Sat Sep 12, 2026 | 01:53 AM IST

Expert

கிச்சனில் இருக்கும் இந்த எளிய உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுங்க.. ஏராளமான நன்மைகள் கிடைக்கும்

உடலின் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சில உணவுக்கலவைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஆதரிக்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும் என்னென்ன உணவுச்சேர்க்கைகள் நன்மை பயக்கும் என்பது குறித்து காணலாம்.

அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. அவ்வாறே, பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், நட்ஸ், விதைகள் மற்றும் பானங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது அவசியமாகும். அதே சமயம், சில உணவுகளைச் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு அபாயத்தை விளைவிக்கலாம்.

அதே போல, சில உணவுகளை ஒன்றாக இணைப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும். இதில் அன்றாட உணவில் எந்தெந்த எளிய உணவுகளை இணைக்கலாம், அவை என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

சமையலையின் குணப்படுத்தும் சேர்க்கை உணவுகள்

ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா அவர்களின் கூற்றுப்படி, “எளிய உணவுகள் ஒன்றாகச் சேர்ந்தால் இவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கும் என்று யாருக்குத் தெரியும்?” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: வாழைப்பத்துடன் இந்த உணவுகளை மறந்தும் சேர்த்து சாப்பிடாதீங்க.. அப்றம் பிரச்சனை உங்களுக்குத் தான்

சுண்டல் மற்றும் வெல்லம்

“இது ஆற்றல் மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது. மேலும் இது சகிப்புத்தன்மை மற்றும் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது” என நிபுணர் பகிர்ந்துள்ளார். அதாவது, சுண்டலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு கூடுதல் நன்மை பயக்கும். சுண்டல் புரதம், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் வெல்லம் இரும்புச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த மூலமாகும். இது உடலுக்கு ஆற்றலை அளிக்கவும், இரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது.

முட்டைக்கோஸ் மற்றும் சீரகம்

“இந்த உணவுச் சேர்க்கைகள் செரிமானம் மற்றும் வீக்கம் நிவாரணத்திற்கான குடலுக்கு ஏற்ற ஜோடியாக அமைகிறது” என நிபுணர் கூறுகிறார். முட்டைக்கோஸில் வைட்டமின்கள் ஏ, சி, கே, தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை செரிமானம், எலும்பு ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். மேலும் இதில் சீரகம் சேர்ப்பது இரத்த சர்க்கரையை சீராக வைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், பெப்டிக் அல்சரைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

வெள்ளரி மற்றும் புதினா

“இந்த குளிர்ச்சியான சேர்க்கையானது அமிலத்தன்மையை எதிர்த்துப் போராடவும் வீக்கத்தை வெல்லவும் உதவுகிறது” என நிபுணர் கூறுகிறார். வெள்ளரி, புதினா இரண்டுமே நீர்ச்சத்தை அதிகரிப்பதுடன், சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்து, செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் எடை குறைப்புக்கு உதவுகிறது. இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்வது உடலைப் புத்துணர்ச்சியாகவும், உடலை நச்சுத்தன்மையற்றதாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: காலையில ஒரு நொடியில் வயிறு சுத்தமாகனுமா? - நைட் வெல்லத்துடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டு பாருங்க...!

பருப்பு மற்றும் எலுமிச்சை

ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி,“இவை இரும்பு மற்றும் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது உடலில் சோர்வை எதிர்த்துப் போராடவும், இரத்த சோகையை குணமாக்கவும் உதவுகிறது” என்று கூறுகிறார். பருப்பில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்ச உதவுகிறது. மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தவும், வாயு மற்றும் அஜீரணத்தைப் போக்கவும் உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது.

View this post on Instagram

A post shared by Shweta Shah (@shweta_shah_nutritionist)

வால்நட்ஸ் மற்றும் பேரீச்சம்பழம்

இந்த சேர்க்கை உணவுகள் மூளை எரிபொருள் மற்றும் உடற்பயிற்சிக்கு முந்தைய இயற்கை ஆற்றல் தரக்கூடியது என நிபுணர் குறிப்பிடுகிறார். வால்நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளை ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் பேரீச்சம்பழம் ஆற்றலை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது, சர்க்கரையை மெதுவாக உறிஞ்சவும், நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கவும் உதவுகிறது.

ப்ரோக்கோலி மற்றும் கடுகு விதைகள்

இந்த உணவுச்சேர்க்கையானது புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆக்ஸிஜனேற்ற இரட்டையர் என நிபுணர் கூறுகிறார். ப்ரோக்கோலி உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் கடுகு விதைகள், அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகும். இது செரிமானத்திற்கு உதவுவதுடன், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த உணவுப்பொருள்கள் உடலுக்கு நல்லது தான்.. ஆனால் இந்த உணவுச்சேர்க்கை ஆபத்தைத் தரும்

Image Source: Freepik

Read Next

இந்த உறுப்பை பாதுகாப்பதன் மூலம் சருமத்தை பளபளப்பாக வைக்கலாம்.. அதற்கு நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 23, 2025 17:02 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content