உஷார்! பலாப்பழத்துடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டா பெரிய பிரச்சனை வருமாம்

What should we not eat with jackfruit: பலாப்பழம் பல்வேறு ஆரோக்கியமிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். எனினும், இதை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இதில் பலாப்பழத்தை சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாத உணவுகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
உஷார்! பலாப்பழத்துடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டா பெரிய பிரச்சனை வருமாம்


Foods Shouldn't Eat After Eating Jackfruit: உண்மையில் பலாப்பழம் ஒரு அற்புதமிக்க மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடிய சிறந்த உணவு வகையாகும். பலாப்பழத்தில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், சோடியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதன் நுகர்வு செரிமான மண்டலத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பருவகால நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

இது போன்ற எண்ணற்ற நன்மைகளைக் கொண்டிருந்தாலும், இதில் காணப்படும் ஆக்சலேட் சில பொருட்களுடன் சேர்ந்து உடலில் விஷமாக மாறுகிறது. எனவே இதை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. அதே சமயம், பலாப்பழத்தை சாப்பிட்ட பிறகும் சில பொருள்களை சாப்பிடக்கூடாது. ஏனெனில், இவ்வாறு சாப்பிடுவது மோசமான சேர்க்கைகள் காரணமாக உடலுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.

பலாப்பழத்தின் மோசமான கலவை 

பலாப்பழம் ஒரு அற்புதமான காய்கறியாகும். இதை மற்ற சில மசாலாப் பொருட்களுடன் சமைக்கும்போது, அது வாயில் நீர் ஊற வைக்கிறது. இது சுவையில் மட்டுமல்லாமல், ஆரோக்கியம் தொடர்பான ஊட்டச்சத்திலும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இதில் அதிகளவு தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் பலாப்பழம் தொடர்பான சில உணவு சேர்க்கைகளை மனதில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: பலாப்பழம் நல்லதுனு தெரியும்.. ஆனா பலாக்கொட்டை.? இது ஒரு வரப்பிரசாதம்.! நன்மைகள் இங்கே.. 

பலாப்பழத்தை சாப்பிட்ட பிறகு சில பொருட்களை சாப்பிடுவதை சுகாதார நிபுணர்கள் கண்டிப்பாக தடை செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம். ஆயுர்வேதத்தின் படி, பலாப்பழத்தை சாப்பிட்ட பிறகு சிலவற்றைத் தவிர்ப்பது அவசியமாகும். இதில் பலாப்பழத்தை சாப்பிட்ட பிறகு என்னென்ன விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் காணலாம்.

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்

பலாப்பழத்துடன் பான் சாப்பிட கூடாது

சிலர் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு இனிப்பாக வெற்றிலையை சாப்பிடுகின்றனர். உண்மையில் இது ஒரு ஆபத்தான மற்றும் நச்சு உணவு கலவையாகும். பலாப்பழம் சாப்பிட்ட பிறகு வெற்றிலையை கட்டாயம் சாப்பிடக்கூடாது. பலாப்பழத்தில் காணப்படும் ஆக்சலேட், வெற்றிலையின் கூறுகளுடன் இணைவதால் இது உடலில் நச்சு எதிர்வினையை ஏற்படுத்துகிறது. இது வயிற்றில் விஷத்தை ஏற்படுத்தலாம். எனவே பலாப்பழம் சாப்பிட்ட பிறகு வெற்றிலையை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பலாப்பழத்திற்குப் பிறகு வெண்டைக்காய் சாப்பிட கூடாது

வெண்டைக்காயை பலாப்பழத்துடனோ அல்லது பலாப்பழத்தை சாப்பிட்ட பிறகோ கட்டாயம் சாப்பிடக்கூடாது. இவை இரண்டிலும் உள்ள கொடிய கலவையானது உடலில் ஆக்சலேட்டை வினைபுரிய தூண்டுகிறது. இதன் காரணமாக தோலில் அரிப்பு மற்றும் தடிப்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே பலாப்பழம் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக வெண்டைக்காய் சாப்பிடக் கூடாது.

இந்த பதிவும் உதவலாம்: Jackfruit for Weight Loss: பலாப்பழத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை சரசரவென குறையும்- நிபுணர் டிப்ஸ்

பலாப்பழம் சாப்பிட பின் பப்பாளி சாப்பிட கூடாது

பலாப்பழம் சாப்பிட்ட உடனேயே பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், பலாப்பழத்தில் அதிகளவிலான ஆக்சலேட் உள்ளது. இதை உட்கொண்ட பிறகு பப்பாளி சாப்பிட்டால், அது உடலில் உள்ள கால்சியத்துடன் வினைபுரிகிறது. இதனால், உடலில் விஷம் உருவாகுவது போன்ற ஒரு நிலைக்கு வழிவகுக்கலாம். இது எலும்புகள் மற்றும் வயிற்றுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் அபாயம் உண்டு.

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக் கூடாது

பலாப்பழம் சாப்பிட்டிருப்பின், அதன் பிறகு நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஒன்றாக பால் மற்றும் பால் பொருட்கள் அமைகிறது. ஏனெனில், பலாப்பழத்தில் உள்ள ஆக்சலேட், பால் பொருட்களில் காணப்படும் கால்சியத்துடன் ஆபத்தான முறையில் வினைபுரிந்து வயிற்றில் விஷத்தை உருவாக்கி வயிற்று உபாதையை ஏற்படுத்தலாம். அது மட்டுமல்லாமல், உடலில் வெள்ளைப் புள்ளிகளையும் ஏற்படுத்தலாம்.

மேலும், ஆயுர்வேதத்தின்படி, பலாப்பழமும் பாலும் தீங்கு விளைவிக்கும் கலவையாகக் கருதப்படுகிறது. எனவே பல நூற்றாண்டுகளாக, பலாப்பழத்தையும் எந்த பால் பொருட்களையும் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இவை அஜீரணம் மற்றும் தோல் நோய்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது தவிர, சரும ஒவ்வாமை, தளர்வு பிரச்சனைகள் போன்றவையும் ஏற்படலாம். எனவே பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் மற்றும் பப்பாளி சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Jackfruit in Summer: கோடையில் பலாப்பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

Image Source: Freepik

Read Next

சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்

Disclaimer