Best Oil To Reduce Body Heat: கோடைக்காலம் என்றாலே பலரும் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குவர். இந்த காலகட்டத்தில் உடல் சூடு அதிகமாகி நீரிழப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஹீட் ஸ்ட்ரோக் பொதுவானதாக இருப்பினும், உடல் அதீத வெப்பத்தைத் தாங்க முடியாத நிலை ஏற்படும். இது குமட்டல், நினைவிழப்பு மற்றும் வலிப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
இது தவிர நடப்பதில் சிரமம், தசைப்பிடிப்பு, அதிக வியர்வை, தோல் சிவத்தல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இதற்கு உடலை நீரேற்றமாக வைப்பது, சூரிய ஒளியிலிருந்து விலகி இருப்பது, குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வது போன்ற நிலையான முறைகளை மேற்கொள்ளலாம். இதில் உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும் அத்தியாவசிய எண்ணெய்கள் சிலவற்றைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
உடலை குளிர்ச்சியாக வைக்கும் எண்ணெய்
பெப்பர்மின்ட் எண்ணெய்
- மிளக்குக்கீரை எண்ணெயில் மெத்தனால் நிறைந்துள்ளது. இது வெப்பத்தை எதிர்கொள்ள உதவும் சிறந்த எண்ணெய்களில் ஒன்றாகும்.
- இதன் புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் ஆற்றல் மட்டங்களை அதிகம் செலவிடாமல் அப்படியே வைத்திருக்க உதவுகிறது.
- இந்த அத்தியாவசிய எண்ணெயின் சில துளிகளை லோஷனில் ஊற்றி, கைகள், கழுத்து, கால்கள், உள்ளங்கைகளில் தடவிக் கொள்ளலாம்.
- பகல் நேரங்களில் வெயிலில் இருக்கும் போது ஏற்படும் வெப்பத் தாக்குதலைத் தணிக்க இந்த எண்ணெய் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Morning Person: அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏன் வழக்கமாக்க வேண்டும் தெரியுமா?
யூகலிப்டஸ் எண்ணெய்
- இந்த எண்ணெய் சிறந்த பயனுள்ள குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன.
- யூகலிப்டஸ் எண்ணெய் இரத்த நாளங்களைத் திறந்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
- இது உடல் வெப்பநிலையைக் குறைத்து, வெப்ப தாக்குதலிலிருந்து விடுவிக்கிறது.
- இந்த எண்ணெயை ஒரு டிஃப்யூசரில் சேர்த்து பயன்படுத்தலாம் அல்லது தூங்கும் முன் உடல் மற்றும் படுக்கை துணிகளில் தெளித்து விடலாம்.
- குளியல் நீரில் இந்த எண்ணெயைச் சேர்த்து பயன்படுத்தலாம்.
- இதன் அமைதியான வாசனை சுவாசப் பாதைகளைத் திறந்து உடலுக்குக் குளிர்ச்சியான விளைவைத் தருகிறது.

ஸ்பியர்மின்ட் எண்ணெய்
- இந்த அத்தியாவசிய எண்ணெய் புதினாவின் லேசான பதிப்பாகும்.
- பெப்பர்மின்ட் எண்ணெய் விரும்பாதவர்களுக்கு ஸ்பியர்மின்ட் எண்ணெய் சிறந்த மாற்றாக அமைகிறது.
- இதன் முடக்கிய பழ வாசனை, மிளகுக்கீரை போன்ற குளிர்ச்சியான விளைவைக் கொடுக்கிறது.
- இதை நேரடியாக சூரிய ஒளியில் வெளிப்படும் உடலின் பாகங்களில் பயன்படுத்தலாம்.
- இது தவிர, பாடி லோஷனுடன் கலந்து இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது தனி விருப்பமாகும்.
லாவண்டர் எண்ணெய்
- இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது உடல் வெப்பநிலையைத் திறம்பட குறைக்க உதவுகிறது.
- இது ஸ்பா மெனுவில் வழக்கமான ஒன்றாகவும், அரோமாதெரபியிலும் பயன்படுத்தப்படுகிறது.
- வெப்பத்தால் ஏற்படும் மந்தமான உணர்வு மற்றும் தலைவலியிலிருந்து மீட்டெடுக்க உதவுகிறது.
- இந்த எண்ணெய் சூரியஒளி வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது.
- இதை உள்ளங்கைகளில் தேய்க்கலாம் அல்லது குளிக்கும் நீரில் கலந்து கொள்ளலாம்.
- இதை மற்ற எண்ணெய்களான மிளகுக்கீரை எண்ணெய், யூகலிப்டஸ் போன்றவற்றுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
சந்தன எண்ணெய்
- இது அதிகப்படியான வியர்வை உண்டாவதைத் தடுக்கவும், வெப்ப அழுத்தத்தை சமாளிக்கவும் உதவுகிறது.
- ஆயுர்வேதத்தின் படி, சந்தன எண்ணெய் பயன்பாடு உடலில் வெப்பநிலையை நிர்வகிக்க உதவுகிறது.
- இந்த எண்ணெயின் மண் மற்றும் மர வாசனை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.
- சந்தன எண்ணையை உடலில் மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம்.

வெட்டிவேர் எண்ணெய்
- கோடைக்காலத்தில் கடுமையான வெப்பத்தைத் தவிர்க்க முடியாத விளைவாக தோல் அழற்சி ஏற்படுகிறது.
- இதன் அசாதாரண குளிரூட்டும் பண்புகளால் இது அமைதி எண்ணெய் எனவும் அழைக்கப்படுகிறது.
- இதை டிஃப்யூசரில் சேர்த்து பயன்படுத்தலாம் அல்லது குளியல் நீரில் சேர்த்துக் கொள்ளலாம்.
- லாவண்டர் எண்ணெய் மற்றும் எப்சம் உப்பு சேர்த்து கலந்த கலவையை குளியில் தொட்டியில் சேர்த்து பயன்படுத்தலாம்.
இவை அனைத்தும் உடலுக்குக் குளிரூட்டும் பண்புகளைத் தரும் எண்ணெயாகும். கோடைக்கால வெப்பத்தைத் தணித்து பல்வேறு வெப்ப நோய்களைத் தடுக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Oil Pulling: கோடையில் ஆயில் புல்லிங் செய்ய எந்த என்னை சிறந்தது? நிபுணர்கள் பதில் இங்கே!
Image Source: Freepik