எடையிழப்பு முதல் மன ஆரோக்கியம் வரை.. தினமும் 30 நிமிஷம் ஜாகிங் போனா இந்த எல்லா நன்மைகளும் கிடைக்கும்

Benefits of jogging everyday for 30 minutes: தினமும் ஜாகிங் செய்வதை அன்றாட வழக்கத்த்தில் இணைப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் 30 நிமிடங்கள் தினந்தோறும் ஜாகிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
எடையிழப்பு முதல் மன ஆரோக்கியம் வரை.. தினமும் 30 நிமிஷம் ஜாகிங் போனா இந்த எல்லா நன்மைகளும் கிடைக்கும்


Benefits of jogging 30 minutes daily: அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பது அவசியமாகும். ஏனெனில் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், நீண்ட நாள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் உடற்பயிற்சி செய்வது அவசியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக, உடற்பயிற்சி செய்வதில் ஏராளம் உள்ளது. ஓடுதல், நடைபயிற்சி உள்ளிட்ட ஏராளமான உடற்பயிற்சிகள் உள்ளது. இதில் ஜாகிங் உடற்பயிற்சியும் அடங்கும். இது வேகமாக ஓடுவதை விட மெதுவான வேகத்தில் ஓடுவதை உள்ளடக்கியதாகும்.

பொதுவாக இது நிலையான மற்றும் தொடர்ச்சியான தாளத்தில் செய்யப்படுகிறது. இவை தசைகளை வலுப்படுத்தவும், கலோரிகளை எரிக்கவும், சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும் உதவக்கூடிய ஒரு பிரபலமான உடற்பயிற்சி ஆகும். ஓடுவது செரிமானத்தைத் தூண்டுவதன் மூலம் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது. இதனுடன், ஜாகிங் பயிற்சி எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்தவும், ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த மூட்டு நிலைத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Jogging Vs Exercise: ஜாகிங் vs உடற்பயிற்சி. இது ரெண்டுல எது பெஸ்ட்டா இருக்கும்?

ஜாகிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

உண்மையில் ஜாகிங் செய்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் தினமும் 30 நிமிடங்கள் ஜாகிங் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்.

எடை மேலாண்மைக்கு

உடலில் ஒட்டுமொத்த கலோரிகளை எரிக்கவும், ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் ஜாகிங் செய்வது ஒரு சிறந்த பயிற்சியாகும். அதன்படி, தினந்தோறும் 30 நிமிடங்கள் மிதமான வேகத்தில் ஓடுவது உடல் எடை மற்றும் தீவிர நிலை போன்ற காரணிகளைப் பொறுத்து சுமார் 300-400 கலோரிகளை எரிக்க உதவுகிறது.

அதிகரித்த ஆற்றல் அளவுகள்

தினந்தோறும் 30 நிமிடங்கள் ஜாகிங்கில் ஈடுபடுவது, நாள் முழுவதும் ஆற்றல் மட்டங்களை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது உடலில் ஆற்றல் அளவை மேம்படுத்த உதவுகிறது. இவை அதிக விழிப்புடனும், உற்பத்தித் திறனுடனும் உணர வைக்கிறது.

சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்கு

தொடர்ந்து ஜாகிங் செய்வதன் மூலம் சகிப்புத்தன்மையை மேம்படுத்தலாம். காலப்போக்கில், தொடர்ந்து ஜாகிங் செய்வது சகிப்புத்தன்மை அதிகரிக்க உதவுகிறது. இது சோர்வு இல்லாமல், நீண்ட நேரம் உடல் செயல்பாடுகளில் ஈடுபட வைக்கிறது.

நுரையீரல் திறனை மேம்படுத்த

தினந்தோறும் 30 நிமிடங்கள் ஜாகிங் மேற்கொள்வது நுரையீரலை வலுப்படுத்த உதவுகிறது. இவை ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜாகிங் செய்யலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த

ஜாகிங் போன்ற வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது உடலில் ஆன்டிபாடிகள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம். இவை நோய்த்தொற்றுக்கள் மற்றும் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்க

ஜாகிங் பயிற்சி இரத்த அழுத்த அளவைக் குறைக்கவும், ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கவும் உதவக்கூடிய பயிற்சியாகும். இவை உயர் இரத்த அழுத்தம் மற்றும் இது தொடர்புடைய உடல்நல சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்க வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Daily Jogging Benefits: தினமும் 30 நிமிஷம் ஜாகிங் போங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த

வழக்கமான ஜாகிங் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம், வலுவான இருதய அமைப்புக்கு வழிவகுக்குகிறது. வழக்கமான ஜாகிங் இதய தசையை வலுப்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம், இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

நல்ல தூக்கத்திற்கு

வழக்கமான ஜாகிங் பயிற்சி சிறந்த தூக்க முறைகளுக்கு பங்களிக்கிறது. இது உடலை சோர்வடையச் செய்வது ஆரோக்கியமான மற்றும் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டிற்கு

ஜாகிங் போன்ற வழக்கமான ஏரோபிக் உடற்பயிற்சி செய்வது மூளையின் செயல்பாடு, நினைவாற்றல் மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறத. மேலும் இது ஒட்டுமொத்த அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துவதாகவும், வயதானவுடன் தொடர்புடைய அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்த

ஜாகிங் செய்வது பல்வேறு மன ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் நல்ல உணர்வு ஹார்மோன்களான எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இதன் மூலம் மன அழுத்தம், பதட்டத்தைக் குறைக்கிறது. மேலும் இது மனநிலையை மேம்படுத்தவும் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. உடற்பயிற்சியின் போது எண்டோர்பின்களின் வெளியீடு மகிழ்ச்சி உணர்வு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஊக்குவிக்கிறது.

ஜாகிங் செய்வதில் புதியவராக இருந்தாலோ அல்லது ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தாலோ, எந்தவொரு தீவிர உடற்பயிற்சி வழக்கத்தையும் தொடங்கும் முன்னதாக ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: ஜாகிங் vs வாக்கிங்.. இவற்றில் எது சிறந்தது.? நிபுணர்களிடமிருந்து தெரிஞ்சிக்கலாம் வாங்க..

Image Source: Freepik

Read Next

சுறுசுறுப்பான நடைபயிற்சி ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அபாயத்தைக் குறைக்குமா.? நிபுணர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்..

Disclaimer