ஸ் போன்ற உணவுகளில் காணப்படும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கொழுப்புகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கும். இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மூளையைப் பாதுகாக்கிறது. மேலும், வயதாகும்போது அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறைக்க உதவுகிறது.
ஆக்ஸிஜனேற்றிகள்
வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாலிபினால்கள் போன்ற தாவர சேர்மங்கள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இவை உடலுக்கு மிகவும் தேவையானவையாகும். ஏனெனில், இது ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய எதிர்மறையான மூலக்கூறாகும்.
இந்நிலையில், ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி சேதம் ஏற்படுவதைத் தடுக்கிறது. இது செல்களைப் பாதுகாப்பது, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது, வயதாவதைத் தடுப்பது மற்றும் சருமத்தைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
புரதம்
பொதுவாக வயதாகும் போது, நம்மில் பெரும்பாலானோர் இயற்கையாகவே தசையை இழக்கிறோம். இது வலிமை, சமநிலை மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தைப் பாதிக்கலாம். இதற்கு புரதம் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இது தசைகள், எலும்புகள், முடி மற்றும் சருமம் போன்ற உடல் திசுக்களின் முக்கிய கட்டுமானப் பொருளாக விளங்குகிறது. இது ஹார்மோன்கள், என்சைம்கள் மற்றும் ஆன்டிபாடிகள் போன்ற பல பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: பச்சை பப்பாளி உங்கள் உடலுக்கு செய்யும் மேஜிக்... இத ட்ரை பண்ணிப் பாருங்க!
அதே சமயம், புரத குறைபாட்டின் காரணமாக சோர்வு, வளர்ச்சி குறைவது மற்றும் நோயெதிர்ப்புச் சக்தி குறைவு போன்ற பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே அன்றாட உணவில் முட்டை, பருப்பு வகைகள், மீன் அல்லது மெலிந்த இறைச்சிகள் போன்ற மூலங்களிலிருந்து போதுமான புரதத்தைப் பெறலாம். இவை தசை வெகுஜனத்தை பராமரிக்கவும், நீண்ட நேரம் வலிமையாக உணரவும் வைக்கிறது.
நார்ச்சத்துக்கள்
நம் உடலில் பல்வேறு முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு பங்கு வகிக்கும் குடல், இதயம் போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்துக்கள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும், இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கும் நார்ச்சத்து அவசியமானதாகும். இதற்கு நார்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், தானியங்கள் போன்றவை சிறந்த ஆதாரங்களாகும். அதே போல, நல்ல குடல் ஆரோக்கியமானது மனநிலை முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை அனைத்துக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவை அனைத்துமே நீண்ட ஆயுளுக்கு முக்கியமாகும்.
இந்த வகை ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே உடல் ஆரோக்கியம் மற்றும் உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிப்பதாகும். அதன் படி, அன்றாட உணவில் இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: வேகமான எடையிழப்புக்கு இந்த ஊட்டச்சத்துக்களை உங்க டயட்ல சேர்க்க மறக்காதீங்க
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version