Which foods should i not eat together: நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். எனினும், சில ஆரோக்கியமான உணவுகளை ஒன்றாகச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். ஏனெனில் சில ஊட்டச்சத்துக்களின் சேர்க்கைகளின் காரணமாக செரிமானம் அல்லது உறிஞ்சுதலில் தலையிடக்கூடும். ஒவ்வொரு உணவும் தானாகவே ஆரோக்கியமானதாக இருப்பினும், அவற்றை இணைப்பது அதன் ஊட்டச்சத்து மதிப்பைக் குறைக்கலாம்.
ஆனால், இது வீக்கம் அல்லது அமிலத்தன்மை போன்ற அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் அல்லது நீண்டகால பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். இதற்கு ஒவ்வொரு உணவையும் உடைக்கத் தேவையான pH அளவுகள், ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கும் வேதியியல் தொடர்புகள் அல்லது செரிமான நேரத்தில் உள்ள வேறுபாடுகள் போன்றவை காரணமாக இருக்கலாம். சிறந்த ஆரோக்கியத்திற்காக இது போன்ற உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதில் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய சில உணவுகளைக் காணலாம்.
சிறந்த ஆரோக்கியத்திற்கு ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்
பால் மற்றும் வாழைப்பழங்கள்
பால், வாழைப்பழத்தைப் பயன்படுத்தி வாழைப்பழ ஸ்மூத்தியைத் தயார் செய்யலாம். இந்த பிரபலமான ஸ்மூத்தி கலவை, செரிமான அமைப்புக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். இது செரிமானத்தை மெதுவாக்குகிறது. ஆயுர்வேதத்தின் படி, இந்தக் கலவை உடலில் நச்சுகள் உருவாக காரணமாகலாம். இது சோம்பல் மற்றும் வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தயிர் மற்றும் முலாம்பழத்தை ஒன்றாக சாப்பிடலாமா.? நன்மைகள் மற்றும் தீமைகள் இங்கே..
முக்கிய கட்டுரைகள்
உணவுடன் பழங்கள்
பழங்கள் விரைவில் செரிமானம் அடையக்கூடும். ஆனால், புரதம் செரிமானம் அடைய அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளும். இந்நிலையில் சீஸ், முட்டை அல்லது இறைச்சி போன்ற உணவுகளுடன் பழங்களை சாப்பிடுவது வயிற்றில் அவற்றை நொதிக்கச் செய்து வாயு, வயிறு உப்புசம் மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுக்கலாம்.
தக்காளி மற்றும் வெள்ளரிகள்
தக்காளி அமிலத்தன்மை கொண்டதாகும். மேலும், வெள்ளரிகளில் வைட்டமின் சி-யை அழிக்கக் கூடிய அஸ்கார்பினேஸ் என்ற நொதி உள்ளது. இதனால் இவை இரண்டையும் சாப்பிடுவதால், வெள்ளரிக்காய் தக்காளியில் உள்ள வைட்டமின் சி அளவைக் குறைக்கிறது. மேலும் இது ஆக்ஸிஜனேற்ற நன்மைகளை பலவீனப்படுத்தலாம்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் காபி அல்லது தேநீர்
காபியில் காஃபின் மற்றும் தேநீரில் டானின்கள் உள்ளது. இதனால், இவற்றை கீரை அல்லது பயறு போன்ற தாவர உணவுகளுடன் உட்கொள்வது ஹீம் அல்லாத இரும்பை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வதால், காலப்போக்கில் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கலாம்.
பால் மற்றும் சிட்ரஸ் பழங்கள்
பால் புரதம் மற்றும் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். அதே சமயம், சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டவையாகும். இதை ஒன்றாக உட்கொள்வதால், அமிலம் வயிற்றில் பால் தயிர் ஆகிவிடலாம். இதன் காரணமாக அஜீரணம் அல்லது கனமான உணர்வு ஏற்படலாம். இது காலப்போக்கில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சிக்கன் உடன் இது, பால் உடன் இது.. இன்னும் பல., ஆரோக்கியமா இருந்தாலும் இது எதையும் சேர்த்து சாப்பிடாதீங்க!
தயிர் மற்றும் இறைச்சி
தயிர், இறைச்சி இரண்டிலுமே அதிகளவிலான புரதம் நிறைந்துள்ளது. ஆனால், இவை வித்தியாசமாக செரிமானம் அடைகிறது. இதன் கலவையானது, குறிப்பாக உணர்திறன் வாய்ந்த செரிமானம் உள்ளவர்களுக்கு குடல் தாவரங்களில் ஏற்றத்தாழ்வு, கனத்தன்மை மற்றும் நச்சுகள் உருவாவதற்கு கூட வழிவகுக்கலாம்.
தேன் மற்றும் நெய்
ஆயுர்வேதத்தின் படி, தேன் மற்றும் நெய்யை சம அளவில் கலப்பதால் உடலில் நச்சுக்கள் உருவாகலாம். இது செரிமானத்தைத் தொந்தரவு செய்கிறது. ஆனால், இதைத் தனித்தனியாகவோ அல்லது சீரற்ற விகிதாச்சாரத்திலோ உட்கொள்வது நன்மை பயக்கும்.
கீரை மற்றும் பால் பொருட்கள்
பசலைக் கீரையில் ஆக்சலேட்டுகள் உள்ளது. இது பாலில் உள்ள கால்சியம் ஊட்டச்சத்துடன் பிணைந்து அதன் உறிஞ்சுதலைத் தடுக்கிறது. எனவே பால் அல்லது சீஸ் போன்ற பால் பொருள்களுடன் இணைப்பது கால்சியத்தின் நன்மையைக் குறைக்கிறது. மேலும் சிலருக்கு சிறுநீரக கற்கள் உருவாவவும் பங்களிக்கிறது.
எனவே சிறந்த ஆரோக்கியத்தைப் பெற ஆரோக்கியமான உணவுகளாக இருப்பினும், சில உணவுகளை ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: உஷார்! பலாப்பழத்துடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டா பெரிய பிரச்சனை வருமாம்
Image Source: Freepik