கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

  • SHARE
  • FOLLOW
கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?


Benefits Of Sleeping With a Pillow Between Your Legs: ஒவ்வொரு நாள் இரவு தூக்கத்தை நிம்மதியாக பெற வேண்டும் என்றே பலரும் விரும்புபவர். அதிலும், பகல் முழுவதும் எந்தவொரு ஓய்வுமின்றி அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளைச் செய்து முடிப்பர். ஆனால், பல நேரங்களில் மன அழுத்தம், சோர்வு, முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சரியான தூக்கம் இல்லாமல் அவதியுறுகின்றனர். இந்த சூழ்நிலையில் நல்ல தூக்கத்தைப் பெற கால்களுக்கு இடையில் தலையணை வைத்து தூங்குவது பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்பாக, இரவில் தவறான நிலையில் தூங்குவது மறுநாள் முழுவதும் உடலின் பல பகுதிகளில் வலியை சந்திக்கும் நிலை ஏற்படலாம். எனவே சரியான தோரணையுடன் தூங்குவது அவசியமாகும். அந்த வகையில், கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவது விரைவில் உறக்கத்தைத் தருவதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Morning Person: அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏன் வழக்கமாக்க வேண்டும் தெரியுமா?

கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவதன் நன்மைகள்

முதுகு மற்றும் இடுப்பு வலி குறைய

கால்களுக்கு இடையில் தலையணை வைத்து உறங்குவது முதுகு மற்றும் இடுப்பு வலியைக் குறைப்பதற்கு சாத்தியமான வழியாகும். இவ்வாறு உறங்குவது கீழ் முதுகு மற்றும் இடுப்பு மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரே இரவில் இந்த பகுதிகளில் வலியைக் குறைக்க உதவுகிறது.

சியாட்டிகா வலியைக் குறைக்க

சியாட்டிகா என்பது கீழ் முதுகில் சுருக்கப்பட்ட முள்ளந்தண்டு நரம்பு வேர் காரணமாக கீழ் முதுகிலிருந்து ஒரு காலுக்குக் கீழே செல்லும் நரம்பு வலியாகும். தூங்கும் போது முழங்கால்களுக்கு இடையில் தலையணையை வைத்து தூங்குவது இந்த சியாட்டிகா வலியைக் குறைக்க உதவுகிறது. இரவில் தூங்கும் போது இடுப்பை சாய்ப்பது, முதுகைத் திருப்புவது, மற்றும் முதுகெலும்பை சுழற்றுவது போன்றவை முதுகெலும்பு நரம்பை மேலும் சுருக்கி வலியை மோசமாக்கும். இதனைத் தவிர்க்க கால்களுக்கு இடையே தலையணையை வைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mental Health Foods: மனநிலையை மேம்படுத்தும் டாப் உணவுகள் இது தான்!

நல்ல தோரணையைப் பெற

உடல் தோரணையைப் பெற நல்ல தோரணையில் தூங்குவது அவசியமாகும். ஒரு பக்கமாக தூங்கும் போது மேல் முழங்கால், கீழ் முழங்காலின் மேல் இருக்கும். இது இடுப்பு மற்றும் முதுகுத் தண்டில் உள்ள இடுப்பு திசுக்களில் அழுத்தத்தைத் தருகிறது. இதன் மூலம் சீரான மற்றும் இயற்கையான சீரமைப்பைத் தருகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு

இந்த நிலையில் தூங்குவது கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்ததாக அமைகிறது. கர்ப்பத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது டிரைமெஸ்டரில் பெண்கள் இடது பக்கம் படுக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது குழந்தைக்கு உகந்த இரத்த ஓட்டத்தை உறுதி செய்யவும், சிறுநீரக செயல்பாட்டிற்கும் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் அவதியுறும், இடுப்பு வலி, முதுகு வலி மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இவர்களின் தூக்க நிலையை மாற்றுவது நல்லது.

இரவில் கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவது இவ்வாறு பல்வேறு வழிகளில் நன்மையைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Meditate In Bed: படுக்கையில் தியானம் செய்வது நல்லதா? நிபுணர் தரும் விளக்கம்

Image Source: Freepik

Read Next

Mental Health Foods: மனநிலையை மேம்படுத்தும் டாப் உணவுகள் இது தான்!

Disclaimer

குறிச்சொற்கள்