Sat Sep 12, 2026 | 12:05 AM IST

Doctor Verified

உங்க மெமரி பவர் அதிகமாக தினமும் இத நீங்க செஞ்சா போதும்.

Tips To Increase Memory Power: மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமையும். அந்த வகையில் கூர்மையான மனமும், கூர்மையான நினைவாற்றலும் வேண்டும் என நினைப்பவர்கள் ஏராளம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அதிக மன அழுத்தம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் நினைவாற்றல் இழப்பு, குறைவான மூளைத் திறன் உள்ளிட்ட பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறோம்.

இது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், சிறு குழந்தைகளுக்கும் வர தொடங்கியுள்ளது. மேலும், இது அவர்களின் படிப்பையும் பாதிக்கலாம். எனவே குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் சரியான வாழ்க்கை முறையைக் கையாள்வதன் மூலம் புத்தியை கூர்மைப்படுத்தலாம். மேலும் இது ஞாபக சக்தியை அதிகரிக்கலாம். உணவைத் தவிர வேறு எந்த வழிகளில் நினைவாற்றலை அதிகரிக்கலாம் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். இது குறித்து சாரதா கிளினிக்கின் மருத்துவர் சில முறைகளைப் பற்றி எடுத்துரைத்துள்ளார். அதைப் பற்றி இதில் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Early Wakeup Benefits: அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

நினைவாற்றலை அதிகரிக்க உதவும் பழக்க வழக்கங்கள்

தியானம்

நினைவாற்றல் மேம்பாடு மற்றும் புத்திக் கூர்மைக்கு தியானம் எளிய மற்றும் சிறந்த வழியாகும். இது உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் தினந்தோறும் தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், நினைவாற்றலை மேம்படுத்துகிறது. தியானம் செய்வது மூளையைத் தளர்த்தி நினைவாற்றலைக் கூர்மையாக்குகிறது.

போதுமான உறக்கம்

தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. இன்றைய கால கட்டத்தில் வேலைப்பளு, மொபைல் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரவு தூக்கத்தை வெறுப்பதுடன், குறைவான நேரமே தூங்குகின்றனர். இதனால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். குறைவான தூக்கம் மன அழுத்தத்தை உண்டாக்குவதுடன், நினைவாற்றலை பலவீனப்படுத்துகிறது. மேலும், இது எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். எனவே நினைவாற்றல் மேம்பாடு மற்றும் மூளைத் திறன் அதிகரிக்க, நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.

மீன் எண்ணெய்

மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில், இதில் DHA நிறைந்துள்ளது. இவற்றை எடுத்துக் கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இது தவிர, பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Mental Health Tips: மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க இத தினமும் செய்யுங்க.

உடல் எடை இழப்பு

இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக உடல் பருமன் மாறிவிட்டது. அதிக உடல் எடையைக் கொண்டிருக்கும் போது, நோய்களின் ஆபத்தை அதிகரிக்கலாம். உடல் பருமன் காரணமாக, நோயெதிர்ப்புச் சக்தி குறைகிறது. இது உடலில் இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கலாம். உடல் பருமன் காரணமாக அல்சைமர் நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.

சர்க்கரை உட்கொள்ளல் குறைப்பது

நினைவாற்றலை அதிகரிக்க சில உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வதும், சிலவற்றைத் தவிர்ப்பதும் அவசியம் ஆகும். அந்த வகையில், நினைவாற்றல் மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்க சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில், அதிக சர்க்கரை உணவுகள் நீரிழிவு, இதய நோய், மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும், இது அதிகம் உட்கொள்வதால் நினைவாற்றலை பலவீனப்படுத்தி, மூளையையும் மங்கச் செய்யும்.

நினைவாற்றல் மேம்பாட்டிற்கு இந்த முறைகளைக் கையாளலாம். எனினும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டிருந்தால், மருத்துவ ஆலோசனைக்குப் பின்னரே இந்த முறைகளைக் பின்பற்ற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Oil Bath Benefits: எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

Image Source: Freepik

Read Next

Mental illnesss: இந்த அறிகுறிகள் தென்பட்டால்… கவனமா இருங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content