Sat Sep 12, 2026 | 01:27 AM IST

Expert

Yoga And Meditation Benefits: தினமும் தியானம் செஞ்சா இந்த பலன்கள் எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.

Benefits Of Daily Yoga And Meditation: பழங்காலம் முதலே யோகா செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என பலரும் கூறியிருப்பதைக் கவனித்திருப்போம். இன்றைய காலகட்டத்தில் யோகா பற்றி மக்கள் பலர் அறிந்திருக்கின்றனர். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தங்கள் பிஸியான வாழ்க்கை முறையிலும் ஆரோக்கியமாக இருக்க யோகாவின் உதவியை நாடுவர்.

யோகா செய்வது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. யோகா செய்வதன் மூலம் உடலில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் சரி செய்ய முடியும். தினமும் யோகா செய்வதன் மூலம் பல்வேறு பெரிய நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். இதில் யோகா மற்றும் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து யோகா ஆசிரியர் ரஜ்னீஷ் ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Morning Meditation Benefits: காலையில் தியானம் செய்பவரா நீங்கள்? அப்ப இத நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.

நோய்களைத் தவிர்க்க உதவும் யோகா

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யோகா செய்வதை வழக்கமாக வைத்திருப்பர். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை தருவதாக அமையும். ஆரோக்கியமான மனம் மற்றும் உடலுக்கு தினமும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் ஒதுக்கி யோகா செய்யலாம். தினமும் பிராணாயாமத்துடன் மைக்ரோ உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

இந்த மாறிவரும் பருவ காலத்தில் பலரும் பலவிதமான நோய்களால் பாதிப்படைகின்றனர். இதனைத் தவிர்க்கவும் யோகா சிறந்த தேர்வாகும். இவ்வாறு செய்வது மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கிறது. அதன்படி, தினமும் வஜ்ராசனம், பாலாசனம், மற்றும் பவன்முக்தாசனம் போன்ற ஆசனங்களைச் செய்வதன் மூலம் உடலில் ஆற்றலை அதிகரிக்கலாம்.

தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

தியானம் தனிச்சிறப்பு மிக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். பழங்காலம் முதலே துறவிகள், முனிவர்கள், மற்றும் ஞானிகள் போன்றோரும் தியானத்தை கடைபிடித்துள்ளனர். இது மனிதர்களை ஆரோக்கியமாக உணர வைக்கிறது. இப்போது தியானம் செய்வதால் கிடைக்கும் சில நன்மைகள் குறித்து காணலாம்.

  • தியானம் செய்வது உடலில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இது மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
  • தினந்தோறும் தியானம் செய்வது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதை உணரலாம்.
  • தினமும் தியானத்தை மேற்கொள்வது மனச்சோர்வு பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது.
  • தியானம் செய்வது மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதன் மூலம் மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
  • மேலும், இது ஓய்வின்மை பிரச்சனையைக் குறைக்கிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • தியானம் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. இது செயல் அல்லது வேலையில் கவனம் செலுத்து மிகுந்த ஈடுபாட்டுடன் செய்ய வைக்கிறது

இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Exercises: தொப்பை வேகமாகக் குறைய தினமும் இந்த யோகாசனங்களை செய்யுங்க

Image Source: Freepik

Read Next

Japa Meditation Benefits: ஜப யோகா செய்வதில் இத்தனை நன்மைகளா? எப்படி செய்யணும் தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content