Food combinations that can help boost your brain health: அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்கள் மூளை ஆரோக்கியத்தைக் கணிசமாக பாதிக்கிறது. குறிப்பாக, நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கை முறை, போதிய உடல் செயல்பாடு இல்லாதது, ஆரோக்கியமற்ற உணவுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மூளைத்திறன் பாதிக்கப்படலாம். மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அன்றாட உணவில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். அதன் படி, சில உணவுகளை இணைப்பது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது.
இதன் மூலம் உடல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை மிகவும் திறம்பட பயன்படுத்த முடியும். மூளை ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நினைவாற்றல், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மன தெளிவை மேம்படுத்துவதில் உணவு சேர்க்கைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. சில குறிப்பிட்ட உணவுகளை இணைப்பது வைட்டமின்கள் பி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற மூளைக்கு ஆதரவான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்கிறது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், நரம்பியக்கடத்தி செயல்பாட்டை மேம்படுத்தவும், நியூரான்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இதில் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் சிறந்த உணவு சேர்க்கைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Baby Brain Food: கருவிலேயே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் உணவுகள் எவை?
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுச் சேர்க்கைகள்
கிரீன் டீ மற்றும் எலுமிச்சை
மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளான கேட்டசின்கள் கிரீன் டீ-யில் உள்ளது. அதே சமயம், எலுமிச்சையில் இருந்து வைட்டமின் சி உடன் இணைக்கப்படும்போது அவற்றின் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. இந்த கலவையானது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், வயது தொடர்பான மூளைச் சிதைவைத் தடுக்கவும் உதவுகிறது.
தக்காளி & ஆலிவ் எண்ணெய்
தக்காளியில் உள்ள லைகோபீன் மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இந்த லைகோபீன் கொழுப்பில் கரையக்கூடியது என்பதால், அதை ஆலிவ் எண்ணெயுடன் இணைப்பது அதன் உறிஞ்சுதலை கணிசமாக மேம்படுத்துகிறது. இது வீக்கத்தைக் குறைக்கவும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
வால்நட்ஸ் மற்றும் கிரேக்க தயிர்
வால்நட்ஸில் நிறைந்துள்ள தாவர அடிப்படையிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் போன்றவை மூளையின் செயல்பாட்டை ஆதரிக்கிறது. அதே சமயம், கிரேக்க தயிரில் ஆரோக்கியமான குடல்-மூளை இணைப்பை பராமரிக்க உதவும் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளது. குடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதன் மூலம் சிறந்த மனநிலை மற்றும் மன தெளிவை அடைய முடியும்.
பசலைக் கீரை மற்றும் ஆலிவ் எண்ணெய்
லுடீன் போன்ற மூளைக்கு உதவும் ஆக்ஸிஜனேற்றிகள் பசலைக் கீரையில் நிறைந்து காணப்படுகிறது. அதே சமயம், நேரத்தில் ஆலிவ் எண்ணெயில் நிறைந்திருக்கும் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் இந்த ஆக்ஸிஜனேற்றிகளின் உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது. இந்தக் கலவையானது மூளை செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும், நரம்பு சிதைவு நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Dementia: ஆலிவ் ஆயில் டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்குமாம் - ஹார்வர்ட் ஆய்வு!
மஞ்சள் மற்றும் கருமிளகு
மூளையின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு சேர்மமான குர்குமின் கலவையானது மஞ்சளில் உள்ளது. இது தானாகவே குறைந்த உயிர் கிடைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும், கருமிளகில் பைப்பரின் உள்ளது. இது குர்குமின் உறிஞ்சுதலை 2000% வரை அதிகரிக்கிறது. இது நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும், மூளை வீக்கத்தைக் குறைப்பதற்கும் ஒரு சிறந்த கலவையாக அமைகிறது.
பெர்ரி மற்றும் டார்க் சாக்லேட்
பெர்ரி பழங்களில் உள்ள ஃபிளாவனாய்டுகள் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. அதே சமயத்தில், டார்க் சாக்லேட்டில் மூளை செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இந்த இரண்டின் கலவையானது நினைவாற்றலை மேம்படுத்தவும், அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறைக்கவும் உதவுகிறது.
சால்மன் மற்றும் வெண்ணெய்
சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கவும், மூளை வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த சால்மன் மீனை வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த வெண்ணெய் பழத்துடன் இணைப்பது ஒமேகா-3 உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. மேலும், மூளை செல்களுக்கு கூடுதல் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பை வழங்குகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: மூளை ஆற்றலை அதிகரிக்கும் ஃப்ரோசன் ஃபுட்ஸ் இங்கே..
Image Source: Freepik