Muscle strengthening tips: வீட்டிலேயே தசை வலிமையை மேம்படுத்த நீங்க செய்ய வேண்டியவை

How to increase muscle strength: ஓடுவது கால்களை வலிமையாக்கும் என்று கூறுவர். இது தவிர, தசை வலிமையை அதிகரிக்க இன்னும் சில வழிகள் உள்ளன. இதில் தசை வலிமையை அதிகரிக்கவும், கால்களை வலுவாக்கவும் உதவும் சில குறிப்புகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Muscle strengthening tips: வீட்டிலேயே தசை வலிமையை மேம்படுத்த நீங்க செய்ய வேண்டியவை


How to increase muscle strength in legs: பொதுவாக ஓடுவது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் பயிற்சி ஆகும். ஓடுவது உடல் தகுதியைப் பேணுவதற்கும், உடல் தகுதியைப் பெறுவதற்கும் உதவக்கூடிய மிகச் சிறந்த மற்றும் எளிதான முறைகளில் ஒன்றாகும். ட்ரெட்மில்லில் செய்வது, நடைபாதையில் ஓடுவது அல்லது கிராமப்புறங்களில் ஓடுவது என எதுவாக இருந்தாலும் ஓடுவது உடல், மன ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

ஓடுவது கால்களை வலிமையாக்குமா?

கால்வலி அல்லது தசை வலிமை குறைதல் போன்ற எதிர்மறை பாதிப்புகளை அனைவரும் சந்திக்கும் நிலை ஏற்படலாம். அதாவது ஒன்று அல்லது இரண்டு கால்களிலும் பலவீனம் ஏற்படலாம் அல்லது உடல் முழுவதும் பரந்த பலவீன உணர்வின் ஒரு பகுதியாக இருக்கலாம். இதைத் தணிப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஓடுவது ஒரு கடினமான பணியாக இருக்கலாம். உடற்பயிற்சியைப் பொறுத்து ஓடுவது தசை வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், தசை வலிமையை அதிகரிப்பது ஓடுவதன் மூலம் மட்டும் சாத்தியமல்ல.

இந்த பதிவும் உதவலாம்: Reduce Thigh Size: நடக்கும் போது தொடை உறசுதா? 1 வாரத்தில் தொடையை குறைக்க இதை செய்யவும்!

ஆய்வின் படி, குறுகிய கால, அதிக தீவிரம் கொண்ட ஓட்டம் கால் தசைகளை உருவாக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நீண்ட கால ஓட்டம் தசைகளை சேதப்படுத்தி, அவை வளர்வதைத் தடுக்கிறது. ஓட்டங்களின் நீளம் மற்றும் தீவிரத்தைப் பொறுத்து, ஓடுவது கீழ் உடல் தசைகளை வளர்க்க உதவுகிறது. தசை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பயிற்சிகளில் ஓடுவதற்குப் பதிலாக வேகமாக ஓடுவதும் அடங்கும்.

கால்களில் தசை வலிமையை மேம்படுத்த உதவும் வழிகள்

வழக்கமான உடற்பயிற்சி

பொதுவாக வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். உடல் செயல்பாடுகளை மேற்கொள்வது தசைகளை வலுப்படுத்துவதற்கான சிறந்த தேர்வாகும். அதன் படி, வாரத்திற்கு ஐந்து முறை 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நடப்பது வலிமையான தசைகளுக்கு வழிவகுக்கிறது. கால்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளாக மலையேற்றம், சைக்கிள் ஓட்டுதல், ஜாகிங் மற்றும் நீச்சல் பயிற்சி மற்றும் வாரத்திற்கு சில முறை ஓடுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர்

வைட்டமின்கள் பி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்றவை ஆரோக்கியமான தசைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகும். இவை அனைத்துமே ஆப்பிள் சைடர் வினிகரில் ஏராளமாக உள்ளது. கூடுதலாக இந்த ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், உணவில் இருந்து முக்கிய ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதற்கு ஒரு கிளாஸ் அளவிலான வெதுவெதுப்பான நீரில் 1 முதல் 2 தேக்கரண்டி பச்சையான, வடிகட்டப்படாத ஆப்பிள் சீடர் வினிகர், சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இந்த டானிக்கை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்துவதன் மூலம் கால்களை வலுப்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Vitamin d deficiency: குளிர்காலத்தில் உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தா வைட்டமின் டி குறைபாடு இருக்குனு அர்த்தம்

போதுமான அளவு வைட்டமின் டி பெறுவது

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் டியும் அடங்கும். இதன் பற்றாக்குறை காரணமாக பல உடல்நல பாதிப்புகள் உண்டாகலாம். இதில் கால் தசை பலவீனமும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. உடலில் போதுமான அளவு வைட்டமின் டி பெறுவதற்கு, வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்ளலாம். இது தவிர, தினமும் காலையில் வெயிலில் சிறிது நேரம் செலவிடுவதன் மூலமும் இந்த தாதுப்பொருளை போதுமான அளவு பெற முடியும்.

சூடான எண்ணெய் மசாஜ்

தசைகளை வலுப்படுத்துவதில் மசாஜ் செய்வது மிகுந்த நன்மை பயக்கும். ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கால்களை சூடான தேங்காய், ஆலிவ் அல்லது கடுகு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யலாம். இந்த எண்ணெய்களைக் கொண்டு கால்களை மசாஜ் செய்வது, கால்களை வலுப்படுத்துவதுடன், அதன் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது அசௌகரியம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

நீரேற்றமாக இருப்பது

நீரிழப்பு பொதுவாக பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணமாகலாம். இதில் தசைப்பிடிப்பு மற்றும் கால்களில் பலவீனம் போன்றவை அடங்கும். இவை அனைத்துமே நீரிழப்பால் ஏற்படக்கூடியதாகும். எனவே உடலை நீரேற்றமாக வைக்க போதுமான நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீரைத் தவிர, தண்ணீர் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram 

இந்த பதிவும் உதவலாம்: Leg cramp at night: தூங்கும்போது கால் பிடிப்பு அல்லது வலி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

Image Source: Freepik

Read Next

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே எளிமையாக கருவளையத்தை போக்கலாம்.!

Disclaimer