Daily Jogging Benefits: தினமும் 30 நிமிஷம் ஜாகிங் போங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க.

  • SHARE
  • FOLLOW
Daily Jogging Benefits: தினமும் 30 நிமிஷம் ஜாகிங் போங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க.

தினமும் 30 நிமிடங்கள் ஜாகிங் செய்வது இதய பாதிப்பு மட்டுமல்லாமல் பல்வேறு தீவிர நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. பல்வேறு காரணங்களால் பலராலும் உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்படலாம். அவர்கள் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் ஜாகிங் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளைத் தருகிறது. இதில் தினமும் ஜாகிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Exercise To Overcome Stress: மன அழுத்தத்திலிருந்து விடுபட இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

தினமும் 30 நிமிடங்கள் ஜாகிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஒருவர் தினந்தோறும் 30 நிமிடங்கள் ஜாகிங் செய்வது அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைக்க உதவும்.

இரத்த அழுத்த நோயாளிகளுக்கு

ஜாகிங் செய்வது இரத்த அழுத்த நோயாளிகள் குறிப்பாக உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். ஜாகிங் அல்லது மெதுவாக ஓடும் போது, உடலில் இரத்த நாளங்களை நீட்டி, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

எடை மேலாண்மைக்கு

உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது அதிக உடல் எடையைக் கொண்டிருப்பதாகும். ஜாகிங் செய்வதன் மூலம் உடலில் இருந்து கூடுதல் கலோரிகளைக் குறைக்கவும், எடையை நிர்வகிக்கவும் முடியும். உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்களுக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக அமையும்.

இதய ஆரோக்கியத்திற்கு

ஜாகிங் செய்வது சிறந்த கார்டியோ பயிற்சியாகும். இது கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற இதய நோய்களின் ஆபத்து காரணிகளைக் குறைக்கவும் உதவுகிறது. ஜாகிங் செய்வதன் மூலம் பக்கவாதம், மாரடைப்பு செயலிழப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Chronic Pain Remedies: உடம்பு வலியால் நீண்ட நாள்களாக அவதியா? இதை டிரை பண்ணி பாருங்க

நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்க

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் சுவாச பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். நுரையீரலை ஆரோக்கியத்திற்கு தினமும் ஓடுவது மிகவும் நன்மை பயக்கும். ஜாகிங் செய்வது நுரையீரலை சிறப்பாக செயல்பட வைக்கிறது. மேலும், இது ஆக்ஸிஜனேற்ற செயல்முறையை மேம்படுத்துகிறது.

மன ஆரோக்கியத்திற்கு

மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றிலிருந்து விடுபடவும், மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் ஜாகிங் சிறந்த பயனுள்ள பயிற்சியாகும். மெதுவாக ஓடும் போது நமது மூளிய என்டோர்பின்கள் என்ற நல்ல ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது மனநிலையை மேம்படுத்தி, மகிழ்ச்சியாக இருக்க வைக்கிறது.

நல்ல தூக்கம் பெற

தினந்தோறும் ஜாகிங் செய்வதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இது பதட்டம், சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்துகிறது. மேலும், மனதை நிம்மதியாக வைக்க உதவுகிறது. இந்நிலையில் இரவில் நல்ல தரமான தூக்கத்தைப் பெற முடியும்.

தினமும் ஜாகிங் செய்வது மேலே கூறப்பட்ட பல்வேறு வகையான நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Finger Strengthening Exercises: வேலை அதிகமாக செஞ்சி கை விரல் எல்லாம் வலிக்குதா? அப்ப இத செய்யுங்க.

Image Source: Freepik

Read Next

Morning Walk Tips: மார்னிங் வாக்கிங்கு பின் என்ன சாப்பிடணும்? உடல் எடை குறைய டிப்ஸ்!

Disclaimer

குறிச்சொற்கள்