Cooling Spices To Use During Summer: கோடைக்காலத்தில் உடல் வெப்பம் அதிகமாகி, இதனால் பலரும் பல விளைவுகளைச் சந்திக்கின்றனர். எனவே இந்த காலகட்டத்தில் உடல் சூட்டைத் தணிக்க உதவும் ஆரோக்கியமான உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் பலருக்கும் மசாலாப் பொருள்களை கோடைக்காலத்தில் எடுத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் எழும்.
உண்மையில் கோடைக்காலத்தில் சில மசாலாப் பொருள்கள் எடுத்துக் கொள்வது உடல் சூட்டைத் தணிக்க உதவுகிறது. இந்த மசாலாப் பொருட்கள் சுவையை மேம்படுத்துவதுடன் உடலை சமநிலையுடன் வைத்திருக்க உதவும் குளிர்ச்சியான பண்புகள் உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் உடல் சூட்டைத் தணிக்க உதவும் மசாலா பொருள்கள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Acidity Ayurvedic Remedies: தீராத நெஞ்செரிச்சலா? இந்த ஆயுர்வேத ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க
உடல் சூட்டைத் தணிக்க உதவும் மசாலா பொருள்கள்
உடல் வெப்பத்தைத் தணிக்க சில மசாலா பொருள்களை உட்கொள்ளலாம். இது இயற்கையாகவே குளிர்ச்சித்தன்மை மிக்கதாகும். இது கோடைக்கால நுகர்வுக்கு ஏற்றதாக அமைகிறது.
பெருஞ்சீரக விதைகள்
இந்த விதைகள் இனிப்பு மற்றும் சற்றே அதிமதுரம் போன்ற சுவை கொண்டதாகும். இது உடலில் குளிர்ச்சியான விளைவுகளைத் தருகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
- பெருஞ்சீரக விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராக அருந்தலாம். இதை குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ அருந்தலாம்.
- உடலைக் குளிர்விப்பதற்கும், சுவாசத்தைப் புத்துணர்ச்சியடையச் செய்வதற்கும் ஒரு சிறிய கையளவு பெருஞ்சீரக விதைகளை உணவு சாப்பிட்ட பிறகு மென்று சாப்பிடலாம்.
- சாலட்களில் நொறுக்கப்பட்ட பெருஞ்சீரக விதைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

புதினா
இது இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மை மிக்க மசாலா பொருள் ஆகும். இவை உடல் சூட்டைக் குறைக்கவும், புத்துணர்ச்சியை அளிக்கவும் உதவுகிறது. இதன் செரிமான நன்மைகளுக்காக, கோடைகாலத்திற்கு ஏற்றதாக அமைகிறது.
- புதினா இலைகளைத் தண்ணீரில் ஊறவைத்து அதை சில மணி நேரங்களுக்கு வைத்து, பிறகு புதினா நீரை அருந்த வேண்டும். இது புத்துணர்ச்சியூட்டும் பானமாக அமைகிறது.
- புதினா இலைகளுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சட்னியாக செய்து அதை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
- குளிர்ச்சியான ரைதாவில் நறுக்கிய புதினா இலைகளைச் சேர்த்து வெற்று தயிரில் கலக்க வேண்டும். இதை காரமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
சீரக விதைகள்
இது லேசான குளிரூட்டும் விளைவைக் கொண்டுள்ளது. மேலும் இது செரிமானத்திற்கு சிறந்தவையாகும். இவை உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்துவதுடன், செரிமான பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது.
- ஒரு டீஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் ஆறவைத்து, நாள் முழுவதும் குடிக்க வேண்டும்.
- உணவுகளில் சீரகத்தைக் குறிப்பாக கோடைக்காலத்தில் சூப்களில் சீரகத்தைச் சேர்க்கலாம்.
- சாலடுகள், தயிர் மற்றும் வறுத்த காய்கறிகள் போன்றவற்றின் மீது வறுத்த அல்லது அரைத்த சீரக விதைகளைத் தூவி எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ghee With Warm Water: வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
மஞ்சள்
மஞ்சள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உடலைக் குளிர்விக்க உதவும் சிறந்த மூலிகை ஆகும். இது நச்சு நீக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
- பாலில் மஞ்சள் கலந்து ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்த்து அருந்துவது புத்துணர்ச்சியூட்டும் பானமாக அமைகிறது.
- குளிர்ச்சி விளைவுக்காக சாலட் டிரஸ்ஸிங்ஸில் மஞ்சள் பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.
- இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக காலை நேரத்தில் ஸ்மூத்தியில் மஞ்சளைச் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

வெந்தயம்
வெந்தய இலைகள் மற்றும் விதைகள் இரண்டுமே குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்க உதவுகிறது. இவை செரிமான ஆரோக்கியத்திற்கும், உட்புற வீக்கத்தைக் குறைப்பதற்கும் உதவுகிறது.
- வெந்தய விதைகளை முந்தைய நாள் இரவில் நீரில் ஊறவைத்து பிறகு அடுத்த நாள் காலையில் வடிகட்டி குடிக்கலாம்.
- சாலட்கள் அல்லது சமைத்த உணவுகளில் வெந்தய இலைகளைப் பயன்படுத்துவது குளிர்ச்சியான பண்புகளைத் தருகிறது.
- முளைத்த வெந்தய விதைகளை சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த மசாலாப் பொருள்கள் அனைத்தும் கோடைக்காலத்தில் உடலைக் குளிர்விக்க உதவுகிறது. இவை உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும், சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Dried Herbs Vs Fresh Herbs: உலர்ந்த மூலிகை Vs புதிய மூலிகை - எது உடலுக்கு நல்லது தெரியுமா?
Image Source: Freepik