சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்

Is soaked soybean good for health: அன்றாட உணவில் ஊறவைத்த சோயாபீன் சாப்பிடுவது உடலுக்குப் பல்வேறு நன்மைகளை அள்ளித் தருகிறது. இது இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொழுப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும். இதில் ஊறவைத்த சோயாபீன்ஸின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்


Health benefits of eating soaked soybeans: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சரியான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். அவ்வாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடிய உணவுகள் ஏராளம் உள்ளது. இந்த வரிசையில் பல்வேறு ஊட்டச்சத்து பண்புகள் நிறைந்த சோயாபீன்களும் அடங்கும். ஆம், உண்மையில் சோயாபீனில் பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலை ஆரோக்கியமாக இருக்க உதவுவது மட்டுமல்லாமல், பல நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்க உதவுகிறது. சோயாபீன்ஸ் பல்வேறு ஊட்டச்சத்துக்களின் சக்தியாகக் கருதப்படுகிறது.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இதில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள், லெசித்தின் போன்றவை உள்ளன. எனவே இது காசநோய் போன்ற கடுமையான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. சோயாபீனை சீரான அளவில் தொடர்ந்து உட்கொள்வது உடலுக்குப் பல நன்மைகளை அளிக்கிறது. ஆனால், சோயாபீனை உட்கொள்வதற்கான சிறந்த வழி எது தெரியுமா? அதன் படி, சோயாபீன்ஸை ஊறவைத்த பிறகு சாப்பிடுவதன் மூலம் பல அதிகபட்ச நன்மைகளைப் பெறலாம். இதில் ஊறவைத்த சோயாபீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சரியான முறை குறித்த விவரங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஸ்ட்ராங்காக இருக்க ஒவ்வொரு பெண்ணும் சாப்பிட வேண்டிய ஹெல்த்தி ஃபுட்ஸ் இங்கே

ஊறவைத்த சோயாபீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சோயாபீன் சாப்பிடுவது எடை அதிகரிப்பிற்கும், உடல் தசைகளை வளர்க்க மற்றும் வலுப்படுத்தவும் மிகவும் நன்மை பயக்கும். இது குறித்து ஆரோக்கிய சுகாதார மையத்தின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர் வி.டி. திரிபாதி அவர்கள் கூறியுள்ளதாவது,”சோயாபீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் எலும்புகளை வலுப்படுத்தவும், உடலில் உள்ள இரத்த சோகையை நீக்கவும், வயிறு மற்றும் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கவும் உதவுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

எடை இழப்பை ஆதரிக்க

இன்றைய காலகட்டத்தில், உடல் பருமன் ஒரு பெரிய மற்றும் கடுமையான பிரச்சனையாக அமைகிறது. ஏனெனில், உடல் பருமனால் உடலில் மற்ற சில நோய்களும் ஏற்படத் தொடங்குகிறது. எனவே உடல் பருமனைக் குறைப்பதற்கு தினமும் ஊறவைத்த சோயாபீன் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இதை உட்கொள்வது உடலுக்குத் தேவையான புரதத்தை வழங்குகிறது, மேலும் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்த உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு

மோசமான உணவுமுறையின் காரணமாக, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இந்த வரிசையில் சோயாபீன்ஸ் உள்ளது. இதில் சரியான அளவு புரதம் இருப்பதால், இதன் நுகர்வு உடலில் சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது. இது தவிர, ஊறவைத்த சோயாபீன் சாப்பிடுவது உடலில் இன்சுலின் எதிர்ப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

கெட்ட கொழுப்பைக் குறைக்க

மோசமான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக அதிக கொழுப்புச்சத்து பிரச்சனை ஏற்படலாம். உடலில் அதிகரித்த கெட்ட கொழுப்பைக் குறைப்பதற்கு தினமும் ஊறவைத்த சோயாபீன் சாப்பிடலாம். மேலும் சோயாபீன் விதைகளில் ஐசோஃப்ளேவோன்கள் உள்ளது. இவை உடலில் எல்டிஎல் கொழுப்பை அதாவது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: அதிகமா இருக்கும் யூரிக் ஆசிட் குறைய இதை சாப்பிடவும்..

இதய ஆரோக்கியத்திற்கு

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, தினமும் ஊறவைத்த சோயாபீன்ஸை உட்கொள்ளலாம். ஏனெனில், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் காணப்படுகின்றன. எனவே இதை உட்கொள்வது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது உடலில் சரியான இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. இது தவிர, சோயாபீனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

புரதத்தின் நல்ல ஆதாரம்

சோயாபீன் புரதத்தின் நல்ல களஞ்சியமாகும். இதில் உள்ள புரதம் உடலில் செரிமானம் ஆன பிறகு, யூரிக் அமிலத்தை உருவாக்குவதில்லை. குறிப்பாக இது சைவ உணவு உண்பவர்களுக்கான புரதத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. எனவே தினமும் ஒரு கிண்ணம் ஊறவைத்த சோயாபீன்ஸ் சாப்பிடுவது எடை அதிகரிக்கவும், தசைகளை வளர்க்கவும், வலுப்படுத்தவும் உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க

தினமும் ஒரு கப் ஊறவைத்த சோயாபீன் விதைகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதை உட்கொள்வதால் உடலில் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த உதவுகிறது.

ஒரு நாளைக்கு எவ்வளவு சோயாபீன் சாப்பிடுவது நல்லது?

அன்றாட உணவில் சோயாபீனை பல வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக தினமும் 100 கிராம் சோயாபீன் உட்கொள்வது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த 100 கிராம் சோயாபீன்ஸில் சுமார் 35 கிராம் புரதம் உள்ளது. இதை உட்கொள்வதற்கு முதலில் சோயாபீன் விதைகளை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு மறுநாள் காலையில், தண்ணீரை வடிகட்டி, சோயாபீனை சுத்தம் செய்து, முளைகள் போல சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த உணவுகளில் சிக்கனை விட அதிக புரதம் உள்ளது.!

Image Source: Freepik

Read Next

பூண்டு டீ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா.? இதன் நன்மைகள் இங்கே..

Disclaimer