Fri Sep 11, 2026 | 11:15 PM IST

Expert

Finger Strengthening Exercises: வேலை அதிகமாக செஞ்சி கை விரல் எல்லாம் வலிக்குதா? அப்ப இத செய்யுங்க.

How To Increase Finger Strength With Exercise: தற்போதைய காலகட்டத்தில் ஓய்வே இல்லாமல் பலரும் பல்வேறு வேலைகளைச் செய்து வருகின்றனர். அதே சமயம், அவர்கள் தங்களது உடல்நிலை குறித்து சிந்திப்பதையே மறந்து விடுகின்றனர். குறிப்பாக, தினந்தோறும் 8 முதல் 10 மணி நேர அளவில் கணினி விசைப்பலகையிலேயே விரல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். நாம் எந்தவித ஓய்வும் இன்றி, தொடர்ந்து வேலை செய்வது சோர்வை உண்டாக்குவதுடன், விரல்களில் பலவீனத்தை உண்டாக்கும்.

இந்த பிரச்சனைகளைச் சந்திக்கும் நபர்கள் ஆரம்பத்திலேயே விரல்களை வலிமையாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இதில் குறிப்பாக விரல்களை வலிமையாக்க உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். விரல்கள் தொடர்பான உடற்பயிற்சி செய்வது, விரல்களை வலுப்படுத்தவும், அனைத்து வகையான வேலைகளையும் செய்ய ஆற்றலைத் தருவதாக அமையும். இதில், யாஷ் ஃபிட்னஸ் பயிற்சியாளர் யாஷ் அகர்வால் அவர்கள் விரல்களை வலிமைப்படுத்த உதவும் உடற்பயிற்சிகள் குறித்து பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Knee Strength Exercise: மூட்டு வலி காணாமல் போக இதை செய்து பாருங்கள்!

விரல்கள் வலிமைக்கு உடற்பயிற்சி

கை விரல்களை வைத்து செய்யப்படும் இந்த உடற்பயிற்சிகள் விரல்களை வலிமையாக மாற்ற உதவுகிறது.

பிடிப்புப் பயிற்சிகள்

இந்த வகை பயிற்சிகள் கனமான பொருள்களைத் தூக்க உதவுகிறது. உண்மையில் இவை விரல்களை பிடியை பலப்படுத்துவதுடன், எந்த வகையான பொருள்களையும் எளிதில் தூக்க வைக்கிறது. குறிப்பாக, இந்த உடற்பயிற்சி விளையாட்டு வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பயிற்சியை செய்ய ஒரு கைப்பிடி அல்லது மென்மையான பந்தை பயன்படுத்தலாம். இதை உள்ளங்கையில் எடுத்து நன்கு அழுத்தி பின்னர் விடுவிக்க வேண்டும். இவ்வாறு கையால் 10 முதல் 15 முறை செய்யலாம்.

கட்டை விரல் எதிர்ப்பு

இந்த பயிற்சியின் போது, அனைத்து விரல்களாகும் கட்டைவிரலின் நுனியைத் தொட வேண்டும். இதை ஒரு கையால் சுமார் 15 முறை செய்யலாம். இதே போன்று மற்றொரு கையால் செய்யலாம். இந்த வகை பயிற்சிகள் நெகிழ்வுத் தன்மையை அதிகரிப்பதுடன், விரல்களில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் தர உதவுகிறது.

விரல் புஷ்-அப்கள்

விரல் புஷ்-அப்கள் செய்வது எல்லோருக்கும் சாத்தியமில்லாதது ஆகும். ஆனால், பொதுவாக புஷ்-அப்களை எடுக்க விரும்புவோர்கள், விரல் புஷ்-அப்களை முயற்சிக்கலாம். முடியாவிட்டால், முயற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். இது கைகளின் பிடியை வலுப்படுத்தக்கூடிய உடற்பயிற்சியாகும். மேலும், இந்த உடற்பயிற்சி உள்ளங்கைகளின் வலிமையை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Breathing Exercise Benefits: தினமும் மூச்சுப்பயிற்சி செய்வதால் உங்களுக்குக் கிடைக்கும் அற்புத நன்மைகள்

கிட்டார்-பியானோ வாசிப்பது

இசைக்கருவிகள் பெரும்பாலும் கை விரல்களைப் பயன்படுத்துமாறே அமைவதாகும். இதில் கிட்டார் மற்றும் பியானோ போன்ற கருவிகள் அடங்கும். கிட்டார், பியானோ போன்றவற்றை வாசிப்பது விரல்களை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் இது விரல்களின் தசைகளை மேம்படுத்துகிறது.

விரல்களை நீட்டுதல்

விரல்களை நீட்டுவதும், விரல் வலிமைக்கு மிகச்சிறந்த பயிற்சியாகும். இதைச் செய்வது எளிதானதாகும். இதற்கு இடது கையின் விரல்களை பின்னோகி வைத்து, உங்கள் வலது கையின் விரல்களால் தரையில் இழுக்க முயற் சிக்கலாம். ஆனால், முடிந்தவரை விரல்களை எளிமையாக வரைய வேண்டும். இவ்வாறு செய்வது வலியில் இருந்து நிவாரணம் தருவதுடன், விரல்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இந்த பயிற்சி கிட்டார் வாசிப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Chronic Pain Remedies: உடம்பு வலியால் நீண்ட நாள்களாக அவதியா? இதை டிரை பண்ணி பாருங்க

Image Source: Freepik

Read Next

Fitness: காலையில் உடற்பயிற்சி உயிருக்கே உலை வைக்கும்… ஷாக்கிங் ரிப்போர்ட்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content