Fri Sep 11, 2026 | 11:45 PM IST

Mental Health Tips: எந்த நிலையிலும் மனம் தளராமல் மனதை வலிமையாக வைக்க இத ஃபாலோப் பண்ணுங்க

Ways To Strengthen Mental Health: இன்று வேலைப்பளு, உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இதனால், நாளுக்கு நாள் மனம் பலவீனமடைவதுடன், அது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் சூழ்நிலையை உண்டாக்கலாம்.

மன அழுத்தம், பதட்டம், சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதுடன், மனதை வலிமையாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஆரோக்கியம் மற்றும் சமச்சீரான ஊட்டச்சத்துக்கள், உடல் செயல்பாடு போன்ற பல்வேறு நிலைகளின் மூலம் மனநிலையை மேம்படுத்தலாம். இது ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் நிலையைத் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: Mental Health Tips: மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க இத தினமும் செய்யுங்க.

மன வலிமை அதிகரிக்க செய்ய வேண்டியவை

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது

உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் முக்கியமானதாகும். வழக்கமான உடல் செயல்பாட்டை மேற்கொள்வதன் மூலம் கவலை, மனச்சோர்வு, பதட்டம் உள்ளிட்ட மன அழுத்த பிரச்சனைகளைக் குறைக்கலாம். எனவே நடைபயிற்சி, யோகா, ஓடுதல் மற்றும் தோட்டக்கலை போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது உடலில் என்டோர்பின் அளவை உயர்த்துகிறது. என்டோர்பின் உடனடியாக மனநிலை ஊக்கத்தை அளிக்கிறது.

போதுமான தூக்கம்

மன ஆரோக்கியம் தூக்கத்துடன் தொடர்புடையதாகும். தூக்கமின்மை காரணமாக மனச்சோர்வு, மன அழுத்தம், பதட்டம் அதிகரிக்கலாம். எனவே நல்ல தூக்கத்தைப் பேணுவதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும். நல்ல தூக்கத்திற்கு வழக்கமான தூக்க அட்டவணையைப் பராமரிப்பது, அமைதியான சூழலை உருவாக்குதல் போன்றவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும். மனநிலை மற்றும் அறிவாற்றல் திறனை மேம்படுத்துவதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

இயற்கை சூழலை அனுபவித்தல்

இயற்கை சூழலில் நேரத்தை செலவிடுவதன் மூலம் மன ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளைப் பெறலாம். சிறிது தூரம் வாக்கிங் செல்வது, பூங்காவில் வழக்கமான நடைபயிற்சிகளை மேற்கொள்வது போன்றவை மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Mental Health:இந்த 5 பழக்கங்கள் உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்!

திரை நேரத்தை வரம்பிடுதல்

அதிகப்படியான மொபைல், டிவி, லேப்டாப் பயன்பாடு போன்றவை மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கலாம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் வரம்பு இல்லாமல் பெரும்பாலான நேரங்களில் திரையிலேயே நேரத்தை செலவிடுகின்றனர். இதற்கு இந்த திரைப்பயன்பாட்டிற்கு எல்லைகளை அமைப்பதன் மூலம் ஆரோக்கியமான உறவை மேம்படுத்தலாம்.

ஆரோக்கியமான உணவு தேர்வு

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அந்த வகையில் ஆக்ஸிஜனேற்றிகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மெலிந்த புரதம் நிறைந்த உணவை உட்கொள்வது மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், மனநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. சமச்சீர் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் மூளையின் உகந்த செயல்பாட்டிற்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்களைப் பெறுவதை உறுதி செய்கிறது.

மன அமைதிக்கான பயிற்சி

கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்த 20 நிமிடங்கள் தியானம் மேற்கொள்வது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றிலிருந்து விடுபடடுவதுடன் மனதை அமைதியாக வைத்திருக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Mental illnesss: இந்த அறிகுறிகள் தென்பட்டால்… கவனமா இருங்க!

Image Source: Freepik

Read Next

உங்க மெமரி பவர் அதிகமாக தினமும் இத நீங்க செஞ்சா போதும்.

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content