Doctor Verified

Meditate In Bed: படுக்கையில் தியானம் செய்வது நல்லதா? நிபுணர் தரும் விளக்கம்

  • SHARE
  • FOLLOW
Meditate In Bed: படுக்கையில் தியானம் செய்வது நல்லதா? நிபுணர் தரும் விளக்கம்


Benefits And Side Effects Of Meditation In Bed: உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தியானம் பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தியானம் மேற்கொள்வது உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், மோசமான செரிமானம் மற்றும் சுவாசப்பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, தியானம் செய்வதற்கு சிறந்த தோரணை சுகாசனம் ஆகும். ஆனால், சிலர் படுத்து தியானம் செய்வர். படுத்துக் கொண்டு தியானம் செய்வது நல்லதா? இது தியானத்தை எவ்வாறு பாதிக்கிறது? இது குறித்து லக்னோவிலுள்ள போதித்ரி இந்தியா மையத்தின் ஆலோசனை உளவியலாளர் டாக்டர் நேஹா ஆனந்த் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Eye Care Tips: அதிக திரை நேரத்தினால் கண்களில் ஏற்படும் அழுத்தத்தைப் போக்க இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

படுக்கையில் தியானம் செய்வது நல்லதா?

மருத்துவர் நேஹா அவர்களின் கூற்றுப்படி, “தியானம் செய்வது அமர்ந்து தான் செய்ய வேண்டும் என்பது மக்களிடையே உள்ள தவறான கருத்து ஆகும். படுக்கையில் படுத்திருக்கும் போது தியானம் செய்வது எளிதாக இருப்பின், படுத்திருக்கும் போதே தியானம் செய்யலாம். தியானம் செய்வதன் முதல்படி, முதலில் வசதியான தோரணையில் இருக்க வேண்டும். மேலும் உட்கார்ந்திருப்பது வசதியாக இல்லாமல், ஏதேனும் இடையூறு ஏற்படின் தியானம் செய்ய விரும்ப மாட்டார்கள். எனவே தியானத்திற்கு சரியான இடம் மற்றும் வசதியான தோரணை அவசியமாகும்” என்று கூறியுள்ளார்.

படுத்துக் கொண்டு தியானம் செய்வதன் நன்மைகள்

  • படுக்கையில் தியானம் செய்வது மனம் மற்றும் உடலுக்கு நிவாரணம் அளிக்கிறது. இது நிம்மதியாக இருக்க உதவுகிறது.
  • பெண்கள் கர்ப்ப காலத்தில் அடிக்கடி மன அழுத்தம், சோர்வு போன்றவற்றை அனுபவிப்பர். இந்த சூழ்நிலையில் வசதிக்கேற்ப படுத்து ஓய்வெடுக்கலாம் மற்றும் படுக்கையில் தியானம் செய்யலாம்.
  • படுத்துக் கொண்டு தியானம் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், கீழ் முதுகுவலி போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
  • விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மருத்துவ சிகிச்சை காரணமாக படுக்கை ஓய்வெடுப்பவர்கள் போன்றோர்கள் இந்த வகை தியானத்தை மேற்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மொபைல் பார்த்துட்டே சாப்பிடுபவர்களா நீங்க? இந்த விளைவுகளை சந்திக்க தயாராகிக்கோங்க

படுக்கையில் தியானம் செய்வதால் ஏற்படும் விளைவுகள்

  • படுக்கை தியானத்தின் போது திடீரென தூங்கி விடலாம்.
  • இதனால் தியான செயல்முறை முழுமையடையாகாமல் போய்விடும்.
  • உட்கார்ந்த தியானம் சுவாச செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது.
  • படுக்கும் முன் அதிகளவு உணவு உட்கொண்டிருப்பின், தியானத்தின் போது வாயு அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம்.
  • படுத்திருக்கும் போது தவறான உடல் தோரணை அல்லது மெத்தையால் தியானம் பாதிக்கப்படலாம்.

படுத்து அல்லது உட்கார்ந்து தியானம் செய்வதில் உடல் சரியான தோரணையில் இருக்க வேண்டும். மேலும் தியானம் செய்த பிறகு உடல் மற்றும் மனம் லேசாக இருக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Mental Health Tips: எந்த நிலையிலும் மனம் தளராமல் மனதை வலிமையாக வைக்க இத ஃபாலோப் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Happy Holi 2024: ஹோலி கொண்டாடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

Disclaimer