Ayurvedic Herbs That Boost Longevity: அன்றாட வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கும் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையின் அடிப்படையிலேயே நம் வாழ்நாள் அமைகிறது. தற்போதைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர். மேலும் சிறுவயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு தீவிரமான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இன்று பலருக்கும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்கு ஏற்ப வாழ்க்கை முறையைக் கையாள வேண்டும். அந்த வகையில், உணவுமாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் உதவியுடன் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். இவை நீண்ட கால வாழ்விற்கு வழிவகுக்கிறது. ஆயுர்வேதத்தின் படி, நீண்ட ஆயுளுடன் இருக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சில மூலிகைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த வெயில்ல அதிக ஸ்பைசி உணவுகள் சாப்பிடுபவர்களா நீங்க? ஆயுர்வேதம் சொல்லும் விளைவுகள் இதோ!
ஆயுர்வேத மூலிகைகள்
அன்றாட வாழ்க்கையில் ஆயுர்வேத மூலிகைகளை இணைப்பது சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. உயிர்ச்சக்தி நிறைந்த வாழ்விற்காக, ஒவ்வொரு மூலிகையும் தனித்துவமான பண்புகளைக் கொண்டிருப்பதுடன், ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது. இது நீண்டகால ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.
நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ உதவும் மூலிகைகள்
அஸ்வகந்தா
இது அனைவருக்கும் தெரிந்த மிகவும் பிரபலமான மருத்துவ மூலிகையில் ஒன்றாகும். இதன் வேர்கள், பழங்கள் என அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அஸ்வகந்தா உட்கொள்வது உடலில் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதுடன், நமது மன ஆரோக்கியத்திற்கு மேம்படுத்துகிறது. இதன் மூலம் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
கடுக்காய்
கடுக்காய் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இது பல்வேறு நோய்களை விரட்டி அடிக்கும் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது செரிமான கோளாறு பிரச்சனையை நீக்கவும், மலச்சிக்கல் குணமாகவும் உதவுகிறது. இது வயிறு உப்புசம், புளித்த ஏப்பம் போன்ற அஜீரண நோய் நிலைகளைத் தடுக்க உதவுகிறது. வயிற்றுக் கோளாறுகள், ஜீரண உறுப்புகளைச் சார்ந்த நோய்களைத் தடுக்க கடுக்காய் சிறந்த தேர்வாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Spices For Summer: சம்மர்ல இந்த ஸ்பைசஸ் சாப்பிடுங்க! உடல் சூடு வேகமா குறைஞ்சிடும்
ஆம்லா
இந்திய நெல்லிக்காய் என்றழைக்கப்படும் ஆம்லா உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துடன் சரும ஆரோக்கியமும் மேம்படும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது, கண் பார்வை ஆரோக்கியத்திற்கு, எடை இழப்புக்கு, நீரிழிவு நோய்க்கு என பல தரப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்க நெல்லிக்காய் உதவுகிறது. இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளைக் கருத்தில் கொண்டு தினசரி ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவது நீண்டகால ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கிறது.
கிலோய்
கிலோய் ஆனது குடுச்சி என அழைக்கப்படுகிறது. இதில் நிறைந்துள்ள அதிகளவிலான ஊட்டச்சத்துகள் மற்றும் ஆல்கலாய்டுகள் மிகவும் பயனுள்ளதாகும். இதன் வேர், இலைகள் என அனைத்தும் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. இந்த கலவைகள் இரத்த அழுத்தம், மலேரியா, குடல் பிரச்சனைகள், பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இஞ்சி
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்துள்ளது. இது மூட்டு மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இரத்தக் கட்டிகளைத் தடுக்க உதவுகிறது. தீவிர நோயான இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பொதுவாக, அழற்சி நோய்கள் பெரும்பாலும் பாலியல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, இஞ்சியைத் தேர்ந்தெடுப்பது உடலில் எதிர்மறையான விளைவைத் தருகிறது.
இவ்வாறு பல்வேறு ஆயுர்வேத மூலிகைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு உதவலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Acidity Ayurvedic Remedies: தீராத நெஞ்செரிச்சலா? இந்த ஆயுர்வேத ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Image Source: Freepik