People Who Should Avoid Eating Jackfruit: உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள், பழங்கள், விதைகள் என பல்வேறு வகையான உணவுகள் உதவுகின்றன. அவ்வாறே பலாப்பழம் உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதன் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளால் பலரும் இந்தப்பழத்தை விரும்பி உண்ணுகின்றனர். பலாப்பழம் ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்ட பழமாகும்.
பலாப்பழத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம், மாங்கனீஸ், ரிபோஃப்ளேவின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழத்தை உட்கொள்வது செரிமான அமைப்பு, இதயம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடு என பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: பானிபூரியைத் தொடர்ந்து ஷவர்மா எச்சரிக்கை! உண்மையில் ஷவர்மா பாதுகாப்பானதா?
யார் சாப்பிடக்கூடாது?
பலாப்பழத்தில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் இருப்பதால், இது ஒரு வலுவான ஆற்றல் மூலமாக செயல்படுகிறது. மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உணவை ஆற்றலாக மாற்றவும், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் அவசியமாகக் கருதப்படுகிறது.
இதில் அதிக கலோரிகள் இருப்பினும், இந்த பலாப்பழத்தை உட்கொள்வதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலிலிருந்து விடுபடலாம். இது போன்ற பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளை இந்தப் பழங்கள் தந்தாலும், சில உடல்நலக் கோளாறு பிரச்சனைகளைக் கொண்டவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதில் யாரெல்லாம் பலாப்பழத்தை சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.
பலாப்பழத்தை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
நீரிழிவு நோய்
பலாப்பழத்தில் நீரிழிவு எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை வெகுவாகக் குறைக்கிறது. எனினும், சர்க்கரை நோயாளிகள் இந்தப் பலாப்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு குறையலாம். இரத்த சர்க்கரை அளவு குறைகிறது எனினும், இரத்த சர்க்கரை மிகக் குறைவாக இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் பலா பழத்தை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை வெகுவாகக் குறைக்கும். இந்த வேகமான இரத்த சர்க்கரை அளவு குறைவது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
சிறுநீரக நோய்
சிறுநீரக நோயுடன் போராடுபவர்கள் கட்டாயம் பலாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், பலாப்பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனை உட்கொள்வதால், இரத்தத்தில் உள்ள பொட்டாசியத்தின் அளவு அதிகமாகலாம். இவ்வாறு பொட்டாசியம் அதிகமாவது சிறுநீரகப் பிரச்சனைகள உண்டாக்கலாம். இந்நிலையானது ஹைபர்கேமியா என அழைக்கப்படுகிறது. இந்த வகை பிரச்சனையானது பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Sneeze Holding Effects: தும்மலை அடக்கி வைப்பீங்களா? இது தெரிஞ்சா இனி அப்படி செய்யவே மாட்டீங்க!
ஒவ்வாமை
இன்று பலரும் அலர்ஜியால் அடிக்கடி பாதிப்படைகின்றனர். அவர்கள் கட்டாயம் பலா பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தாவரங்களின் மகரந்தத்தால் ஒவ்வாமை, மரப்பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் ஒவ்வாமை அறிகுறிகளைக் கண்டால், சுவாச மண்டலம் பாதிக்கப்படலாம். மேலும் சுவாசக்கோளாறு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற சுவாச பிரச்சனை உள்ளவர்களும் பலாப்பழத்திலிருந்து விலகி இருப்பது நல்லது.
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் எந்தவொரு அறுவை சிகிச்சைக்கும் முன்னும் அல்லது பின்னும் பலா பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இவர்களுக்கு வயிற்று பிரச்சனை அதிகரிக்கலாம். மேலும் இதனால் உணவு செரிமானம் அடையவும் சிரமம் ஏற்படலாம். இந்நிலையைத் தவிர்க்க, அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பே பலாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள்
பலாப்பழத்தில் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கலாம். இதனை கருவுற்ற பெண்கள் உட்கொள்வதால், தாய் மற்றும் சேய் இருவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக அமைகிறது. இது தவிர, கருவுற்ற பெண்கள் பலாப்பழத்தை உட்கொள்வது கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கலாம். இது தவிர, புதிய தாய்மார்கள் அல்லது பாலூட்டும் பெண்களும் பலாப்பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இதில் குறிப்பிட்டுள்ளவர்கள் பலா பழம் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இது தவிர, வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு பலாப்பழம் சாப்பிடுவது நல்லது. மேலும் யாராக இருந்தாலும் பலாப்பழத்தைக் குறைவான அளவில் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Effects Of Holding Urine: சிறுநீரை ரொம்ப நேரம் வைத்திருப்பவர்களா நீங்க? அப்ப இத கவனிங்க
Image Source: Freepik